தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான அஜித் குமாரின் கார் பந்தய (Motorsport) பயணத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள 'Gladiators – In Pursuit of Challenges'என்ற ஆவணப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் ஆகியன அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன.
இந்த ஆவணப்படத்தை அஜித் குமார் ஸ்போர்ட்ஸ் சர்வீசஸ் எல்.எல்.சி (Ajith Kumar Sports Services LLC) நிறுவனம் தயாரித்துள்ளது.
இதேவேளை இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கியுள்ள இந்த ஆவணப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
சுமார் 90 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த ஆவணப் படம், நடிகர் அஜித்குமாரின் சர்வதேச கார் பந்தயப் பயணம், அவர் எதிர்கொண்ட சவால்கள், தீவிர பயிற்சி முறைகள் மற்றும் 'அஜித் குமார் ரேசிங்' அணியின் உலகளாவிய போட்டிகள் ஆகியவற்றைத் துல்லியமாகக் காட்சிப்படுத்தியுள்ளது.
ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த ஆவணப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Latest News
சட்டவிரோத இணையவழி சூதாட்ட தளங்களை முடக்க உத்தரவு: தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களுக்கு TRCSL அறிவுறுத்தல்
Local
04 August 2026
செங்கடலில் தாக்குதலுக்கு இலக்கான இந்தியக் கப்பல் மூழ்கியது: 13 இந்தியர்கள் உட்பட 14 பணியாளர்கள் மீட்பு
Local
04 August 2026
காத்தான்குடி பள்ளிவாசல் பேரவலம்: மன்னிக்கப்பட்டாலும் மறக்கப்படக்கூடாது - எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்
Local
04 August 2026
தெஹிவளையில் துப்பாக்கிச் சூட்டு முயற்சி முறியடிப்பு
Local
04 August 2026
மஹர சிறைச்சாலை சம்பவம் தொடர்பில் நீதி அமைச்சர் எச்சரிக்கை!
Local
04 August 2026
ரோலெக்ஸ் திரைப்படம் எப்போது? - நடிகர் சூர்யா அதிரடி பதில்
Local
04 August 2026
மசகு எண்ணெய்யின் விலையில் வீழ்ச்சி
Local
04 August 2026
உதயநிதி கைது நடவடிக்கை மக்களாட்சிக்கு எதிரானது: சீமான் சாடல்
Local
04 August 2026
கிரிகரி குளத்தின் வான் கதவு திறப்பு: படகு சவாரிக்கும் தற்காலிகத் தடை!
Local
04 August 2026
உலக சந்தையில் அதிரடியாக குறையப்போகும் எரிபொருள் விலை?
Local
04 August 2026