மத்திய மாகாண ஆளுநர் சரத் அபேகோன், தனது பதவியிலிருந்து விலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தனது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு அனுப்பியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நேற்று அனுப்பப்பட்ட அந்த பதவி விலகல் கடிதத்திற்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை என்றும், ஜனாதிபதி அந்த கடிதத்தை ஏற்றுக்கொள்வாரா அல்லது நிராகரிப்பாரா என்பது குறித்து இதுவரை எந்தத் தீர்மானமும் அறிவிக்கப்படவில்லை என்றும் மத்திய மாகாண ஆளுநர் சரத் அபேகோன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், தான் பதவி விலகல் செய்ய எடுத்த தீர்மானம் தனிப்பட்ட காரணங்களால் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய மாகாண ஆளுநர் சரத் அபேகோன், பேராதனைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் கடந்த காலத்தில் பணியாற்றியுள்ளார்.
இதேவேளை, மத்திய மாகாண ஆளுநரின் செயலாளர் பதவியும் தற்போது வெற்றிடமாகியுள்ளது.
அந்தப் பதவியை வகித்த மஞ்சுளா மதஹபொல அண்மையில் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, மத்திய மாகாண அரச சேவை ஆணைக்குழுவின் செயலாளர் இஷான் விஜேதிலக இடைக்கால செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Latest News
கனேடிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வீட்டில் காவல்துறை அதிரடி : வீட்டில் சிக்கிய திடுக்கிடும் பொருட்கள்!
Local
15 July 2026
மீண்டும் வருகிறது ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2 ’: களமிறங்கும் புதிய கதாநாயகன்!
Local
15 July 2026
பஹ்ரைனில் உள்ள அமெரிக்கத் தளம் மீது ஈரான் தாக்குதல்: பதற்றமான சூழல்
Local
15 July 2026
மத்திய கிழக்கு போர் பதற்றம் : சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிரடி உயர்வு!
Local
15 July 2026
மத்திய மாகாண ஆளுநர் சரத் அபேகோன் பதவி விலகல்
Local
15 July 2026
காரைநகரில் கொள்ளையடிக்கப்பட்ட வெளிநாட்டுப் பணம் மற்றும் நகைகளுடன் இருவர் கைது!
Local
15 July 2026
16, 17 வயதுடையவர்களின் சமூக ஊடக பயன்பாட்டிற்கு கட்டுப்பாடுகள் : பிரித்தானியாவின் புதிய அதிரடி அறிவிப்பு
Local
15 July 2026
தங்கத்தின் விலை மீண்டும் உயர்வு : இன்றைய நிலவரம் என்ன?
Local
15 July 2026
சில பகுதிகளில் இன்று மழை : பல மாவட்டங்களுக்கு வெப்ப எச்சரிக்கை தொடர்கிறது!
Local
15 July 2026
அமெரிக்காவில் கடிகார நேரத்தை மாற்றும் நடைமுறைக்கு முடிவு: பிரதிநிதிகள் சபையில் சட்டமூலம் நிறைவேற்றம்!
Local
15 July 2026