நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக புதிய திரைப்படத்தில் நடித்துள்ளமை குறித்து நடிகை மமிதா பைஜு நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.
மலையாளத்தில் வெளியான "பிரேமலு" திரைப்படம் மூலம் பிரபலமான நடிகை மமிதா பைஜு, தற்போது தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வளர்ந்து வருகிறார்.
நடிகர் விஜய்யுடன் இணைந்து நடித்த "ஜனநாயகன்" திரைப்படம் அண்மையில் வெளியான நிலையில், அடுத்ததாக நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக அவர் நடித்துள்ள "விஸ்வநாத் அண்ட் சன்ஸ்" திரைப்படம் ஆகஸ்ட் 14ஆம் திகதி வெளியாகவுள்ளது.
தற்போது இந்த திரைப்படத்தின் விளம்பரப் பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், இதன் சிறப்பு நிகழ்ச்சி ஒன்று அண்மையில் கொச்சியில் நடைபெற்றது.
அந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய நடிகை மமிதா பைஜு,
கடந்த 2015ஆம் ஆண்டு நடிகர் சூர்யா கொச்சிக்கு ஒரு நிகழ்ச்சிக்காக வருகை தந்திருந்தார்.
அப்போது நான் எட்டாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தேன். எப்படியாவது அவரை நேரில் சந்தித்துவிட வேண்டும் என விரும்பினேன். இருப்பினும், சிறுவயது மாணவி என்பதாலும் கோட்டயத்தில் இருந்து கொச்சிக்கு பயணம் செய்வது சிரமம் என்பதாலும் எனது பெற்றோர் அதற்கு அனுமதிக்கவில்லை.
ஆனால், எனது சகோதரர் கொச்சி சென்று அந்நிகழ்வில் பங்கேற்றதுடன், நடிகர் சூர்யாவுடன் நிழற்படமும் எடுத்துக்கொண்டார். அந்தப் நிழற்படத்தைப் பார்த்தபோது எனக்கு மிகுந்த மனவருத்தம் ஏற்பட்டது.
ஆனால், காலம் இன்று எவ்வளவு மாறிவிட்டது! அன்று நேரில் பார்ப்பதற்குக்கூட அனுமதி கிடைக்காத நிலை மாறி, இன்று அவரது திரைப்படத்திலேயே கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்துள்ளமை கடவுளின் ஆசீர்வாதமே எனத் தெரிவித்தார்.

Latest News
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு : அரசுப் பணி ஆணை இரத்துக்கு எதிர்ப்பு - உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!
Local
14 August 2026
இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவதற்கு சிங்கப்பூர் பெண்களை எதிர்கொள்ளும் இலங்கை பெண்கள்!
Local
14 August 2026
கண்டியில் நான்கு வயது சிறுமியை விட்டுச் சென்ற பெண் - காவல்துறை தீவிர தேடுதல்!
Local
14 August 2026
நாட்டின் பல பகுதிகளில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும்
Local
14 August 2026
வெளிநாட்டு அரிய வகை குரங்கு விவகாரம்: நடிகர் விக்ரமிடம் ஆவணங்களை கோரியது வனத்துறை!
Local
14 August 2026
ஸ்பைடர் வுமன் கைது செய்யப்பட்டார்!
Local
14 August 2026
பாலஸ்தீனத்தில் அத்துமீறிய குடியேற்றத்தில் தொடர்ந்தும் ஈடுபடும் இஸ்ரேல்!
Local
14 August 2026
நீதித்துறையின் சுதந்திரத்தில் அரசாங்கம் எவ்வித ஆபத்தையும் எடுக்கக்கூடாது : ரஜீவ் அமரசூரிய சுட்டிக்காட்டு!
Local
14 August 2026
சவுதி இளவரசர் - அமெரிக்க CENTCOM தளபதி சந்திப்பு: பிராந்திய பதற்றத்தை தணிக்கை செய்வது குறித்து ஆலோசனை!
Local
14 August 2026
ஓமான் அருகே எண்ணெய் கசிவு: கெஷ்ம் தீவு கடலோரத்தில் மாசுபாடு என ஈரான் தகவல்!
Local
14 August 2026