Top Story
யாழ்ப்பாணம் – செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் நீதிமன்ற அனுமதியுடன் முன்னெடுக்கப்பட்ட மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் இன்று புதன்கிழமையுடன் நிறைவடைந்துள்ளன.

இன்றைய  அகழ்வின்போது நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட 10 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளை 56 நாட்களுக்கு முன்னெடுக்க யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்த நிலையில், அதன் 56ஆவது மற்றும் இறுதி நாளான இன்று அகழ்வுப் பணிகள் இடம்பெற்றன.

இதனடிப்படையில், செம்மணி மனிதப் புதைகுழியில் முதலாம் கட்ட அகழ்வுப் பணிகள் 9 நாட்களும், இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் 54 நாட்களும், மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் 56 நாட்களுமாக மொத்தம் 110 நாட்கள் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்த 110 நாள் அகழ்வுப் பணிகளின் நிறைவில், இதுவரை மொத்தம் 583 மனித எலும்புக்கூடுகள் வெளிப்பட்ட நிலையில், அவை அனைத்தும் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

செம்மணி அகழ்வுப் பணிகளின் போது பெரியவர்கள் மட்டுமன்றி சிறுவர்கள் மற்றும் கைக்குழந்தைகளின் என்புக்கூடுகளும் வெளிப்பட்டுள்ளன.

மேலும், சில என்புக்கூடுகள் ஒன்றின் மீது ஒன்று பின்னிக் காணப்பட்ட நிலையிலும், என்புக்கூட்டுக் குவியல்களாகவும், ஒழுங்கற்ற முறையிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அத்துடன், கால்கள் மடக்கப்பட்டு அமர்ந்த நிலையில் புதைக்கப்பட்டிருந்த என்புக்கூடு ஒன்றும் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டது.

இது போன்ற நிலையில் காணப்பட்ட என்புக்கூடு, செம்மணி அகழ்வில் இரண்டாவது முறையாகவும் வெளிப்பட்டது.

அகழ்வுப் பணிகளின்போது மனித என்புக்கூடுகளுடன் பல்வேறு பொருட்களும் சான்றுகளாக மீட்கப்பட்டுள்ளன.

குழந்தைகளுக்கான பால் போத்தல்கள், பாடசாலைப் புத்தகப் பைகள், வளையல்கள், பாதணிகள் , காலுறைகள், மோதிரங்கள், தாயத்துகள், நாணயக் குற்றிகள் உள்ளிட்ட தனிப்பட்ட பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக அகழ்வு அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

அத்துடன், சில சந்தர்ப்பங்களில் என்புக்கூடுகளுக்கு அருகிலும் அவற்றுடன் தொடர்புடைய நிலையிலும் இரும்புத் தகடுகள், ஆணிகள் உள்ளிட்ட பொருட்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இவை அனைத்தும் நீதிமன்றக் கட்டுப்பாட்டின் கீழ் சான்றுப் பொருட்களாகப் பாதுகாக்கப்படுகின்றன.

முன்னதாக, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவி கிருஷாந்தி குமாரசாமி மற்றும் அவரது குடும்பத்தினர் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்ட இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷ, நீதிமன்றத்தில் வழங்கிய வாக்குமூலத்தில் செம்மணி பகுதியில் நூற்றுக்கணக்கானோர் புதைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்திருந்தார்.

அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் 1999ஆம் ஆண்டு செம்மணி பகுதியில் சர்வதேச கண்காணிப்பாளர்களின் முன்னிலையில் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

அந்த அகழ்வுகளில் மொத்தம் 15 மனித உடல் எச்சங்கள் மீட்கப்பட்டன.

அவற்றில் இருவர் 1996ஆம் ஆண்டு காணாமல்போன இளைஞர்கள் என அடையாளம் காணப்பட்டனர்.

நூற்றுக்கணக்கான மனித உடல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டிருந்தாலும், 15 உடல் எச்சங்கள் மட்டுமே மீட்கப்பட்டிருந்ததால், செம்மணி புதைகுழி தொடர்பான பல கேள்விகள் நீண்டகாலமாகத் தீர்க்கப்படாமல் இருந்தன.

இந்த நிலையில்,  சுமார் 26 ஆண்டுகளுக்குப் பின்னர், 2025ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயானத்தில் புதிய தகனசாலை அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் இடம்பெற்றபோது மனித எச்சங்கள் தற்செயலாகக் கண்டுபிடிக்கப்பட்டன.

இதையடுத்து யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின் கீழ், நீதிமன்றக் கண்காணிப்புடன் முறையான அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவும் இந்த இடம் தொடர்பில் உண்மை கண்டறியும் நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தது.

முதலாம் மற்றும் இரண்டாம் கட்ட அகழ்வுகளில் சிறுவர்கள் மற்றும் கைக்குழந்தைகள் உள்ளிட்ட பலருடைய மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

அகழ்வுப் பணிகள் சட்ட வைத்திய அதிகாரி, தடயவியல் தொல்பொருள் நிபுணர்கள், குற்றப்புலனாய்வு அதிகாரிகள் மற்றும் ஏனைய துறைசார் நிபுணர்களின் பங்கேற்புடன் நீதிமன்றக் கண்காணிப்பில் முன்னெடுக்கப்பட்டன.

