இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் தேவ்தத் படிக்கல் சதம் அடித்துள்ளார்.
இந்த நிலையில், சாய் சுதர்சனை நீண்ட காலத்திற்கு மூன்றாவது இடத்தில் களமிறக்க விரும்பும் இந்திய அணியின் பயிற்சியாளர் கௌதம் கம்பீரின் திட்டத்திற்கு முன்னாள் இந்திய வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கை அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் 167 ஓட்டங்களைப் பெற்ற தேவ்தத் படிக்கல், தற்போது கொழும்பில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸிலும் 117 ஓட்டங்களை எடுத்துள்ளார்.
சாய் சுதர்சன் காயமடைந்ததால் மட்டுமே படிக்கலுக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது.
இருப்பினும், இலங்கைக்கு எதிரான போட்டிகளில் சுதர்சனை மீண்டும் மூன்றாவது இடத்தில் களமிறக்கவே கம்பீர் திட்டமிட்டிருந்ததாக ஸ்ரீகாந்த் குறிப்பிட்டுள்ளார்.
படிக்கலின் இந்தத் தொடர் சதங்கள் அணி நிர்வாகத்தின் திட்டங்களை மாற்ற வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள ஸ்ரீகாந்த், “படிக்கலை அணியில் இருந்து எவ்வாறு நீக்க முடியும்?” என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற அணிகளுக்கு எதிராக வெற்றி பெற்றுவிட்டு கம்பீர் துள்ளிக் குதிப்பார் என்று குறிப்பிட்டுள்ள அவர், கம்பீர் சிறந்த வீரராக இருந்தாலும், தனது முடிவுகள் தொடர்பாக வீரர்களிடம் கூடுதல் வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
Latest News
மொரட்டுவ பகுதியில் துப்பாக்கிச்சூடு - இருவர் தப்பியோட்டம்
Local
09 September 2026
திருமணம் ஒரு கட்டாயமல்ல; வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பதே முக்கியம்: நடிகை ரம்யா பரபரப்பு கருத்து!
Local
09 September 2026
தவெக கூட்டணியின் அதிரடி வியூகம் – அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட புதிய கூட்டணியின் பெயர்!
Local
09 September 2026
குடியிருப்புகளுக்கு அருகில் உலா வரும் சிறுத்தை – மக்களுக்கு அவசர எச்சரிக்கை
Local
09 September 2026
காலக்கெடு கடந்தும் விடுவிக்கப்படாத வாகனங்கள் - விரைவில் விடுவிக்குமாறு கோரிக்கை
Local
09 September 2026
பாதுகாப்புப் படைகளின் பிரதான அதிகாரியின் பதவியை நீக்குவதற்கான சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்
Local
09 September 2026
நாட்டுக்கே உரிய மனித உரிமை ஆணைகள் காலவரையறையின்றி நீடிக்கக் கூடாது – ஐ.நா.விடம் இலங்கை கோரிக்கை
Local
09 September 2026
நடிகர் அஜித்தின் மறுபக்கம்: படப்பிடிப்புத் தளத்தில் அவர் காட்டும் அன்பு குறித்து நடிகர் சூரி நெகிழ்ச்சி!
Local
09 September 2026
ஒரே ஒரு முடிவு மொத்த வாழ்க்கையையும் மாற்றுமா? : இயக்குநர் ஜேசன் சஞ்சய் வைரல் பேச்சு!
Local
09 September 2026
இந்திய அரசின் நிதியுதவியின் கீழ் 3 புதிய பாலங்கள் திறப்பு!
Local
09 September 2026