Sports23 June 2026

ரிஷப் பண்ட் வேதன குறைப்புடன் டெல்லி அணியில் மீண்டும் இணைந்தார்; குல்தீப் யாதவ் லக்னோவுக்கும் மாற்றம்

இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரில், லக்னோ சுப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணியின் முன்னாள் தலைவர் ரிஷப் பண்ட் மீண்டும் டெல்லி கெப்பிடல்ஸ் (DC) அணிக்குத் திரும்பியுள்ளதாக ஐபிஎல் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.

அவருக்குப் பதிலாக டெல்லி அணியின் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் லக்னோ அணியில் இணைந்துள்ளார்.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 27 கோடி இந்திய ரூபாவுக்கு லக்னோ அணியால் வாங்கப்பட்ட ரிஷப் பண்ட், அங்கு எதிர்பார்த்த அளவு ஓட்டங்களை குவிக்க தடுமாறினார்.

தற்போது கணிசமான வேதன குறைப்பை ஏற்றுக்கொண்டு, ஒவ்வொரு பருவத்துக்கு 15 கோடி ரூபாய் என்ற ஒப்பந்தத்தில் டெல்லி அணியில் மீண்டும் இணைகிறார்.

அதேநேரம் டெல்லி அணிக்காக 65 போட்டிகளில் 72 விக்கெட்டுகளை வீழ்த்தி சிறந்த திறனுடன் இருக்கும் குல்தீப் யாதவ், தற்போது 13.50 கோடி இந்திய ரூபாய் வருடாந்த வேதன ஒப்பந்தத்தில் லக்னோ சுப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் இணைகிறார்.

இது டெல்லியில் அவர் பெற்ற வேதனத்தை விட சுமார் 13.25 கோடி ரூபாய் அதிகமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes