General20 September 2025

அரசியலுக்கு வரும் முன்பும் நாங்கள் யாசகர்கள் அல்ல - நளின் ஹேவகே

தொழிற்கல்விப் பிரதி அமைச்சர் நளின் ஹேவகே, தனது சொத்துக்கள் குறித்த சமீபத்திய அறிக்கைகளைத் தெளிவுபடுத்தியுள்ளார். 
 
இதன்படி வங்கி வைப்புத்தொகைகளில் தனது மகளுக்கு பரிசளிக்கப்பட்ட நிதியும் அடங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 
 
நளின் ஹேவகேவிற்கு சுமார் ரூ.2.2 மில்லியன் வங்கிக் கணக்குகளும், ரூ.2.4 மில்லியன் மதிப்புள்ள நிலமும் இருப்பதாகக் கூறும் செய்திகள் வெளியானதையடுத்து, அவர் இதனைத் தெளிவுபடுத்தியுள்ளார். 
 
தனது வங்கிக் கணக்குகளில் உள்ள பணம், ஜனவரி முதலாம் திகதி விழாவொன்றின் போது கிடைத்த பணமும் அடங்குவதாக அவர் தெரிவித்தார். 
 
மேலும், அரசியலில் நுழைவதற்கு முன் தனது நிலம் வாங்கப்பட்டது என்று ஹேவகே சுட்டிக்காட்டினார். 
 
அத்துடன் நாங்கள் யாசகர்கள் அல்ல எனவும், நான் பட்டம் முடித்து அரசாங்க ஆசிரியராகப் பணியாற்றியபோது குறித்த காணியை வாங்கியதாகவும் அவர் வலியுறுத்தினார்.
Related Recomands
Hiru TV News | Programmes