தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான அஜித் குமாரின் கார் பந்தய (Motorsport) பயணத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள 'Gladiators – In Pursuit of Challenges'என்ற ஆவணப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் ஆகியன அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன.
இந்த ஆவணப்படத்தை அஜித் குமார் ஸ்போர்ட்ஸ் சர்வீசஸ் எல்.எல்.சி (Ajith Kumar Sports Services LLC) நிறுவனம் தயாரித்துள்ளது.
இதேவேளை இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கியுள்ள இந்த ஆவணப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
சுமார் 90 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த ஆவணப் படம், நடிகர் அஜித்குமாரின் சர்வதேச கார் பந்தயப் பயணம், அவர் எதிர்கொண்ட சவால்கள், தீவிர பயிற்சி முறைகள் மற்றும் 'அஜித் குமார் ரேசிங்' அணியின் உலகளாவிய போட்டிகள் ஆகியவற்றைத் துல்லியமாகக் காட்சிப்படுத்தியுள்ளது.
ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த ஆவணப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Latest News
ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட அனைத்து பாடசாலைகளுக்கும் நாளையும் விடுமுறை
Local
04 August 2026
இலங்கையின் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை: இந்தியாவின் மெலத்தியன் மருந்து கையளிப்பு!
Local
04 August 2026
"கருத்துக்கு கருத்தால் பதிலளியுங்கள்" - உதயநிதி கைது குறித்து பிரேமலதா விஜயகாந்த் கண்டனம்!
Local
04 August 2026
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடித்தால் சர்வாதிகார ஆட்சிக்கு வழிவகுக்கலாம் - ரஜீவ் அமரசூரிய
Local
04 August 2026
இளம் வயதிலேயே நிரந்தர கருத்தடையைத் தெரிவுசெய்யும் ஆண்கள் - ஆய்வில் அதிர்ச்சி தகவல்
Local
04 August 2026
காவல்துறை பரிசோதகர் ரூ. 5 லட்சம் கையூட்டல் கொடுக்க முயன்றவர் காவல் நிலையத்தினுள்ளேயே கைது!
Local
04 August 2026
மெல்சிரிபுர வீதி விபத்தில் படுகாயமடைந்த 'ரந்தெனியா பண்டார' யானை உயிரிழப்பு!
Local
04 August 2026
சிறைச்சாலை நெருக்கடிக்குத் தீர்வாக வீட்டுக்காவல்: புதிய சட்ட மூலத்தைத் தயாரிக்கும் பணிகளை விரைவுபடுத்த அமைச்சரவை அனுமதி!
Local
04 August 2026
வசூலில் புதிய சாதனை படைத்த ‘ஸ்பைடர் மேன் பிராண்ட் நியூ டே’
Local
04 August 2026
சீரற்ற வானிலை காரணமாக மூடப்பட்ட கண்டி, நுவரெலிய மாவட்டத்தில் உள்ள பாடசாலைகள் நாளை மீண்டும் திறப்பு
Local
04 August 2026