Sports05 July 2026

கால்பந்து தொடர்: அதிக சனத்தொகையை கொண்ட நாடுகள் ஏன் பங்கேற்க முடியவில்லை?

பங்களாதேஷ், இந்தியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளின் சொந்த அணிகள் உலகக் கிண்ணத் தொடருக்குத் தகுதி பெறாததால், அங்குள்ள லட்சக்கணக்கான ரசிகர்கள் அர்ஜென்டினா போன்ற பிற நாடுகளை ஆதரித்துக் கொண்டாடுகின்றனர்.

உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட 10 நாடுகளில் அமெரிக்கா, பிரேசில் ஆகிய இரண்டு நாடுகள் மட்டுமே தற்போதைய தொடரில் விளையாடுகின்றன.

சீனா, இந்தோனேசியா தலா ஒரு முறையும், இந்தியா, பங்களாதேஷ், எத்தியோப்பியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் இதுவரை ஒருமுறைகூட விளையாடியதும் இல்லை ,இந்தியா 1950-ல் தகுதி பெற்றும் பின்னர் பின்வாங்கியது.

இந்தநிலையில் கால்பந்துக் கிண்ணத்தை வென்ற 8 நாடுகளில் 7 நாடுகள் பெரிய மக்கள் தொகை கொண்டவை
எனவே மக்கள் தொகை மட்டுமே வெற்றியைத் தீர்மானிப்பதில்லை என்று ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு நாட்டின் பொருளாதாரம் செழிக்க மனித வளத்துடன் மூலதனமும் உள்கட்டமைப்பும் தேவைப்படுவது போல, கால்பந்து விளையாட்டிலும் வெற்றி பெற மக்கள் தொகையுடன் சிறந்த பயிற்சி வசதிகளும், திறமைகளைக் கண்டறியும் உள்கட்டமைப்பும் அவசியம் என்று பொருளாதார நிபுணர் ஸ்டீபன் சிமான்ஸ்கி குறிப்பிடுகிறார்.
Related recommendation
Hiru TV News | Programmes