Sports05 July 2026

சாதனைப் பட்டியலில் இணைந்த அக்சர் படேல்

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்த போதிலும், இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அக்சர் படேல் சர்வதேச டி20 போட்டிகளில் வரலாற்று சாதனை ஒன்றைப் படைத்துள்ளார்.

மென்செஸ்டரில் நடைபெற்ற இந்த போட்டியில் 100 சர்வதேச டி20 விக்கெட்டுகளை வீழ்த்திய முதலாவது இந்திய சுழற்பந்து வீச்சாளர் என்ற பெருமையை அக்சர் படேல் தன்வசப்படுத்தினார்.

அத்துடன், இந்த மைல்கல்லை எட்டும் ஒட்டுமொத்த நான்காவது இந்திய பந்துவீச்சாளராகவும் அவர் இணைந்துள்ளார்.

குறித்த பட்டியலில் அர்ஷ்தீப் சிங் (134), ஜஸ்பிரித் பும்ரா (121), ஹர்திக் பாண்டியா (114) ஆகியோர் முதல் மூன்று இடங்களில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related recommendation
Hiru TV News | Programmes