2026ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டன.

இந்த கட்டத்திற்கு 56 நாட்கள் நீதிமன்ற அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இடைநிறுத்தங்கள் மற்றும் மீள ஆரம்பிப்புகளுடன் இந்த அகழ்வு நடவடிக்கை தொடர்ந்த நிலையில், இன்று 56ஆவது நாளுடன் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் நிறைவடைந்துள்ளன.

செம்மணி - சித்துபாத்தி மனித புதைகுழியில் இதுவரை அடையாளம் காணப்பட்ட 583 மனித என்புக்கூடுகளும் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றை அடையாளம் காண்பது, மரணத்திற்கான காரணங்களை ஆராய்வது மற்றும் சாத்தியமானால் காணாமல்போனவர்களின் குடும்பங்களுடன் தொடர்புபடுத்துவது அடுத்த கட்ட முக்கிய நடவடிக்கைகளாக அமைகின்றன.

மனித எச்சங்களை அறிவியல் ரீதியாக ஆய்வு செய்வதுடன், தேவையான இடங்களில் மரபணு பரிசோதனைகள் உள்ளிட்ட தடயவியல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணும் முயற்சிகள் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


விபரங்களுக்கு
General19 August 2026
 செம்மணியின் சோகம் : நிறைவுறாத எண்களுடன் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் நிறைவு
International News

சமூக ஊடக விளம்பரத்துக்காக நெடுஞ்சாலையில் தவறான பாதையில் பயணம் செய்து உயிரிழந்த இளைஞர்கள்!

International 20 August 2026
சமூக ஊடக விளம்பரத்துக்காக நெடுஞ்சாலையில் தவறான பாதையில் பயணம் செய்து உயிரிழந்த இளைஞர்கள்!

ட்ரம்ப் அறிவிப்பு: ஈரான் மீது இதுவரை இல்லாத மிகக் கடுமையான பொருளாதாரத் நடவடிக்கை

International 20 August 2026
ட்ரம்ப் அறிவிப்பு: ஈரான் மீது இதுவரை இல்லாத மிகக் கடுமையான பொருளாதாரத் நடவடிக்கை

உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்தித்தார் முதலமைச்சர் விஜய்!

International 20 August 2026
உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்தித்தார் முதலமைச்சர் விஜய்!

அயோத்தி ராமர் கோவில் பிரசாதம் எனக்கூறி போலி இனிப்பு விற்பனை: அமேசன் நிறுவனத்துக்கு அபராதம்!

International 20 August 2026
அயோத்தி ராமர் கோவில் பிரசாதம் எனக்கூறி போலி இனிப்பு விற்பனை: அமேசன் நிறுவனத்துக்கு அபராதம்!

செர்பியாவில் எரியும் காட்டுத்தீயினை அணைக்க அதிநவீன ‘நீர்ப்பம்பி’ வானுர்தியை அனுப்பினார் புடின்!

International 19 August 2026
செர்பியாவில் எரியும் காட்டுத்தீயினை அணைக்க அதிநவீன ‘நீர்ப்பம்பி’ வானுர்தியை  அனுப்பினார் புடின்!

35 ஆண்டுகளுக்குப் பிறகு பங்களாதேஷில் ஜனாதிபதித் தேர்தல்: வாக்கெடுப்பு மூலம் தேர்வு!

International 19 August 2026
35 ஆண்டுகளுக்குப் பிறகு பங்களாதேஷில் ஜனாதிபதித் தேர்தல்: வாக்கெடுப்பு மூலம் தேர்வு!

செங்குத்தாகத் தரையிறங்கும் ரொக்கெட் - விண்வெளித் துறையில் சாதனை படைத்த சீனத் தனியார் நிறுவனம்!

International 19 August 2026
செங்குத்தாகத் தரையிறங்கும் ரொக்கெட் -  விண்வெளித் துறையில் சாதனை படைத்த சீனத் தனியார் நிறுவனம்!

மூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் அரச ஊழியர்களுக்கு விசேட சலுகை - தமிழ்நாடு அரசு தீர்மானம்

International 19 August 2026
மூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் அரச ஊழியர்களுக்கு விசேட சலுகை - தமிழ்நாடு அரசு தீர்மானம்

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சிற்றூந்து, ஓட்டுநர், உதவியாளர்: முதலமைச்சர் விஜய்யின் அதிரடி அறிவிப்பு

International 19 August 2026
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சிற்றூந்து, ஓட்டுநர், உதவியாளர்: முதலமைச்சர் விஜய்யின் அதிரடி அறிவிப்பு

"AI அம்மா!" - AI குழந்தை, AI காதலனுடன் வாழ்வதாகக் கூறி அதிர்ச்சி அளித்த பெண்

International 19 August 2026
"AI அம்மா!" - AI குழந்தை, AI காதலனுடன் வாழ்வதாகக் கூறி அதிர்ச்சி அளித்த பெண்

திராவிட முன்னேற்ற கழகத்தின் "செயல் தலைவர்" பொறுப்பு உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்க திட்டம்

International 19 August 2026
திராவிட முன்னேற்ற கழகத்தின் "செயல் தலைவர்" பொறுப்பு உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்க திட்டம்

காஸா நகருக்கு அருகே இஸ்ரேலிய ஆளில்லா வானூர்தித் தாக்குதல்: குழந்தை உட்பட 5 பேர் உயிரிழந்தனர்.

