Sports22 July 2026

வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்தத் தயார் - வைபவ் சூர்யவன்ஷி

கடந்த சில மாதங்களாகப் பல ஏற்றத் தாழ்வுகளை சந்தித்தாலும், ஸிம்பாப்வே அணிக்கு எதிரான இருபதுக்கு 20 தொடரில் விளையாடத் தன்னம்பிக்கை குறையவில்லை என இந்தியாவின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி தெரிவித்துள்ளார்.

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் மூலம் கவனம் ஈர்த்த 15 வயதான வைபவ் சூர்யவன்ஷி, இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி, இந்தியாவின் மிக இளைய சர்வதேச கிரிக்கெட் வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.

பெப்ரவரி மாதம் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக 80 பந்துகளில் 175 ஓட்டங்களைக் குவித்து இந்தியா கிண்ணத்தை வெல்லக் காரணமான அதே ஹராரே மைதானத்தில் மீண்டும் விளையாடுவது தனக்கு மிகவும் சிறப்பான உணர்வைத் தருவதாக அவர் கூறியுள்ளார்.

பயிற்றுவிப்பாளர் மற்றும் அணியினரின் ஆதரவுடன் தனது வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்தத் தயாராக இருப்பதாகவும், அணியின் வெற்றிக்குத் தன்னால் இயன்ற பங்களிப்பை வழங்குவதே இலக்கு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes