General05 July 2026

11 ஆவது தேசிய விபத்துத் தடுப்பு வாரம் நாளை ஆரம்பம்: அவசர விபத்துக்களைக் குறைக்க சுகாதார அமைச்சு நடவடிக்கை

விபத்துக்கள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், "11ஆவது தேசிய விபத்துத் தடுப்பு வாரம்" நாளை (06) முதல் 10 ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அவசர விபத்துக்கள் காரணமாக வருடாந்தம் இலங்கையர்கள் உயிரிழப்பதோடு, இலட்சக்கணக்கானோர் காயங்களுக்கு உள்ளாவதை கருத்திற்கொண்டே இந்த விபத்துத் தடுப்பு வாரம் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

அரச மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளர்களில் அதிகமானோர் வீதி விபத்துக்கள், பணியிட விபத்துக்கள், நீரில் மூழ்கியவர்கள் மற்றும் வீட்டு விபத்துக்களால் பாதிக்கப்பட்டவர்களாவர்.

இதனால் சுகாதாரத் துறைக்கும் நாட்டின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கும் ஏற்படும் கடுமையான பாதிப்பைக் குறைப்பதே இந்தத் தேசிய வேலைத்திட்டத்தின் முதன்மை நோக்கமாகும்.

இதன் அங்குரார்ப்பண விழா நாளை (06) முற்பகல் 11 மணிக்கு சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் சுகாதார அமைச்சின் பிரதான கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.

சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சின் தொற்றா நோய் பிரிவு, விபத்துத் தடுப்புக்கான தேசிய ஆலோசனைக் குழுவின் வழிகாட்டலின் கீழ், வாரத்தின் ஒவ்வொரு நாளும் பின்வரும் விசேட கருப்பொருள்களின் கீழ் பிரிக்கப்பட்டு விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இந்த வாரத்தில் நாடளாவிய ரீதியில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், விபத்து அபாயமுள்ள இடங்களை இனங்காணுதல் மற்றும் பாதுகாப்பான சூழலை உருவாக்குவதற்கான குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட கால நடைமுறை நடவடிக்கைகள் அரச நிறுவனங்கள், கல்வி மற்றும் பாதுகாப்புத் துறைகளின் கூட்டுப் பங்களிப்புடன் செயற்படுத்தப்படவுள்ளன.
Related recommendation
Hiru TV News | Programmes