இலங்கையில் ஐந்து சிறுவர்களில் ஒருவர் ஊட்டச்சத்துக் குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் விசேட மருத்துவ நிபுணர் அனில் ஜசிங்க தெரிவித்துள்ளார்.
தேசிய ஊட்டச்சத்து மாதத்தை முன்னிட்டு, சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இந்த விபரங்களை வெளியிட்டார்.
ஊட்டச்சத்துக் குறைபாட்டிற்கு ஆளாகும் சிறுவர்கள், பிற்காலத்தில் உடல் பருமன் போன்ற சுகாதாரப் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கும் அபாயம் உள்ளதாக அவர் எச்சரித்துள்ளார்.
இதன்படி ஐந்து வயதிற்குட்பட்ட மற்றும் ஐந்து வயதிற்கு மேற்பட்ட சிறுவர்களை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்ட அண்மைய ஆய்வுகளின் தரவுகளினடிப்படையில் வளர்ச்சி குறைபாடு 10.1 சதவீதமாகவும்,குறைந்த எடை 16.1சதவீதமாகவும்,அதிக எடை 0.5 சதவீதமாகவும் உள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்தத் தரவுகளின்படி, நமது நாட்டில் உள்ள சிறுவர்களில் ஐந்தில் ஒருவர் ஊட்டச்சத்துக் குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தெளிவாகிறது.
இத்தகைய பின்னணியில், சிறுவயதில் ஊட்டச்சத்துக் குறைபாட்டை எதிர்கொள்ளும் சிறுவர்கள், அவர்களது இளம்பருவத்திலும் முதிர்ந்த பருவத்திலும் உடல் பருமன் நிலைக்குத் தள்ளப்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

Latest News
பயங்கரவாதத் தடுப்புச் சட்ட திருத்தத்தால் 100 வரையான கைதிகளுக்கு பிணை: 'சூரியனின் விழுதுகளில்' சட்டத்தரணி தவராசா விபரிப்பு!
Local
13 June 2026
பயங்கரவாதத் தடைச் சட்டம்: 'நிரபராதிகளின் ஆயுட்காலம் சிறையிலேயே முடிகிறது' என ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசா சாடல்
Local
13 June 2026
கல்விச் சீர்திருத்தமும் முதலீட்டுச் சூழலும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அத்தியாவசியம்: எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச!
Local
13 June 2026
இலங்கையில் இன்றும் தங்க விலை அதிகரிப்பு
Local
13 June 2026
கடற்படை மற்றும் கடற்றொழில் சமூகத்திற்கு அவசர எச்சரிக்கை: கடும் காற்றுடன் கடல் கொந்தளிப்பாகக் காணப்படும்!
Local
13 June 2026
ரம்புக்கணையில் தொடருந்து தடம் புரண்டது!
Local
13 June 2026
கால்பந்து போட்டித் தொடர்: ரொனால்டோ தலைமையிலான போர்த்துகல் அணி அமெரிக்கா சென்றடைந்தது !
Local
13 June 2026
பல பிரதேசங்களில் இன்றும் மழை: களனி, களு கங்கைகள் மற்றும் அத்தனகலு ஓயாவின் நீர்மட்டங்கள் உயர்வு!
Local
13 June 2026
மகளிர் இருபதுக்கு20 உலகக் கிண்ணம்: இலங்கையை வீழ்த்தி வென்றது இங்கிலாந்து
Local
13 June 2026
சாதாரண, உயர்தரப் பரீட்சைகள் திட்டமிட்டபடி நடைபெறும்: கல்வி அமைச்சு அறிவிப்பு!
Local
13 June 2026