இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவரும், உலகின் தலைசிறந்த சகலதுறை வீரர்களில் ஒருவருமான பென் ஸ்டோக்ஸ், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
நியூசிலாந்து அணிக்கு எதிராக தற்போது நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியுடன் தனது 15 ஆண்டுகால சர்வதேச கிரிக்கெட் பயணத்தை முடித்துக்கொள்வதாக அவர் அறிவித்துள்ளார்.
நோட்டிங்ஹாமில் உள்ள டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெற்று வரும் போட்டியின் நான்காம் நாள் ஆட்டத்துக்கு முன்னதாக, இங்கிலாந்து அணி வீரர்களிடம் தனது ஓய்வு முடிவை ஸ்டோக்ஸ் பகிர்ந்துகொண்டார்.
அந்த தருணத்தில் மிகவும் உணர்ச்சிகரமாகக் காணப்பட்ட அவர், இந்த அணிக்காகவும், சக வீரர்களுக்காகவும் தான் இதுவரை பலமுறை களத்தில் போராடியிருப்பதாகவும், இது தனது கடைசிப் பயணமாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.
எஞ்சியுள்ள இரண்டு நாட்களில் இந்த அணி தனது முழு திறமையையும் வெளிப்படுத்த வேண்டும் என்பதே தனது ஒரே வேண்டுகோள் என்றும் அவர் உருக்கமாகக் குறிப்பிட்டார்.
35 வயதான ஸ்டோக்ஸ், சமீபத்தில் லண்டன் இரவு விடுதி ஒன்றில் இடம்பெற்ற சம்பவம் ஒன்றில் சிக்கியதால், இங்கிலாந்தின் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்கவில்லை.
அந்தச் சம்பவத்தில் இங்கிலாந்து அணியின் பாதுகாப்பு அதிகாரியும் சம்பந்தப்பட்டிருந்ததனால், இங்கிலாந்து கிரிக்கெட் சபையின் ஆதரவு குறித்த கேள்விகள் எழுந்திருந்தன. இவ்வாறான சர்ச்சைகளுக்கு மத்தியில் இந்த ஓய்வு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பென் ஸ்டோக்ஸ் 2019 உலகக்கிண்ண இறுதிப் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக அவரது அதிரடியான 84 ஓட்டங்கள் இங்கிலாந்து முதன்முறையாக உலகக்கிண்ணத்தை வெல்லக் காரணமாக அமைந்தது.
அதேபோல 2019 ஏஷஸ் தொடரில் 135 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்து, இங்கிலாந்தை வெற்றி பெறச் செய்தமை இன்றும் கிரிக்கெட் ரசிகர்களால் பேசப்படும் வரலாற்றுச் தருணமாகும்.
தனது டெஸ்ட் வாழ்க்கையில் 7,243 ஓட்டங்களையும், 251 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ள பென் ஸ்டோக்ஸ், கேரி சோபர்ஸ் மற்றும் ஜெக் கெல்லிஸ் ஆகிய ஜாம்பவான்களுக்கு இணையாக டெஸ்ட் கிரிக்கெட்டில் 7,000 ஓட்டங்கள் மற்றும் 250 விக்கெட்டுகளைக் கடந்த வீரர்களில் ஒருவராவார்.
இந்தநிலையில் பென் ஸ்டோக்ஸின் ஓய்வின் பின்னர் ஹரி புரூக் அணியின் அடுத்த தலைவராக நியமிக்கப்படலாம் எனவும் ஓகஸ்ட் மாதம் பாகிஸ்தானுக்கு எதிராகத் தொடங்கவுள்ள தொடரிலிருந்து இங்கிலாந்து அணி புதிய தலைவருடன் களமிறங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Latest News
செம்மணி கொடூரங்களுக்கு நீதி கோரி 'உரிமைப்பந்தம்'மக்கள் எழுச்சி!
Local
28 June 2026
வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களுக்கு வாக்குரிமை: அரசாங்கம் தீவிர பரிசீலனை
Local
28 June 2026
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் பென் ஸ்டோக்ஸ்!
Local
28 June 2026
பஹ்ரைன் மற்றும் குவைத் மீதான தாக்குதல்களுக்கு லெபனான் ஜனாதிபதி கண்டனம்
Local
28 June 2026
கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தில் போதைப்பொருள் பறிமுதல்; பெண் உட்பட ஐவர் கைது
Local
28 June 2026
யூடியூப் (YouTube) காணொளிகளைப் பார்த்து வீட்டிலேயே பிரசவம் பார்க்க முயன்றதால் ஏற்பட்ட உயிரிழப்பு
Local
28 June 2026
பிரான்சில் வானூர்தி விபத்துக்குள்ளானதில் 11 பேர் உயிரிழப்பு!
Local
28 June 2026
கொழும்பு மாநகர சபை விசாரணை ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீடிப்பு
Local
28 June 2026
அமைச்சர் வசந்த சமரசிங்கவின் அறிவிப்புக்கு கடும் எதிர்ப்பு
Local
28 June 2026
டெங்கு நுளம்புகளை கட்டுப்படுத்த புகை விசிறல் பயனுள்ள தீர்வு அல்ல -நிபுணர்கள் தெரிவிப்பு!
Local
28 June 2026