கடந்த சில மாதங்களாகப் பல ஏற்றத் தாழ்வுகளை சந்தித்தாலும், ஸிம்பாப்வே அணிக்கு எதிரான இருபதுக்கு 20 தொடரில் விளையாடத் தன்னம்பிக்கை குறையவில்லை என இந்தியாவின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி தெரிவித்துள்ளார்.
இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் மூலம் கவனம் ஈர்த்த 15 வயதான வைபவ் சூர்யவன்ஷி, இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி, இந்தியாவின் மிக இளைய சர்வதேச கிரிக்கெட் வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.
பெப்ரவரி மாதம் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக 80 பந்துகளில் 175 ஓட்டங்களைக் குவித்து இந்தியா கிண்ணத்தை வெல்லக் காரணமான அதே ஹராரே மைதானத்தில் மீண்டும் விளையாடுவது தனக்கு மிகவும் சிறப்பான உணர்வைத் தருவதாக அவர் கூறியுள்ளார்.
பயிற்றுவிப்பாளர் மற்றும் அணியினரின் ஆதரவுடன் தனது வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்தத் தயாராக இருப்பதாகவும், அணியின் வெற்றிக்குத் தன்னால் இயன்ற பங்களிப்பை வழங்குவதே இலக்கு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Latest News
அதிவிசேஷ சாராயத்தின் விலை அதிகரிப்பு!
Local
23 July 2026
மத்திய கிழக்கு பதற்றம் எதிரொலி : உலக சந்தையில் மசகு எண்ணெய், இயற்கை எரிவாயு விலை மீண்டும் உயர்வு
Local
23 July 2026
செங்கடலில் அதிகரிக்கும் பதற்றம் : சவூதி எண்ணெய் கப்பல்கள் மீது ஹூதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்
Local
23 July 2026
இரத்த பரிசோதனைக்கு அதிக கட்டணம் : 30 இலட்சம் ரூபாய் அபராதம் - யாழில் சம்பவம்
Local
23 July 2026
'ஜனநாயகன்' திரைப்படம் வெளியீடு: உலகம் முழுவதும் ரசிகர்கள் கோலாகலக் கொண்டாட்டம்!
Local
23 July 2026
பிற்பகல் 2 மணிக்கு பின் வானிலையில் மாற்றம் : வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவுறுத்தல்!
Local
23 July 2026
எதிர்க்கட்சி முற்றிலும் அகற்றப்படும் என கூறுவது ஜனநாயக விரோத கூற்று - நாமல் ராஜபக்ச எச்சரிக்கை.
Local
23 July 2026
அரசியல் கைதிகள் என்று எவரும் சிறைச்சாலைகளில் இல்லை - நீதியமைச்சர் விளக்கம்!
Local
23 July 2026
இலங்கையின் நகர்ப்புறப் போக்குவரத்துச் சேவையை நவீனமயமாக்கத் திட்டம் : 2029 க்குள் 500 மெட்ரோ பேருந்துகள்
Local
23 July 2026
காவல்துறை அதிகாரிகள் போன்று ஆள்மாறாட்டம் செய்து சமூக வலைத்தளங்கள் ஊடாக நடத்தும் நிதி மோசடிகள் குறித்து எச்சரிக்கை!
Local
23 July 2026