Sports12 June 2026

மகளிர் டி20 உலகக் கிண்ணம்: இங்கிலாந்துக்கு எதிரான ஆரம்பப் போட்டிக்கான இலங்கை அணி அறிவிப்பு

இங்கிலாந்தில் ஆரம்பமாகியுள்ள ஐசிசி மகளிர் டி20 உலகக் கிண்ணத் தொடரின் முதலாவது போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணியை எதிர் கொள்ளும் இலங்கை அணியின் 11 வீராங்கனைகளின் விபரங்கள் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பர்மிங்ஹாமின் எஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில், சமரி அத்தபத்து தலைமையிலான இலங்கை மகளிர் அணியில்,

சமரி அத்தபத்து (அணித்தலைவர்)

விஷ்மி குணரத்ன

இமேஷா துலானி

ஹர்ஷிதா சமரவிக்ரம

ஹன்சிமா கருணாரத்ன

கவிஷா தில்ஹாரி

நிலக்ஷிகா சில்வா

கௌஷினி நுத்தியங்கனா

சுகந்திகா தாஸநாயக்க

மல்கி மதாரா

மிதாலி அயோத்யா

ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

சர்வதேச கிரிக்கெட் அரங்கில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இத்தொடரின் தொடக்க ஆட்டத்திலேயே, சவாலான இங்கிலாந்து அணியை எதிர்கொள்ள இலங்கை மகளிர் அணி முழு வீச்சில் தயாராகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related recommendation
Hiru TV News | Programmes