General13 June 2026

ரம்புக்கணையில் தொடருந்து தடம் புரண்டது!

ரம்புக்கணை தொடருந்து நிலையத்தில் தொடருந்து தடம் புரண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ரம்புக்கணையிலிருந்து பாணந்துறை நோக்கி பயணிக்கவிருந்த தொடருந்தே இவ்வாறு தடம் புரண்டுள்ளதாக தொடருந்து திணைக்களத்தின் பிரதி போக்குவரத்து அதிகாரி அசங்க சமரசிங்க தெரிவித்துள்ளார்.

எனினும், இந்த நிலைமை காரணமாக தொடருந்து சேவைகளில் தாமதம் எதுவும் ஏற்படாது எனவும், குறித்த தொடருந்து பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம், தடம் புரண்ட தொடருந்தை மீண்டும் தண்டவாளத்தில் நிறுத்துவதற்கான பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
Related recommendation
Hiru TV News | Programmes