Entertainment26 July 2026

சிறந்த விடயங்கள் நேரத்தைத் தேர்ந்தெடுக்கும் - முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்த ஜெய்!

தமிழக முதலமைச்சரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்யை, நடிகர் ஜெய் அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

விஜய்யின் 'ஜன நாயகன்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியானதையடுத்து இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதுடன், இதன்போது முதலமைச்சருக்கு நடிகர் ஜெய் செடி ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார்.

குறித்த சந்திப்பு தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள நடிகர் ஜெய், "நல்ல விடயங்கள் நடக்க நேரம் எடுக்கும்... சிறந்த விடயங்கள் தங்களின் நேரத்தைத் தாங்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளும்..." என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவாக நடிகர் ஜெய் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related recommendation
Hiru TV News | Programmes