2026 ஆம் ஆண்டுக்கான இரண்டாவது மற்றும் மூன்றாவது காலாண்டுகளுக்கான முன்மொழியப்பட்ட மின்சாரக் கட்டண மீளாய்வு தொடர்பில், இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) நாளை (மே 6) பங்குதாரர்களுக்கான பொதுக் கருத்துக் கேட்புக் கூட்டமொன்றை நடத்தவுள்ளது.
எரிபொருள் விலை அதிகரிப்பால் மின்சார உற்பத்திச் செலவு கூடியுள்ளதாக தேசிய கட்டமைப்புச் செயற்பாட்டாளர் (National System Operator) சமர்ப்பித்துள்ள திருத்தப்பட்ட மதிப்பீட்டின் அடிப்படையில் இந்த மீளாய்வு நடைபெறுகின்றது.
2026 ஆம் ஆண்டுக்கான முன்மொழியப்பட்ட மின்சாரக் கட்டண மீளாய்வு தொடர்பான பொது ஆலோசனைக்கான வாய்மொழி அமர்வு கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) இடம்பெறவுள்ளது.
2026 ஆம் ஆண்டின் இரண்டாவது மற்றும் மூன்றாவது காலாண்டுகளுக்கான திருத்தப்பட்ட மின்சார உற்பத்திச் செலவு மீதான பொதுமக்கள் மற்றும் பங்குதாரர்களின் கருத்துக்களைப் பெறுவது இதன் முக்கிய நோக்கமாகும்.
தேசிய கட்டமைப்பு செயற்பாட்டாளர் 38 பில்லியன் ரூபாய் பற்றாக்குறையை எதிர்நோக்கிய போதிலும், பொதுமக்களைப் பாதுகாக்கும் நோக்கில் அரசாங்கம் 15 பில்லியன் ரூபாய் மானியத்தை வழங்கியுள்ளது.
அனைத்துக் கருத்துக்களையும் பரிசீலித்த பின்னர், இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மே 9ஆம் திகதி இறுதி முடிவை அறிவிக்கவுள்ளது.
Latest News
வாகன இலக்கத்தகடுகள் தொடர்பில் வெளியான அறிவித்தல்
Local
07 May 2026
பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்கள் அதிகரிப்பு : தீர்வு காண சர்வதேச உதவியை நாடுகிறது இலங்கை!
Local
07 May 2026
பெரும்பான்மையை பேரவையில்தான் நிரூபிக்க வேண்டும், ராஜ்பவனில் அல்ல - கமல்ஹாசன்
Local
07 May 2026
லாஃப்ஸ் எரிவாயு விலை உயர்வு - உணவு மற்றும் பானங்களின் விலை அதிகரிப்பு
Local
07 May 2026
நாட்டின் பல பகுதிகளில் பலத்த மின்னலுடன் கூடிய மழை – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை
Local
07 May 2026
இலங்கையின் தனியார் பேருந்து துறையில் பாரிய மாற்றம் : மின்சார பேருந்து சேவை ஆரம்பம்!
Local
07 May 2026
காலதாமதம் செய்வது அரசியல் குழப்பங்களுக்கே வழிவகுக்கும் - ஆளுநர் முடிவுக்கு தொடரும் எதிர்ப்பு
Local
07 May 2026
இலங்கையர்களின் தனிப்பட்ட தரவுகள் வெளிநாட்டவர் வசம்? - அரசாங்கத்திடம் அவசர விளக்கம் கோரல்
Local
07 May 2026
உலக எரிசக்தி சந்தை : எண்ணெய் மற்றும் எரிவாயு விலையில் மாற்றம்
Local
07 May 2026
மீண்டும் மின்சாரக் கட்டண உயர்வு: ஏற்றுமதித் துறை முடங்கும் அபாயம் - உற்பத்தியாளர்கள் எச்சரிக்கை
Local
07 May 2026