உலகப் புகழ்பெற்ற தொழில்நுட்ப ஜாம்பவான்களின் உருவங்களைத் தலைகளாகக் கொண்ட நாய் ரோபோக்கள், பேர்லினில் உள்ள அருங்காட்சியகம் ஒன்றில் உலாவருவது பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அமெரிக்கக் கலைஞர் பீப்பிள் (Beeple) எனப்படும் மைக் வின்கெல்மேனின் இந்த வினோதமான படைப்பு, நவீன உலகில் அல்கோரிதம்களின் (Algorithms) ஆதிக்கத்தை விமர்சிக்கும் வகையில் அமைந்துள்ளது.
பேர்லினின் 'நியூ நஷனல் கலரி' (Neue Nationalgalerie) இல் இடம்பெற்றுள்ள இந்த ஊடாடும் கலைக் கண்காட்சிக்கு "Regular Animals" எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இந்த நாய் ரோபோக்கள் அருங்காட்சியகத்தைச் சுற்றித் திரியும் போது, அங்கிருக்கும் கெமராக்கள் மூலம் சூழலைப் படம்பிடிக்கின்றன.
பின்னர், அந்தப் படங்கள் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் மாற்றப்பட்டு, குறித்த நாயின் தலையில் உள்ள நபரின் கண்ணோட்டத்திற்கு ஏற்ப அச்சிடப்பட்டு வெளியேற்றப்படுகின்றன.
இதன்படி ஈலோன் மஸ்க், மார்க் ஸுக்கர்பெர்க், ஜெஃப் பெசோஸ் போன்றோரின் உருவங்கள் கொண்ட நாய் ரோபோக்கள் , அவர்களின் அல்கோரிதம்கள் உலகை எப்படிச் சித்தரிக்கின்றனவோ அவ்வாறான படிமங்களை வெளியிடுகின்றன.
இந்தக் கலைப்படைப்பு குறித்துக் கருத்துத் தெரிவித்த பீப்பிள், கடந்த காலங்களில் கலைஞர்கள் உலகைப் பார்க்கும் விதமே மக்களின் பார்வையை மாற்றியமைத்ததாகக் குறிப்பிட்டார்.
"இன்று நமது பார்வையைத் தொழில்நுட்பக் கோடீஸ்வரர்களே தீர்மானிக்கிறார்கள்.
அவர்கள் வைத்திருக்கும் சக்திவாய்ந்த அல்கோரிதம்கள், நாம் எதைப் பார்க்க வேண்டும், எதை தவிர்க்க வேண்டும் என்பதை முடிவு செய்கின்றன.
ஒரு மாற்றத்தைச் செய்ய அவர்கள் எந்தச் சட்டமன்றத்தையோ அல்லது ஐ.நா சபையையோ அணுக வேண்டியதில்லை.
ஒரு நாள் காலையில் எழுந்து அல்கோரிதத்தை மாற்றினால் போதுமானது. இது ஒரு மிகப்பெரிய அதிகாரம்," என அவர் சுட்டிக்காட்டினார்.
தென் கரோலினாவைச் சேர்ந்த கிரபிக் வடிவமைப்பாளரான பீப்பிள், டிஜிட்டல் கலையுலகில் மிகவும் விலையுயர்ந்த கலைஞர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார்.
செயற்கை நுண்ணறிவு இன்று மனித வாழ்வில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், அத்தகைய மாற்றங்களைச் சமூகம் பிரதிபலிக்க அருங்காட்சியகங்களே சிறந்த இடங்கள் என இந்தக் கண்காட்சியின் பொறுப்பாளர் லிசா போட்டி தெரிவித்தார்.
தொழில்நுட்பம் நமது சிந்தனைகளை எப்படிக் கையாள்கிறது என்பதை இந்தக் கண்காட்சி ஒரு நையாண்டி கலந்த எச்சரிக்கையாக முன்வைக்கிறது.

Latest News
அமெரிக்கா - ஈரான் பேச்சுவார்த்தை : தீர்வின்றி முடங்கிக் கிடக்கும் 6 முக்கிய சிக்கல்கள்
Local
30 April 2026
செல்லப்பிராணிகளுடன் வானூர்திப் பயணம் - பிரித்தானியாவில் வலுக்கும் புதிய சட்டத்திற்கான கோரிக்கை!
Local
30 April 2026
பாம் எண்ணெய் இறக்குமதியால் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள பாரிய நஷ்டம்
Local
30 April 2026
இலங்கையில் 2010 இற்குப் பின் பிறந்தவர்களுக்கு புகையிலை தடை?
Local
30 April 2026
ஹைதராபாத் அணியின் அதிரடி ஆட்டம் - வைரலாகும் ஹிட்மேனின் ஏக்கம்
Local
30 April 2026
நாய் ரோபோக்களாக உருமாறிய தொழில்நுட்பக் கோடீஸ்வரர்கள் - பேர்லினில் வினோதக் காட்சி!
Local
30 April 2026
இன்று தங்கத்தின் விலை குறைந்தது : நகை பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி
Local
30 April 2026
வீடமைப்புத் திட்டத்தை விரைவுபடுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை
Local
30 April 2026
விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கில் திடீர் மாற்றம்
Local
30 April 2026
ஆடம்பர வாழ்க்கைக்காக மகனுக்குப் புற்றுநோய் என நாடகம் : தாய்க்கு கிடைத்த தண்டனை!
Local
30 April 2026