International 19 August 2026
காஸா நகருக்கு அருகே இஸ்ரேலிய ஆளில்லா வானூர்தித் தாக்குதல்: குழந்தை உட்பட 5 பேர் உயிரிழந்தனர்.

ட்ரம்பின் செல்வாக்கில் பாரிய சரிவு ஏற்பட்டமைக்கான காரணங்கள்

International 19 August 2026
 ட்ரம்பின் செல்வாக்கில் பாரிய சரிவு ஏற்பட்டமைக்கான காரணங்கள்

இடம்பெயர்ந்த 8.5 இலட்சம் லெபனான் மக்கள் தாயகம் திரும்பினர்: ஐ.நா. அகதிகள் ஆணையம்

International 19 August 2026
இடம்பெயர்ந்த 8.5 இலட்சம் லெபனான் மக்கள் தாயகம் திரும்பினர்: ஐ.நா. அகதிகள் ஆணையம்

சீனப் பொருளாதாரம் முதல் 7 மாதங்களில் ஸ்திரமான வளர்ச்சி: புள்ளியியல் துறை அறிவிப்பு

International 18 August 2026
சீனப் பொருளாதாரம் முதல் 7 மாதங்களில் ஸ்திரமான வளர்ச்சி: புள்ளியியல் துறை அறிவிப்பு
More News
General20 August 2026

இலங்கை சுங்கத்தின் பாரிய மோசடி - நண்பரை பாதுகாக்கிறாரா ஜனாதிபதி?

"இலங்கை வரலாற்றில் இடம்பெற்ற மற்றுமொரு பெருவாரியான மோசடி இதுவாகும். சுங்கத் திணைக்களத்திற்குள் ஏற்கனவே சர்ச்சையை ஏற்படுத்திய 123 கொள்கலன்களுக்குப் (Containers) புறம்பாகவே இந்த மோசடி இடம்பெற்றுள்ளது" எனக் கூறி நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக்க நேற்று (19) நாடாளுமன்றத்தில் பகிரங்க குற்றச்சாட்டொன்றை முன்வைத்தார்.இது தொடர்பாக நாட்டின் ஜனாதிபதி தெளிவான அறிக்கையொன்றை வெளியிட வேண்டும் என வலியுறுத்திய அவர், குறித்த விசாரணை அறிக்கையை அரசாங்கம் மறைப்பது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார்.இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக்க"40 அடி நீளமுடைய கொள்கலன் ஒன்றில் வாகனங்களின் உதிரிப் பாகங்கள், இருக்கைகள் மற்றும் இயந்திரங்கள் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. பொதுவாக இவ்வாறு பொருட்கள் இறக்குமதி செய்யப்படும் போது சுங்கத்தின் 3 நடைமுறைகள் பின்பற்றப்படும். இந்த கொள்கலன் 'சிவப்பு பாதைக்கு' (Red Channel) உட்படுத்தப்பட்டதால், இதனை நேரில் பரிசோதிப்பதுடன் இயந்திரங்கள் மூலமாகவும் சோதனையிட வேண்டும்.இதன்படி, சுங்கப் பணிப்பாளர் நாயகம் அருக்கொடவின் அறிவுறுத்தலின் பேரில் சுங்கத்தின் முதலாவது குழுவொன்று பரிசோதனைக்காக அனுப்பப்பட்டு, அதில் எந்தப் பிரச்சினையும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து, பிரதிச் சுங்கப் பணிப்பாளராக இருந்த என்.எஸ். குமாநாயக்க (தற்போது ஜனாதிபதியின் செயலாளர்) தலைமையில் இரண்டாவது குழு அனுப்பப்பட்டது. இதில் சோதனையிட்ட அதிகாரிகள், 'எந்தப் பிரச்சினையும் இல்லை, இதில் 7 இருக்கைகள் (Seats) மட்டுமே அதிகமாக உள்ளன' எனக்கூறி, அந்த 7 இருக்கைகளையும் அரசுடைமையாக்கினர்.எனினும், அங்கு மேலும் பல முறைகேடுகள் இருப்பதாக சுங்கத் பணிப்பாளர் நாயகத்துக்கு மீண்டும் முறைப்பாடு கிடைத்தது.அதன் பின்னர், இந்த விவகாரம் சுங்கத்தின் மத்திய புலனாய்வுப் பிரிவுக்குப் பரிந்துரைக்கப்பட்டது. அவர்கள் நடத்திய விசாரணையில் அந்த கொள்கலனில் 85 வகையான பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டது.ஆனால் சுங்க ஆவணப் பதிவேட்டில் 45 வகையான பொருட்கள் குறிப்பிடப்படவில்லை. அந்த 45 வகைகளுக்குள் அடங்கும் 355 அலகுகள் சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.அத்துடன், ஆவணங்களில் அறிவிக்கப்பட்ட 15 வகையான பொருட்களுக்குள் மேலும் 254 அலகுகள் அதிகமாகக் கொண்டுவரப்பட்டுள்ளன. அதுமட்டுமன்றி, குறைந்த வரி விதிக்கப்படும் 7 வகையான பொருட்கள் ஆவணத்தில் குறிப்பிடப்பட்டிருந்த போதிலும் அவை கொள்கலனில் இருக்கவில்லை.மேலும் 23 வகையான பொருட்களின் 474 அலகுகள் காணாமல் போயுள்ளன. இதில் இறக்குமதி அனுமதிப்பத்திரம் இல்லாத 122 வாகன இருக்கைகளும், ரிம்களுடன் கூடிய 18 சில்லுகளும் அடங்குகின்றன.இறுதியில், இந்த விசாரணை அறிக்கை 2026/01/19 ஆம் திகதி நிதி அமைச்சின் செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.எனினும், இந்த அறிக்கைகள் ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்ட போதிலும், தனக்கு நெருக்கமான அதிகாரி ஒருவரைப் பாதுகாப்பதற்காக இந்த விசாரணை அறிக்கை மறைக்கப்பட்டு மூடி மறைக்கப்பட்டுள்ளது.ஜனாதிபதி ஏன் இந்த அறிக்கையை மறைத்தார்? தனது நண்பரைப் பாதுகாப்பது ஏன்? இது குறித்து ஜனாதிபதி நாட்டுக்கு உடனடியாக விளக்கமளிக்க வேண்டும்" என டி.வி. சானக்க தெரிவித்துள்ளார்.

