General20 September 2025

எஜமானின் நலன் விசாரிக்க யாழ். மருத்துவமனை விரைந்த அழையா விருந்தாளி

மனிதர்களைக் கடந்து ஐந்தறிவு ஜீவன்களுக்கும் கருணை உண்டு என்பதை நிருபிக்கும் வகையிலான சம்பவம் ஒன்று யாழ். மருத்துவமனையில் நிகழ்ந்துள்ளது.

மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளைப் பார்வையிட அவர்களது உறவினர்கள், நண்பர்கள் என பலரும் சென்று பார்வையிடுவது வழக்கமானதொன்றாகும்.

அந்த வரிசையில் தனது எஜமானை பார்க்க நாய் ஒன்று சென்றுள்ள சம்பவம் பலரினதும் கவனத்தை ஈர்த்துள்ளது.

யாழ். மருத்துவமனையின் 24 ஆம் இலக்க விடுதியில் இந்த நெகிழ்ச்சி சம்பவம் பதிவானதாக எமக்குக் கிடைத்த தகவல்களின் மூலம் அறிந்து கொள்ளக் கூடியதாக உள்ளது.

மருத்துவமனைக்குள் எவ்வித குழப்பமும் விளைவிக்காமல் குறித்த நாய் தனது எஜமானை பார்வையிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் யாழ். மருத்துவமனையின் வரலாற்றில் ஒரு தனிச்சிறப்பான நிகழ்வாகப் பதிவாகியுள்ளது.
Related Recomands
Hiru TV News | Programmes