தற்போதைய அரசாங்கம் அரச ஊழியர்களையும் அரசியல்வாதிகளையும் ஒடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அதேவேளை, மறுபுறம் ஒட்டுமொத்த பொதுமக்களையும் கடுமையான அழுத்தங்களுக்கு உள்ளாக்கி வருவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அளவற்ற வரிச்சுமை, பொருளாதார மற்றும் சமூக நெருக்கடிகள், அத்துடன் தாங்கிக்கொள்ள முடியாத வாழ்க்கைச் செலவு என்பவற்றின் காரணமாக இன்று நாட்டின் நுகர்வோரும் விவசாயிகளும் அனாதரவான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அம்பாறை, பதியத்தலாவ பகுதியில் நேற்று (13) நடைபெற்ற தொகுதி கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
"கடந்த வெசாக் பௌர்ணமி தினத்தன்று அரசாங்கமும் இணைந்து வெசாக் பூசைகளை நடத்தியது. ஆனால், வெசாக் உற்சவம் முடிந்த மறுநாளே மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்பட்டது.
ஏனைய நாட்களில் முடியாவிட்டாலும், விகாரைகளுக்கு வெசாக் மற்றும் பொசன் பௌர்ணமி தினங்களிலாவது மின்சாரக் கட்டணத்தில் ஒரு தற்காலிக நிவாரணத்தை அரசாங்கத்தால் வழங்க முடிந்திருக்க வேண்டும்."
அம்பாறை, பதியத்தலாவ பகுதி மக்கள் மண்ணோடு போராடி விவசாயத்தில் வாழும் மனிதர்கள் எனச் சுட்டிக்காட்டிய அவர், விவசாயிகள் தங்களது விளைச்சலுக்கு நியாயமான விலையை எதிர்பார்ப்பதாகவும், அதேநேரம் நுகர்வோரின் விலை குறித்தும் அவதானம் செலுத்தப்பட வேண்டும் என்றும் கூறினார்.
இடைத்தரகர்களின் தேவைக்காக மரக்கறிகள் , அரிசி மற்றும் பழங்களை வெளியில் இருந்து இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதால் உள்நாட்டு விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டினார்.
அன்று எமது ஆட்சிக் காலத்தில் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டு வெளிநாடுகளுக்குச் சோளம் ஏற்றுமதி செய்யப்பட்டது.
ஆனால், இன்று உள்நாட்டு அறுவடை காலத்திலேயே டொலர்களைக் கொடுத்து வெளிநாடுகளில் இருந்து சோளம் இறக்குமதி செய்யப்படுகிறது.
இதனால் நாட்டின் டொலர்கள் வெளிநாடுகளுக்குச் செல்வதுடன், அரசாங்கத்தின் சில நண்பர்களின் இலாபத்திற்காகவே இத்தகைய திட்டமிடப்பட்ட முடிவுகள் எடுக்கப்படுகின்றன.
அரசாங்கம் இன்று அனைத்து வழிகளிலும் ஒடுக்குமுறைகளுக்குத் தயாராகி வருவதாகக் குறிப்பிட்ட நாமல் ராஜபக்ச,
அரசியல் ரீதியாக சிறையில் அடைப்பதனாலோ அல்லது வழக்குகளைத் தொடர்வதனாலோ மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்காது என்றும், இந்த நாட்டு மக்களின் பிரச்சினைகளுக்குப் பதிலளிக்க வேண்டிய சட்டபூர்வ பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளது என்றும் வலியுறுத்தினார்.
மேலும், கடந்த காலங்களில் தங்களுக்கு வாக்களிக்காத மக்கள் கூட இன்று தங்களது கொள்கை மீதான நம்பிக்கையினால் பொதுஜன பெரமுனவுடன் இணைந்து வருவதாகவும், மஹிந்த ராஜபக்சவின் காலத்தில் கிராமங்களுக்கு நேர்மையாகப் பணியாற்றியமையே இதற்குக் காரணம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Latest News
இலங்கையில் புதிய வடிவில் பரவும் டெங்கு வைரஸ்
Local
14 June 2026
காஸா ஆய்வகங்கள் மற்றும் இரத்த வங்கிகளில் 87 வீத தட்டுப்பாடு
Local
14 June 2026
இலங்கையைத் தாக்குமா எல் நினோ? வெளியான அதிரடி தகவல்!
Local
14 June 2026
கண்டி மெட்ரோ பேருந்து திட்டத்தின் இரண்டாம் கட்டம் ஆரம்பம்: போக்குவரத்து நெரிசலுக்கு நவீன தீர்வு!
Local
14 June 2026
எத்தகைய நெருக்கடியிலும் கல்வியைப் பாதுகாக்க அரசாங்கம் உறுதி:பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவிப்பு.
Local
14 June 2026
விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு: செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நாளை விசாரணை!
Local
14 June 2026
அரசாங்கம் மீதான நம்பிக்கையை இழந்த புலம்பெயர் சமூகம்: நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா குற்றச்சாட்டு
Local
14 June 2026
ஒடுக்குமுறைகளை விடுத்து மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குக - அரசாங்கத்திற்கு நாமல் வலியுறுத்தல்
Local
14 June 2026
ஜி-7 உச்சிமாநாடு பிரான்சில் நாளை ஆரம்பம்
Local
14 June 2026
எல்-நினோ சவால்களை எதிர்கொள்ள ஜனாதிபதி செயலணியை நிறுவுமாறு சஜித் யோசனை!
Local
14 June 2026