விபரங்களுக்கு
இலங்கை சுங்கத்தின் பாரிய மோசடி - நண்பரை பாதுகாக்கிறாரா ஜனாதிபதி?
General20 August 2026

வங்கித்துறை கடன் வழங்கல்: மத்திய வங்கியின் புதிய ஆய்வறிக்கை!

இலங்கையின் வங்கித் துறையில் கடன் வழங்குவதற்கான விருப்பம் நடப்பாண்டின் இரண்டாம் காலாண்டில் அதிகரித்துள்ள போதிலும், அதன் வளர்ச்சி வேகம் முதலாவது காலாண்டுடன் ஒப்பிடுகையில் மந்தமடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் புதிய கடன் வழங்கல் ஆய்வறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. மே மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட பணவியல் கொள்கை இறுக்கமாக்கலைத் தொடர்ந்து நிலவும் கடுமையான பணச் சூழலே இதற்கு முக்கிய காரணம் என மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.அனுமதிபெற்ற வர்த்தக வங்கிகள் மற்றும் சிறப்பு வங்கிகளை உள்ளடக்கி நடத்தப்பட்ட இந்த ஆய்வின்படி, சில்லறை, பெருநிறுவனம் (Corporate), சிறு மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகள் மற்றும் அரசுக்கு சொந்தமான நிறுவனங்கள் (ஆகிய நான்கு துறைகளிலும் கடன் வழங்குவதற்கான வங்கிகளின் ஆர்வம் இரண்டாம் காலாண்டில் உயர்ந்துள்ளது. பொருளாதார நிலைமைகளின் முன்னேற்றம், கொள்கை ஸ்திரத்தன்மை, சிறந்த திரவத்தன்மை (Liquidity) மற்றும் சொத்துக்களின் தரம் உயர்வடைந்தமை ஆகியன இதற்கு பிரதான காரணங்களாகும்.அத்துடன், மூன்றாம் காலாண்டிலும் கடன் வழங்கும் விருப்பம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டாலும், பணவீக்க அழுத்தம், செயல்பாட்டுச் செலவுகள் உயர்வு, மாற்று விகித நிலையற்ற தன்மை மற்றும் புவிசார் அரசியல் அநிச்சயங்கள் காரணமாக அதன் வேகம் மந்தமாகவே இருக்கும் என வங்கிகள் கணித்துள்ளன. மேலும் அரசுக்கு சொந்தமான நிறுவனத் துறைக்கான கடன் வழங்கல் விருப்பம் மூன்றாம் காலாண்டில் வீழ்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதேவேளை, இரண்டாம் காலாண்டில் அனைத்துத் துறைகளிலுமான கடன் தேவை அதிகரித்துள்ளது. அதிகரித்துவரும் நடைமுறை மூலதனத் தேவைகள், குறுகிய காலக் கடன்களுக்கான தேவை மற்றும் முதலீட்டு நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்பட்டமை ஆகியன இதற்கு வழிவகுத்துள்ளன. விசேடமாக, மூலோபாய உள்கட்டமைப்பு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி திட்டங்களுக்கான நிதி வசதிகள் காரணமாக அரசுக்கு சொந்தமான நிறுவனத் துறையின் கடன் தேவை தொடர்ந்து உயர்ந்துள்ளது.வங்கித் துறையின் மொத்த நடைமுறையில்லா கடன்களின் அளவு (அசல் அல்லது வட்டித் தொகையை குறிப்பிட்ட காலத்திற்குள் திரும்பச் செலுத்தத் தவறிய கடன்கள்) இரண்டாம் காலாண்டில் ஒட்டுமொத்தமாகக் குறைவடைந்துள்ளது. சில்லறைத் துறையின் இந்த கடன் நிலைமை சீரடைந்தமையே இதற்கு பிரதான காரணமெனினும், பெருநிறுவனம், சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சி மற்றும் அரசுக்கு சொந்தமான நிறுவனத் துறைகளில் மொத்த நடைமுறையில்லா கடன்களின் அளவு அதிகரித்துள்ளது. நாணய மாற்று விகித வீழ்ச்சியால் ஏற்பட்ட செலவு அழுத்தங்கள் மற்றும் மத்திய கிழக்கு நெருக்கடியின் வெளிப்புற தாக்கங்களால் கடன் வாங்கியவர்களின் மீளச்செலுத்தும் திறன் பலவீனமடைந்தமையே இதற்கு காரணம் என மத்திய வங்கி தெரிவித்துள்ளது.மேலும், இரண்டாம் காலாண்டில் வங்கிகளின் கடன் விண்ணப்ப நிராகரிப்பு விகிதம் முதலாவது காலாண்டுடன் ஒப்பிடுகையில் குறைவடைந்துள்ளது. பெருநிறுவனம் மற்றும் அரசுக்கு சொந்தமான நிறுவனங்களின் கடன் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் நிலை குறைந்தமையே இதற்கு முக்கிய காரணமாகும். இருப்பினும், கடுமையான கடன் மதிப்பீடு மற்றும் இடர் முகாமை அளவுகோல்கள் காரணமாக சில்லறை மற்றும் சிறு, நடுத்தர தொழில்முயற்சி துறைகளில் கடன் விண்ணப்ப நிராகரிப்பு விகிதம் உயர்ந்துள்ளதாக மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.%MCEPASTEBIN%

