தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், நடிகருமான விஜய்யின் விவாகரத்து வழக்கு செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், இவ்வழக்கை விசாரித்து வந்த நீதிபதி திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்ற நீதிபதி எழிலரசி, தற்போது விழுப்புரம் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.
விஜய் மற்றும் சங்கீதா ஆகியோர் நீதிமன்றத்தில் நேரில் முன்னிலையாவதற்கு பதிலாக, காணொளி காட்சி மூலம் முன்னிலையாக அனுமதி வழங்கிய நிலையிலேயே இந்த இடமாற்றம் நிகழ்ந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஏப்ரல் 20ஆம் திகதி விசாரணைக்கு வந்த இந்த வழக்கு, தற்போது ஜூன் மாதம் 15ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சட்டமன்றத் தேர்தல் பணிகள் மற்றும் பாதுகாப்பு காரணங்களை முன்னிட்டு இந்தத் திகதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இரு தரப்பு சட்டத்தரணிகளும் நடத்திய பேச்சுவார்த்தையில், இருவரும் சுமூகமாகப் பிரிந்து செல்வது என முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
ஜீவனாம்சம் மற்றும் பிள்ளைகளின் எதிர்காலத்திற்கான சொத்து பாகப்பிரிவினைகள் குறித்து ஏற்கனவே பேசி முடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
விஜய்யின் மனைவி சங்கீதா, செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இவ்வழக்கின் முதற்கட்ட விசாரணைக்காக விஜய்க்கு ஏற்கனவே நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியிருந்தது.
தேர்தல் பணிகள் மற்றும் பாதுகாப்புச் சூழல் காரணமாக அவர்கள் நேரில் முன்னிலையாவதில் சிக்கல் நிலவியதால், காணொளி மூலம் முன்னிலையாக அனுமதி கோரியிருந்தனர்.
சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ள இத்தருணத்தில், அரசியல் மற்றும் திரையுலகில் முக்கிய நபராக இருக்கும் விஜய்யின் இந்த விவாகரத்து வழக்கு விசாரணை மற்றும் நீதிபதி மாற்றம் ஆகியவை சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
Latest News
அமெரிக்கா - ஈரான் பேச்சுவார்த்தை : தீர்வின்றி முடங்கிக் கிடக்கும் 6 முக்கிய சிக்கல்கள்
செல்லப்பிராணிகளுடன் வானூர்திப் பயணம் - பிரித்தானியாவில் வலுக்கும் புதிய சட்டத்திற்கான கோரிக்கை!
பாம் எண்ணெய் இறக்குமதியால் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள பாரிய நஷ்டம்
இலங்கையில் 2010 இற்குப் பின் பிறந்தவர்களுக்கு புகையிலை தடை?
ஹைதராபாத் அணியின் அதிரடி ஆட்டம் - வைரலாகும் ஹிட்மேனின் ஏக்கம்
நாய் ரோபோக்களாக உருமாறிய தொழில்நுட்பக் கோடீஸ்வரர்கள் - பேர்லினில் வினோதக் காட்சி!
இன்று தங்கத்தின் விலை குறைந்தது : நகை பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி
வீடமைப்புத் திட்டத்தை விரைவுபடுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை
விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கில் திடீர் மாற்றம்
ஆடம்பர வாழ்க்கைக்காக மகனுக்குப் புற்றுநோய் என நாடகம் : தாய்க்கு கிடைத்த தண்டனை!