Entertainment28 July 2026

நடிகர் ராம்சரணுக்கு வெற்றிகரமாக முடிந்தது அறுவை சிகிச்சை!

தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திரமான ராம்சரண், ‘பெத்தி’ திரைப்படத்தின் படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்தபோது, மல்யுத்த சண்டைக் காட்சி ஒன்றில் பங்கேற்ற வேளையில் அவரது இடதுகை மணிக்கட்டில் பலத்த காயம் ஏற்பட்டது.

படப்பிடிப்புப் பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட எம்.ஆர்.ஐ. மற்றும் எக்ஸ்ரே பரிசோதனைகளில், அவரது இடதுகை மணிக்கட்டில் தசைநார் கிழிவு மற்றும் லேசான எலும்பு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

தசைநார் முழுமையாகக் கிழிந்துள்ளதால் உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் பரிந்துரைத்தனர்.

இதனையடுத்து கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் ராம்சரணுக்கு மணிக்கட்டு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நிறைவடைந்தது.

அறுவை சிகிச்சைக்குப் பிறகு ராம்சரண் சில வாரங்கள் முழுமையான ஓய்வில் இருக்க வேண்டும் என்றும், மணிக்கட்டு இயல்புநிலைக்குத் திரும்ப 4 முதல் 6 வாரங்கள் வரை சிகிச்சை தேவைப்படலாம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் அவர் மேலும் சில நாட்கள் மருத்துவமனையில் தங்கியிருந்து ஓய்வெடுப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Related recommendation
பிரம்ம முகூர்த்தத்தில் வெளியாகிறது 'ராமாயணா' படத்தின் ட்ரெயிலர்    ரன்பீர் கபூர், சாய் பல்லவி மற்றும் யஷ் நடிப்பில் இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகியுள்ள பிரம்மாண்ட திரைப்படமான 'ராமாயணா' படத்தின் ட்ரெயிலர்  குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.  சுமார் ரூ.4000 கோடி பொருட்செலவில் இரண்டு பாகங்களாக உருவாகும் இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் ஹான்ஸ் ஜிம்மர் இணைந்து இசையமைக்கின்றனர்.   உலகளாவிய ரசிகர்களைச் சென்றடையும் வகையில் இந்தப் படத்தை சோனி நிறுவனம் வெளியிடவுள்ளது.  ஜூலை 24ஆம் திகதி வெளியாவதாகத் திட்டமிடப்பட்டிருந்த ட்ரெயிலர்  தள்ளிவைக்கப்பட்ட நிலையில், தற்போது நாளை(30)  அதிகாலை 4:15 மணிக்கு பிரம்ம முகூர்த்தத்தில் வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.  படத்தின் பூஜை முதல் ஒவ்வொரு நிகழ்வையும் நல்ல நேரம் பார்த்துத் தொடங்கி வரும் படக்குழு, தற்போது ட்ரெயிலரையும் பிரம்ம முகூர்த்தத்தில் வெளியிடவுள்ளது.  ஹிந்தியில் சாய் பல்லவி நடிப்பில் வெளியான முதல் படமான 'ஏக் தீன்' எதிர்பார்த்த வரவேற்பைப் பெறாத நிலையில், இந்தப் படம் தனக்கு மிகப்பெரிய திரை அடையாளத்தையும் வரவேற்பையும்  உருவாக்கித் தரும் என்ற பெரும் எதிர்பார்ப்பில் அவர் உள்ளார்.  இந்த படத்தின் முதல் பாகம் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வரவுள்ளது.

ரன்பீர் கபூர், சாய் பல்லவி மற்றும் யஷ் நடிப்பில் இயக்குநர்...
Read more
Hiru TV News | Programmes