காஸா பகுதியில் உள்ள மருத்துவ ஆய்வகங்கள் (Laboratories) மற்றும் இரத்த வங்கிகளின் (Blood Banks) செயற்பாடுகள், கடுமையான மருத்துவப் பொருட்கள் தட்டுப்பாடு காரணமாக முழுமையாக முடங்கும் பேரழிவு நிலையை எட்டியுள்ளதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
உலக இரத்தக்கொடையாளர் தினத்தை முன்னிட்டு (World Blood Donor Day) காஸா சுகாதார அமைச்சு விடுத்துள்ள விசேட அறிக்கையிலேயே இந்த அதிர்ச்சி தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில், ஆய்வகங்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் பரிசோதனை மூலப்பொருட்களில் (Testing Materials) 87 வீதமானவை தற்சமயம் கையிருப்பில் இல்லை.
போதிய மருத்துவப் பரிசோதனை கருவிகள் மற்றும் ஆய்வக உபகரணங்கள் இல்லாததன் காரணமாக, நோயாளிகளுக்கான அத்தியாவசிய பரிசோதனைகளை மேற்கொள்ள முடியாத கடுமையான பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
காஸா முனையில் உள்ள இரத்த வங்கிகளில் தற்சமயம் கடுமையான இரத்தப் பற்றாக்குறை நிலவுவதாகவும், அவசரமாக மேலதிக இரத்தம் தேவைப்படுவதாகவும் சுகாதார அமைச்சு அவசர கோரிக்கையை விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Latest News
இலங்கையில் புதிய வடிவில் பரவும் டெங்கு வைரஸ்
Local
14 June 2026
காஸா ஆய்வகங்கள் மற்றும் இரத்த வங்கிகளில் 87 வீத தட்டுப்பாடு
Local
14 June 2026
இலங்கையைத் தாக்குமா எல் நினோ? வெளியான அதிரடி தகவல்!
Local
14 June 2026
கண்டி மெட்ரோ பேருந்து திட்டத்தின் இரண்டாம் கட்டம் ஆரம்பம்: போக்குவரத்து நெரிசலுக்கு நவீன தீர்வு!
Local
14 June 2026
எத்தகைய நெருக்கடியிலும் கல்வியைப் பாதுகாக்க அரசாங்கம் உறுதி:பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவிப்பு.
Local
14 June 2026
விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு: செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நாளை விசாரணை!
Local
14 June 2026
அரசாங்கம் மீதான நம்பிக்கையை இழந்த புலம்பெயர் சமூகம்: நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா குற்றச்சாட்டு
Local
14 June 2026
ஒடுக்குமுறைகளை விடுத்து மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குக - அரசாங்கத்திற்கு நாமல் வலியுறுத்தல்
Local
14 June 2026
ஜி-7 உச்சிமாநாடு பிரான்சில் நாளை ஆரம்பம்
Local
14 June 2026
எல்-நினோ சவால்களை எதிர்கொள்ள ஜனாதிபதி செயலணியை நிறுவுமாறு சஜித் யோசனை!
Local
14 June 2026