விபரங்களுக்கு
வங்கித்துறை கடன் வழங்கல்: மத்திய வங்கியின் புதிய ஆய்வறிக்கை!
General20 August 2026

கல்முனை வடக்கு ஆதார மருத்துவமனை ஆடைப் பிரச்சினை: அரசாங்கத்தின் நிலைப்பாட்டை அறிவித்த அமைச்சர்!

கல்முனை வடக்கு ஆதார மருத்துவமனையில் ஏற்பட்டுள்ள ஆடைப் பிரச்சினை தொடர்பில் அரசாங்கம் தமது நிலைப்பாட்டை நாடாளுமன்றில் வெளிப்படுத்தியுள்ளது.நாடாளுமன்றில் நேற்று இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் நிசாம் காரியப்பரால் கொண்டுவரப்பட்ட ஒத்திவைப்புவேளை விவாதத்தில் பங்கேற்ற சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ அரசாங்கத்தின் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தினார்.மக்கள் பிரதிநிதிகள் என்ற வகையில், இந்தச் சம்பவத்தை அனைவரும் மிகவும் நிதானத்துடனும் முதிர்ச்சியுடனும் பார்க்க வேண்டும் என்று அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.சமூக ஊடகங்களிலோ அல்லது வெளியிலோ வாக்கு வங்கியைக் குறிவைத்து வெளியிடப்படும் அறிக்கைகளையோ நடத்தைகளையோ அரசாங்கம் ஒருபோதும் அனுமதிக்காது என்றும் அவர் தெரிவித்தார்."பல இன மக்கள் வாழும், பல மதங்களைப் பின்பற்றும் மக்கள் வாழும், சிங்களம், தமிழ், ஆங்கிலம் போன்ற பல மொழிகளைப் பேசும் மக்கள் வாழும் நாடு இது என்பதை அனைவரும் ஏற்றுக்கொண்டிருக்கிறோம்.எனவே, பல கலாசாரங்களைக் கொண்ட ஒரு நாடான இலங்கையில் அந்தந்த கலாசாரங்களுக்கு ஏற்ப உடைகள், உணவுகள் மற்றும் பல்வேறு வழிபாட்டு முறைகள் உள்ளன. இவை அனைத்தின் சேர்க்கையும், ஒத்திசைவும், ஒற்றுமையும்தான் இலங்கை அரசாக நிலவுகிறது.இருப்பினும், இலங்கையின் அரசியல் வரலாற்றில், அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கும் அதைத் தக்கவைத்துக்கொள்வதற்கும் இனவாதப் பூச்சைப் பூசி ஆட்சி செய்தவர்களின் துரதிர்ஷ்டவசமான அனுபவங்கள் உள்ளன.ஆனால், தேசிய மக்கள் சக்தி என்ற வகையில், மிகவும் கடினமான சூழ்நிலையிலும்கூட அதிகாரத்திற்கு வர இனவாதத்தைப் பயன்படுத்தவில்லை. தேசிய மக்கள் சக்தி அதிகாரத்திற்கு வந்து சுமார் 11 மாதங்கள் ஆகின்ற நிலையில், இந்த நாட்டிலுள்ள இனவாதத்திற்கும் மத மோதல்களுக்கும் மீண்டும் இடமளிக்கவில்லை.இத்தகைய சிறிய சம்பவங்கள் நேர்ந்தாலும், தேவைப்பட்டால் சட்டத்தின் மூலமாகவும், விழிப்புணர்வின் மூலமாகவும், கலந்துரையாடல்கள் மூலமாகவும் தீர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.எனவே, கல்முனை மருத்துவமனை விடயம், தேவையில்லாத மோதல் நிலையாக வளர்ந்துவிடக் கூடாது என்பதிலும், சிறிய இனவாத குழுக்களுக்குப் பந்தடிக்கும் வாய்ப்பாக இது மாறக்கூடாது என்பதிலும் அனைவரும் கவனமாக நடந்துகொண்டனர்" என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.அரச சேவையில் சீருடை அணிந்து பணியாற்றும் ஊழியர்களும், ஆடை நடைமுறை அல்லது ஒழுங்குமுறை பின்பற்றப்படும் ஊழியர்களும் உள்ளனர்.சுகாதாரத் துறையைக் கருத்தில் கொள்ளும்போது:நோயாளிகளும் பொதுமக்களும் ஊழியர்களை எளிதாக அடையாளம் காண்பதற்காக,மருத்துவமனைகளுக்கும் சுகாதார நிறுவனங்களுக்கும் வருகை தரும் பொதுமக்களின் சுகாதாரப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகச் சீருடைகள் பயன்படுத்தப்படுகின்றன.சுகாதாரத் துறையில் சீருடைகளைத் தீர்மானிப்பது என்பது சாதாரணமான ஒன்றல்ல. நீண்டகாலக் கலந்துரையாடல்கள் மற்றும் சீருடைக் குழுவின் ஆலோசனைகளுக்குப் பிறகே, நோயாளி பராமரிப்பை எளிதாக்கவும் கிருமி பரவலைக் கட்டுப்படுத்தவும் ஏதுவாகச் சீருடைகள் தீர்மானிக்கப்படுகின்றன.சுகாதார அமைச்சில் சீருடைக்கு உரிமையுள்ள ஊழியர்களுக்குச் சீருடைக் கொடுப்பனவுகளும் வழங்கப்படுகின்றன.இதன்படி, 2025 ஜனவரி 1 ஆம் திகதி முதல், செவிலியர்களுக்கு 30,000 ரூபாய், குடும்ப சுகாதார அதிகாரிகளுக்கு 28,000 ரூபாய், சுகாதாரப் பரிசோதகர்களுக்கு 30,000 ரூபாய் மற்றும் இளநிலை ஊழியர்களுக்கு 18,600 ரூபாய் எனச் சீருடைக் கொடுப்பனவுகள் வழங்கப்படுகின்றன.இந்த நிலையில், கிழக்கு மாகாணத்தில் நோயாளிகளுக்கான சேவைகள் தொடர்ந்து கிடைக்கவும், சில குழுக்கள் இனவாத உணர்ச்சிகளைத் தூண்டுவதைத் தடுக்கவும் தற்காலிக அடிப்படையில் ஊழியர்களின் இடமாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.எனவே இந்த மோதல் பரவாமல் தடுக்க குறித்த நடவடிக்கை உதவியாக இருக்கும் என அரசாங்கம் நம்புவதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டுள்ளார்.சீருடையில் ஏதேனும் மாற்றம் செய்வதாக இருந்தால், அதை அமைச்சின் சீருடைக் குழுவிற்குச் சமர்ப்பித்து ஒப்புதல் பெற வேண்டும். அதற்கான யோசனைகளைச் சமர்ப்பித்து, கலந்துரையாடி, சுற்றறிக்கையை மாற்றுவதற்கான வேலைத்திட்டத்தை ஆரம்பிக்க முடியும். அதற்கு நாடாளுமன்றத்திலும் சுதந்திரம் உள்ளது. ஆனால், தற்போதைக்கு நடைமுறையிலுள்ள சுற்றறிக்கையின்படியே ஊழியர்கள் செயல்பட வேண்டும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.சமீபகாலமாக முஸ்லிம் யுவதிகள் சுகாதாரத் துறையில் இணைவதில் ஆர்வம் காட்டி வருவது மகிழ்ச்சியளிக்கிறது.பாரம்பரிய ஆடைகள் தொடர்பான பிரச்சினைகளால் ஒருவர் அரச சேவையில் இணைவது கட்டுப்படுத்தப்படுவதை அரசாங்கம் ஆதரிக்கவில்லை. அதற்கான வாய்ப்புகளும் சுதந்திரமும் வழங்கப்பட வேண்டும்.எதிர்காலத்தில் சிங்கள, தமிழ், முஸ்லிம் யாராக இருந்தாலும் சுகாதாரத் துறையில் இணைவதற்கும், அவர்களின் மத, கலாசார உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் தேவையான சீர்திருத்தங்கள் குறித்துக் கலந்துரையாட அரசாங்கம் தயாராக உள்ளது என்றும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

விபரங்களுக்கு
கல்முனை வடக்கு ஆதார மருத்துவமனை ஆடைப் பிரச்சினை: அரசாங்கத்தின் நிலைப்பாட்டை அறிவித்த அமைச்சர்!
General20 August 2026

மீண்டும் இலங்கையில் வங்குரோத்தா? ரணில்- கம்மன்பில கூற்றுக்கு பதில் வழங்கியுள்ள அனில் ஜயந்த

