General10 October 2025

சட்ட விரோதமாக புதையல் தோண்டிய குடும்பத்தினர் கைது

இங்கினியாகல காவல் பிரிவின் கொக்னஹர பகுதியில் புதையல் தோண்டிக் கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் அம்பாறை பிரதேச ஊழல் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 
 
அம்பாறை பிரதேச ஊழல் தடுப்புப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், இன்று (10) பிற்பகல் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது, 
 
மேலும், புதையல் தோண்டிக் கொண்டிருந்த நான்கு சந்தேகநபர்களை கைது செய்ததுடன், அவர்களிடம் காணப்பட்ட உபகரணங்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். 
 
தண்ணீர் எடுக்கும் இயந்திரம், மின்சாரம் வழங்கப் பயன்படுத்தப்படும் மின் கேபிள்கள், பூஜை பொருட்கள் என்பன காவல்துறையின் கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 
 
மேலும், கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் பல நாட்களாக இந்த அகழ்வாராய்ச்சியை மேற்கொண்டு வருவதாக காவல்துறை விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. 
 
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக இங்கினியாகல காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
Related Recomands
Hiru TV News | Programmes