இலங்கைக்கு எதிராக நடைபெறவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலிருந்து இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆகஸ்ட் 15 ஆம் திகதி காலி மைதானத்தில் தொடங்கவுள்ள இந்த டெஸ்ட் தொடருக்கு, பும்ரா உடற்தகுதி பெறுவார் என்ற அடிப்படையில் அணிக்குத் தேர்வாகியிருந்தார்.
எனினும், பெங்களூருவில் மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையில், பும்ராவின் இடது முழங்காலில் தொடர்ந்து அசௌகரியம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, அவரை அவசரப்பட்டு மீண்டும் களமிறக்குவது பாதுகாப்பானது அல்ல என்பதால், முழுமையாகக் குணமடையும் வரை ஓய்வெடுக்க இந்திய கிரிக்கெட் சபையின் மருத்துவக் குழு அறிவுறுத்தியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சுப்மன் கில் தலைமையிலான இந்திய டெஸ்ட் அணியில் இடம்பெற்றிருந்த பும்ரா விலகியுள்ளதைத் தொடர்ந்து, அஜிட் அகர்கர் தலைமையிலான தேர்வுக்குழு விரைவிலேயே அவருக்குப் பதிலாக மாற்று வீரரை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Latest News
மகாவலி கங்கையில் வெள்ள அபாயம் – தாழ்வான பகுதிகளுக்கு 24 மணித்தியாலங்களுக்கு எச்சரிக்கை
Local
03 August 2026
டெங்கு காய்ச்சலால் தாயும் சேயும் உயிரிழப்பு - பிரசவத்துக்கு இரு தினங்களே இருந்த நிலையில் சோகம்!
Local
02 August 2026
கடுமையான கடல் கொந்தளிப்பு மற்றும் பலத்த காற்று தொடர்பில் எச்சரிக்கை!
Local
02 August 2026
கிரேக்கத்தை உலுக்கும் கடும் வெப்ப அலை
Local
02 August 2026
ஃபிஃபா தலைவரின் தீர்மானத்தை வரவேற்கும் இலங்கை கால்பந்து சம்மேளனம்!
Local
02 August 2026
சிறைச்சாலை மோதல்களின் பின்னணியில் வெளிக்கரங்கள்? - தீவிர விசாரணைகளுக்கு நீதி அமைச்சர் உத்தரவு!
Local
02 August 2026
காவல் நிலையத்தில் ரூ. 2.9 இலட்சம் நிதி மோசடி: பெண் சார்ஜண்ட் கைது!
Local
02 August 2026
சீரற்ற வானிலையால் 5 கடற்றொழிலாளர்கள் பலி; ஒருவரை காணவில்லை!
Local
02 August 2026
131 டெஸ்ட் போட்டிகள், 184 இன்னிங்ஸ்கள்: ஒருமுறை கூட ரன்-அவுட் ஆகாத கபில் தேவின் அசாத்திய சாதனை!
Local
02 August 2026
பாகிஸ்தானை வீழ்த்தி டி20 தொடரைக் கைப்பற்றிய இலங்கை மகளிர் அணி!
Local
02 August 2026