General06 July 2026

நீர்கொழும்பிலிருந்து 650 கைதிகள் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றம்!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறை மற்றும் மோதல் சம்பவங்களைத் தொடர்ந்து, அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த 650 கைதிகளை உடனடியாக வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இதற்கமைய, குறித்த கைதிகள் தும்பர, அனுராதபுரம் மற்றும் அங்குணகொலபெலஸ்ஸ ஆகிய சிறைச்சாலைகளுக்கு மாற்றி அனுப்பப்பட்டுள்ளனர்.

இதேவேளை, நீர்கொழும்பு சிறைச்சாலையில் இன்று ஏற்பட்ட இந்த அசாதாரண சூழ்நிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது.

உயிரிழந்தவர்களில் 19 கைதிகளும், 7 சிறைச்சாலை அதிகாரிகளும் அடங்குவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes