General07 May 2026

அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் குற்றச்சாட்டு முற்றுமுழுதான பொய்: எதிர்க்கட்சித் தலைவர் கடும் காட்டம்!

மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு விவகாரத்தில் அமைச்சரும் சபை முதல்வருமான பிமல் ரத்நாயக்க முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்கள் அடிப்படைத்தன்மையற்றவை எனவும், அவை முற்றுமுழுதான பொய் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் எதிர்கட்சித்தலைவருக்கும் சபைமுதல்வர் பிமல் ரத்நாயக்கவுக்கும் இடையில் இடம்பெற்ற வாத பிரதிவாதத்தின் போதே அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

மலையகத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட சம்பள அதிகரிப்புக்கு எதிராக, தான் கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்குச் சென்றதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க கூறியுள்ள கருத்துக்களை மறுத்துள்ள எதிர்க்கட்சித் தலைவர், அமைச்சர் வேண்டுமென்றே பொய்யுரைப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர் தனது பொய்யான கருத்தை உடனடியாக மீளப் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அவர் சபையில் குறிப்பிட்டார்.

அதற்கு பதிலளித்த அமைச்சரும் சபை முதல்வருமான பிமல் ரத்நாயக்க ,

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்புக்கு எதிர்க்கட்சி கடும் எதிர்ப்பை வெளியிட்டது.எதிரணியின் சேர்ந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் இது தொடர்பாக முறைப்பாடுகளையும் (Writ) பதிவு செய்திருந்தார்.

இந்த விடயத்திற்காக முதலில் பெருந்தோட்டத் தொழிலாளர்களிடம் எதிர்க்கட்சித்தலைவரே பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும் என அமைச்சர் தெரிவித்தார்.
Related recommendation
Hiru TV News | Programmes