International06 July 2026

மெக்சிகோவில் 36வது பிறந்தநாளைக் கொண்டாடிய 'சின் சின்' பண்டா கரடி!

மெக்சிகோவில் உள்ள வனவிலங்கு பாதுகாப்பு மையத்தில் வாழும் 'சின் சின்' (Xin Xin) என்ற பண்டா கரடி தனது 36-வது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளது.

உலகில் அதிக வயதுடைய பண்டா கரடிகளில் ஒன்றாக இந்த 'சின் சின்' பண்டா அறியப்படுகிறது. அத்துடன், லத்தீன் அமெரிக்கா பிராந்தியத்தில் எஞ்சியிருக்கும் ஒரேயொரு இராட்சத பண்டா கரடி இதுவே என்பதும் குறிப்பிடத்தக்கது.

வனவிலங்கு பாதுகாப்பு மைய அதிகாரிகள் மற்றும் பராமரிப்பாளர்கள் இணைந்து, அதற்குரிய சிறப்புப் பலகாரங்கள் மற்றும் ஏற்பாடுகளுடன் பிறந்தநாள் நிகழ்வைக் கொண்டாடியுள்ளனர்.
Related recommendation
Hiru TV News | Programmes