விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் ‘சிக்மா’ (Sigma) திரைப்படத்திற்கு நடிகர் அஜித் குமார் ஆதரவு தெரிவித்ததாக பத்திரிகையாளர் வி.கே. சுந்தர் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசிய அவர்,
‘சிக்மா’ படத்தின் பி.ஆர்.ஓ பணிக்காக ஜேசன் சஞ்சய், அஜித்தின் முகாமையாளர் சுரேஷ் சந்திராவை அணுகியதாகக் கூறினார். இதுகுறித்து சுரேஷ் சந்திரா அஜித்திடம் கேட்டபோது, “தாராளமாக வேலை செய்யுங்கள். இதில் என்ன இருக்கிறது?” என அஜித் கூறியதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், சுரேஷ் சந்திரா மூலம் ஜேசன் சஞ்சயை தொலைபேசியில் தொடர்புகொண்ட அஜித், “சினிமாவில் உனக்கு என்ன உதவி வேண்டுமானாலும் தயங்காமல் கேள், நான் உன்னுடன் இருக்கிறேன்” எனக் கூறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
“தன் நண்பரின் மகனை தனது மகனாகவே அஜித் பார்க்கிறார்” என சுரேஷ் சந்திரா தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
விஜய்–அஜித் ரசிகர்கள் மத்தியில் நீண்ட காலமாகப் போட்டி நிலவி வந்த நிலையில், விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சயின் திரையுலகப் பயணத்திற்கு அஜித் ஆதரவு அளித்ததாக வெளியாகியுள்ள இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்றுள்ளது.
Latest News
இலங்கை - இந்திய அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டி: நாணயசுழற்சியில் இந்திய அணி வெற்றி
Local
15 August 2026
காலி மைதானத்தில் தேசியக் கொடியேற்றிய இந்திய கிரிக்கெட் அணி
Local
15 August 2026
சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் முதலமைச்சர் விஜய் தேசியக் கொடி ஏற்றினார்!
Local
15 August 2026
இலங்கை – இந்தியா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி இன்று
Local
15 August 2026
பேருந்து நிறுத்தங்களில் தனியார் வாகனங்களை நிறுத்தத் தடை: காவல்துறை அதிரடி உத்தரவு!
Local
15 August 2026
விஜய் தலைமையிலான சுதந்திர தின விழாவில் முதல் வரிசையில் வந்து அமர்ந்த நடிகை திரிஷா
Local
15 August 2026
வழமைக்குத் திரும்பியது ஹட்டன் - கொழும்பு பிரதான வீதிப் போக்குவரத்து
Local
15 August 2026
சிறைச்சாலை அதிகாரிகள் குறித்த தகவல்களைத் திரட்டிய நபர் கைது
Local
15 August 2026
மத்திய கிழக்கு பதற்றம்: அமெரிக்காவின் கடும் எச்சரிக்கை மற்றும் ஹிஸ்புல்லாவின் எதிர்ப்பு
Local
15 August 2026
பிரான்சில் 15 வயதுக்குட்பட்டவர்களுக்கான சமூக ஊடகத் தடைக்கு உயர் நீதிமன்றம் மறுப்பு
Local
15 August 2026