நாட்டில் ஏற்படக்கூடிய எல்-நினோ (El Niño) மற்றும் லா-நினா (La Niña) காலநிலை மாற்ற சவால்களுக்கு முகம் கொடுப்பதற்காக, விரைவான ஜனாதிபதி செயலணியொன்றை நிறுவுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச யோசனை முன்வைத்துள்ளார்.
இலங்கைக் காலநிலை பற்றிய நாடாளுமன்ற ஒன்றியக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து எதிர்க்கட்சித் தலைவர்,
"சர்வதேச கடல் மற்றும் வளிமண்டல நிர்வாக அமைப்பின் (NOAA) கணிப்புகளின்படி, கடல் நீரின் மேற்பரப்பு வெப்பநிலை வழக்கத்தை விட அதிகமாக உயர்வதால் 'சூப்பர் எல்-நினோ' நிலைமை ஏற்படுவதற்கு 63% சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன. இதன் காரணமாகக் கடுமையான வறட்சி அல்லது அதிக மழைப்பொழிவு போன்ற தீவிர காலநிலை மாற்றங்களை நாடு எதிர்கொள்ள நேரிடலாம்."
கடந்த ஏப்ரல் 7ஆம் திகதியே காலநிலை மாற்றம் பற்றிய நாடாளுமன்ற ஒன்றியத்தில் அரச நிறுவனங்களின் நிபுணர்களை அழைத்து இது குறித்து முதன்முதலாகத் தாம் கலந்துரையாடியதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்தக் காலநிலை மாற்றங்கள் காரணமாக விவசாயம், நீர் முகாமைத்துவம் மற்றும் வனவிலங்கு-மனித மோதல்கள் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து ஏற்படும் 'லா-நினா' நிலைமையால் எதிர்பாராத கனமழை பெய்து மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும், சுற்றுச்சூழலுக்கும் கடும் அச்சுறுத்தல் ஏற்படலாம் என நிபுணர்கள் எச்சரிப்பதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும், நீர் தட்டுப்பாடு அதிகரிப்பதன் மூலம் நாட்டின் மின் உற்பத்தியும் பாதிக்கப்படக்கூடிய சூழல் உருவாகலாம் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
எனவே, இந்த அபாயகரமான சூழ்நிலையை எதிர்கொள்ள பிரத்தியேகமான ஜனாதிபதி செயலணியொன்று அமைக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
அரச கொள்கைகளுடன் ஒருங்கிணைந்து இந்தச் சவால்களுக்குத் தீர்வுகளைக் கண்டறிவதோடு, இது குறித்து பொதுமக்களை விழிப்புணர்வூட்டும் நடவடிக்கைகள் உடனடியாக ஆரம்பிக்கப்பட வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்துள்ளார்.

Latest News
இலங்கையில் புதிய வடிவில் பரவும் டெங்கு வைரஸ்
Local
14 June 2026
காஸா ஆய்வகங்கள் மற்றும் இரத்த வங்கிகளில் 87 வீத தட்டுப்பாடு
Local
14 June 2026
இலங்கையைத் தாக்குமா எல் நினோ? வெளியான அதிரடி தகவல்!
Local
14 June 2026
கண்டி மெட்ரோ பேருந்து திட்டத்தின் இரண்டாம் கட்டம் ஆரம்பம்: போக்குவரத்து நெரிசலுக்கு நவீன தீர்வு!
Local
14 June 2026
எத்தகைய நெருக்கடியிலும் கல்வியைப் பாதுகாக்க அரசாங்கம் உறுதி:பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவிப்பு.
Local
14 June 2026
விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு: செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நாளை விசாரணை!
Local
14 June 2026
அரசாங்கம் மீதான நம்பிக்கையை இழந்த புலம்பெயர் சமூகம்: நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா குற்றச்சாட்டு
Local
14 June 2026
ஒடுக்குமுறைகளை விடுத்து மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குக - அரசாங்கத்திற்கு நாமல் வலியுறுத்தல்
Local
14 June 2026
ஜி-7 உச்சிமாநாடு பிரான்சில் நாளை ஆரம்பம்
Local
14 June 2026
எல்-நினோ சவால்களை எதிர்கொள்ள ஜனாதிபதி செயலணியை நிறுவுமாறு சஜித் யோசனை!
Local
14 June 2026