General10 October 2025

ஐ.பி.எல் 2026 - சென்னை அணியில் இருந்து விடுவிக்கப்படும் முக்கிய 5 வீரர்கள்

ஐ.பி.எல் 2026 ஆம் ஆண்டு பருவத்துக்கான மினி ஏலம் டிசம்பர் மாதம் 13 - 15 ஆம் திகதிக்குள் நடைபெற வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 
 
கடந்த இரண்டு ஐ.பி.எல். பருவத்திலும் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி பிளே ஓப் சுற்றுக்கு கூட தகுதி பெற முடியாத நிலையில் இருந்தது. கடைசியாக அந்த அணி 2023 ஆம் ஆண்டு சாம்பியன் பட்டத்தை வென்றது. 
 
இந்த நிலையில் ஐ.பி.எல் 2026 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் தக்கவைக்க விரும்பும் வீரர்கள் மற்றும் விடுவிக்க விரும்பும் வீரர்கள் பட்டியலை நவம்பர் 15 ஆம் திகதிக்குள் பி.சி.சி.ஐ இடம் தெரிவிக்க வேண்டும் என்று செய்தி வெளியாகி உள்ளது. 
 
இதனால் ஒவ்வொரு அணியும் தங்களது அணியில் உள்ள வீரர்களை தக்கவைப்பது விடுவிப்பது குறித்த பட்டியலை ஆராய்ந்து வருகின்றன. 
 
அந்த வகையில் சி.எஸ்.கே அணியில் தீபக் ஹூடா, விஜய் சங்கர், ராகுல் திரிபாதி, சாம் கரன், கொன்வே உள்ளிட்ட வீரர்களை விடுவிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
ஏற்கனவே 9 கோடி 75 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட அஸ்வினும் தற்போது ஓய்வு பெற்றிருப்பதால் சி.எஸ்.கே அணியிடம் கிட்டத்தட்ட 40 கோடி ரூபாய்க்கு மேல் பணம் கையிருப்பு இருக்கும் என தெரிகிறது. 
 
இதன் மூலம் சி.எஸ்.கே அணி சஞ்சு சாம்சன் உள்ளிட்ட வீரர்களை குறி வைத்து வாங்கலாம். ஏற்கனவே சி.எஸ்.கே அணி பல வீரர்களை காயம் காரணமாக தொடரின் பாதியிலே மாற்றி அணியை பலப்படுத்திக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
Related Recomands
Hiru TV News | Programmes