Sports13 June 2026

மகளிர் இருபதுக்கு20 உலகக் கிண்ணம்: இலங்கையை வீழ்த்தி வென்றது இங்கிலாந்து

மகளிர் இருபதுக்கு20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் ஆரம்பப் போட்டியில் இலங்கை அணியை 87 ஓட்டங்களால் வீழ்த்தி இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து மகளிர் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 219 ஓட்டங்களைக் குவித்தது.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி, 20 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 132 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியைத் தழுவியது.

இலங்கை அணி பங்கேற்கும் அடுத்த போட்டி எதிர்வரும் 16ஆம் திகதி நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related recommendation
Hiru TV News | Programmes