International11 July 2026

சர்வதேச கிரிக்கெட் சம்மேளனம்,இங்கிலாந்து கிரிக்கெட் சபைக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமா?

பென் ஸ்டோக்ஸின் ஓய்வு அறிவிப்பு தொடர்பான காணொளி விவகாரத்தில் இங்கிலாந்து கிரிக்கெட் சபையின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என சர்வதேச கிரிக்கெட் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது, பென் ஸ்டோக்ஸ் தனது ஓய்வு முடிவை சக வீரர்களிடம் அறிவித்துள்ளார்.

இங்கிலாந்து அணியின் ஓய்வு அறையில் எடுக்கப்பட்ட இந்த காணொளி என்ற நிலையில், போட்டி நடந்து கொண்டிருக்கும் போதே சமூக வலைதளங்களிலும் ஒளிபரப்பு நிறுவனங்களிலும் வெளியிடப்பட்டது.

சர்வதேச போட்டிகளில் வீரர்களின் மற்றும் போட்டி அதிகாரிகளின் அறைகளில் ஊழல் தடுப்பு நெறிமுறைகளைப் பாதுகாப்பதற்காக கடுமையான விதிகள் உள்ளன.

குறிப்பாக, ஓய்வு அறைகளில் ஒளிப்பதிவு கருவிகளைப் பயன்படுத்துவதற்கும், போட்டி முடிவதற்கு முன்பாக இதுபோன்ற காணொளிகளை வெளியிடுவதற்கும் தடை உள்ளது.

இந்தநிலையில், இந்த விதியை இங்கிலாந்து கிரிக்கெட் சபை மீறியதாக சர்வதேச கிரிக்கட் சம்மேளனம் கருதியது.

இதனையடுத்து, இது தொடர்பாக ஜூலை 4 அன்று இங்கிலாந்து கிரிக்கெட் சபைக்கு, சர்வதேச கிரிக்கட் சம்மேளனம் கடிதம் எழுதியிருந்தது.

இதில், குறைந்தபட்ச தரநிலைகளின் விதியை இங்கிலாந்து கிரிக்கட் சபை மீறியுள்ளதாக சர்வதேச கிரிக்கட் சம்மேளனம் குற்றம் சுமத்தியிருந்தது.

எனினும், இங்கிலாந்து கிரிக்கெட் சபை, இதற்கான விளக்கத்தை அளித்ததைத் தொடர்ந்து, இந்த விவகாரம் சுமூகமாக முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது.

எனினும் இரு தரப்பும் இது குறித்து அதிகாரப்பூர்வமாக கருத்துக்களை வெளியிடவில்லை.
Related recommendation
Hiru TV News | Programmes