நடப்பு அரசாங்கம், எதிர்பார்த்ததை விட விரைவாக வெளிநாட்டுச் செலாவணி கையிருப்பைக் கட்டியெழுப்பியுள்ளதாக நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த தெரிவித்துள்ளார்.முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில ஆகியோர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொழும்பில் வெளியிட்ட கருத்துக்களுக்கு பதிலளிக்கும் வகையிலேயே இந்தத் தகவல் வெளியாகியுள்ளது."இலங்கை தற்போது 6 பில்லியன் அமெரிக்க டொலர்களையே கையிருப்பாகக் கொண்டுள்ளது. 2028 ஆம் ஆண்டு வெளிநாட்டுக் கடன்களைத் திருப்பிச் செலுத்தும்போது இந்த கையிருப்பு 15 பில்லியன்களாக இருக்க வேண்டும். எனவே அரசாங்கம் இன்னும் 9 பில்லியன் டொலர்களை கையிருப்பாகக் கொண்டுவர வேண்டும்; இல்லையேல் நாடு மீண்டும் வங்குரோத்து நிலைக்குச் செல்லும்" என்று ரணிலும் கம்மன்பிலவும் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.எனினும் இதனை மறுத்து, இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு மற்றும் பொருளாதாரம் குறித்து நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த கருத்து தெரிவித்துள்ளார்.பொருளாதார நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்தல், கடன்களைத் திருப்பிச் செலுத்துதல் மற்றும் இறக்குமதித் தடைகளைத் தளர்த்துதல் ஆகியவற்றுடன், இலங்கை தனது வெளிநாட்டுச் செலாவணி கையிருப்பை எதிர்பார்த்ததை விட விரைவாகக் கட்டியெழுப்ப முடிந்துள்ளதாக பிரதி அமைச்சர் அனில் ஜயந்த குறிப்பிட்டுள்ளார்.இலங்கை அரசாங்கத்தின் பொருளாதார நடவடிக்கைகளால் ஏற்பட்ட முன்னேற்றத்தின் காரணமாக, ஆரம்பத்தில் சர்வதேச நாணய நிதியத்தால் (IMF) கணிக்கப்பட்ட கையிருப்பு இலக்குகளை விடவும் சிறப்பான முன்னேற்றத்தை அடைய முடிந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் வாகன இறக்குமதிக்கு எவ்வித ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை. எனினும் பொருளாதார மீட்சிக்கு ஆதரவளிப்பதற்காக அரசாங்கம் பின்னர் அந்தத் தடைகளைத் தளர்த்த முடிவு செய்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.இதன்படி, தற்போது சுமார் 3.5 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான நாணயக் கடிதங்கள் (Letters of Credit - LC) திறக்கப்பட்டுள்ளன. அந்த வாகன இறக்குமதிகள் அனுமதிக்கப்பட்டிராவிட்டால், இலங்கையின் கையிருப்பு மேலும் 3.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் அதிகமாக இருந்திருக்கும்.இருப்பினும், வெளிநாட்டு கையிருப்பைச் சுமார் 6.6 பில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பராமரிக்க அரசாங்கத்தினால் முடிந்துள்ளது.இந்த நிலையில், வெளிநாட்டு கையிருப்பு நிலையை மீண்டும் கட்டியெழுப்பும் அதேவேளையில், இலங்கை தனது வெளிநாட்டுக் கடமைகளைத் தொடர்ந்து நிறைவேற்றி வருவதாகவும் பிரதி அமைச்சர் எடுத்துரைத்தார்.எரிபொருள் இறக்குமதியும் நாட்டின் வெளிநாட்டுச் செலாவணி கையிருப்பு மீது தொடர்ந்து அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. எரிபொருள் இறக்குமதிக்காகக் கணிசமான அளவு கையிருப்பு வெளியேறுகிறது; இவை தவிர்க்க முடியாத செலவுகளாகும்.இதன் காரணமாக, பொருளாதாரச் செயல்திறனை அளவிடும் ஒரே அளவுகோலாக மட்டும் பார்க்காமல், வெளிநாட்டு கையிருப்புகளை முதன்மையாக ஒரு பாதுகாப்பு அரணாகப் பார்க்க வேண்டும் என அனில் ஜயந்த வலியுறுத்தியுள்ளார்.பொருளாதாரச் செயற்பாடுகளை உயிர்ப்புடன் வைத்திருக்கும் அதேவேளையில், வளர்ச்சியைக் குன்றச் செய்யாமல் இந்த பாதுகாப்பு அரணை அரசாங்கம் கட்டியெழுப்பி வருகிறது என்றும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.நிகர வெளிநாட்டு கையிருப்பின் வளர்ச்சியே இலங்கையின் முக்கிய இலக்காக உள்ளது. இதன்படி, விவேகமான மத்திய வங்கி முகாமை மற்றும் நிதித்துறை ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்ட நடவடிக்கைகள் மூலம் இந்த இலக்கில் முன்னேற்றம் அடையப்பட்டுள்ளதாகவும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த தெரிவித்துள்ளார்.

விபரங்களுக்கு
மீண்டும் இலங்கையில் வங்குரோத்தா? ரணில்- கம்மன்பில கூற்றுக்கு பதில் வழங்கியுள்ள அனில் ஜயந்த
General20 August 2026

22க்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் 37 மனுக்கள் தாக்கல்!

நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ள 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி உயர் நீதிமன்றத்தில் இதுவரை 37 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.குறித்த சட்டமூலம் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவினால் நேற்றுமுன்தினம் (18) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உட்பட பல தரப்பினர் இந்த புதிய அரசியலமைப்புத் திருத்தத்துக்கு பலத்த எதிர்ப்பை வெளியிட்டு வந்த நிலையிலேயே இந்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.இந்தச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட முதல் நாளான நேற்றுமுன்தினமே, அதனை சவாலுக்கு உட்படுத்தி உயர் நீதிமன்றத்தில் 6 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், ஐக்கிய மக்கள் சக்தி, சர்வஜன பலய கட்சி மற்றும் சுயாதீன சட்டத்தரணிகள் சங்கம் உள்ளிட்ட தரப்பினரால் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், இந்த னுக்களை விசாரிக்க பூரண நீதியரசர்கள் குழாமை நியமிக்குமாறும் பல தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.இந்த மனுக்களில் 22 ஆவது திருத்தமானது நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையால் நிறைவேற்றப்பட்டு, சர்வஜன வாக்கெடுப்பினால் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டுள்ளது.இதேவேளை, 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்துக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்ய மேலும் இரண்டு வார காலம் அவகாசம் உள்ளதோடு, அதன் பின்னர் மூன்று வாரங்களுக்குள் இது தொடர்பான உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானம் சபாநாயகருக்கு அறிவிக்கப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

விபரங்களுக்கு
22க்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் 37 மனுக்கள் தாக்கல்!
International News

சமூக ஊடக விளம்பரத்துக்காக நெடுஞ்சாலையில் தவறான பாதையில் பயணம் செய்து உயிரிழந்த இளைஞர்கள்!

International 20 August 2026
சமூக ஊடக விளம்பரத்துக்காக நெடுஞ்சாலையில் தவறான பாதையில் பயணம் செய்து உயிரிழந்த இளைஞர்கள்!

ட்ரம்ப் அறிவிப்பு: ஈரான் மீது இதுவரை இல்லாத மிகக் கடுமையான பொருளாதாரத் நடவடிக்கை

International 20 August 2026
ட்ரம்ப் அறிவிப்பு: ஈரான் மீது இதுவரை இல்லாத மிகக் கடுமையான பொருளாதாரத் நடவடிக்கை

உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்தித்தார் முதலமைச்சர் விஜய்!

International 20 August 2026
உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்தித்தார் முதலமைச்சர் விஜய்!

அயோத்தி ராமர் கோவில் பிரசாதம் எனக்கூறி போலி இனிப்பு விற்பனை: அமேசன் நிறுவனத்துக்கு அபராதம்!

International 20 August 2026
அயோத்தி ராமர் கோவில் பிரசாதம் எனக்கூறி போலி இனிப்பு விற்பனை: அமேசன் நிறுவனத்துக்கு அபராதம்!

செர்பியாவில் எரியும் காட்டுத்தீயினை அணைக்க அதிநவீன ‘நீர்ப்பம்பி’ வானுர்தியை அனுப்பினார் புடின்!

International 19 August 2026
செர்பியாவில் எரியும் காட்டுத்தீயினை அணைக்க அதிநவீன ‘நீர்ப்பம்பி’ வானுர்தியை  அனுப்பினார் புடின்!

35 ஆண்டுகளுக்குப் பிறகு பங்களாதேஷில் ஜனாதிபதித் தேர்தல்: வாக்கெடுப்பு மூலம் தேர்வு!

International 19 August 2026
35 ஆண்டுகளுக்குப் பிறகு பங்களாதேஷில் ஜனாதிபதித் தேர்தல்: வாக்கெடுப்பு மூலம் தேர்வு!

செங்குத்தாகத் தரையிறங்கும் ரொக்கெட் - விண்வெளித் துறையில் சாதனை படைத்த சீனத் தனியார் நிறுவனம்!

International 19 August 2026
செங்குத்தாகத் தரையிறங்கும் ரொக்கெட் -  விண்வெளித் துறையில் சாதனை படைத்த சீனத் தனியார் நிறுவனம்!

மூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் அரச ஊழியர்களுக்கு விசேட சலுகை - தமிழ்நாடு அரசு தீர்மானம்

International 19 August 2026
மூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் அரச ஊழியர்களுக்கு விசேட சலுகை - தமிழ்நாடு அரசு தீர்மானம்

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சிற்றூந்து, ஓட்டுநர், உதவியாளர்: முதலமைச்சர் விஜய்யின் அதிரடி அறிவிப்பு

International 19 August 2026
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சிற்றூந்து, ஓட்டுநர், உதவியாளர்: முதலமைச்சர் விஜய்யின் அதிரடி அறிவிப்பு

"AI அம்மா!" - AI குழந்தை, AI காதலனுடன் வாழ்வதாகக் கூறி அதிர்ச்சி அளித்த பெண்

International 19 August 2026
"AI அம்மா!" - AI குழந்தை, AI காதலனுடன் வாழ்வதாகக் கூறி அதிர்ச்சி அளித்த பெண்

திராவிட முன்னேற்ற கழகத்தின் "செயல் தலைவர்" பொறுப்பு உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்க திட்டம்

International 19 August 2026
திராவிட முன்னேற்ற கழகத்தின் "செயல் தலைவர்" பொறுப்பு உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்க திட்டம்

காஸா நகருக்கு அருகே இஸ்ரேலிய ஆளில்லா வானூர்தித் தாக்குதல்: குழந்தை உட்பட 5 பேர் உயிரிழந்தனர்.

International 19 August 2026
காஸா நகருக்கு அருகே இஸ்ரேலிய ஆளில்லா வானூர்தித் தாக்குதல்: குழந்தை உட்பட 5 பேர் உயிரிழந்தனர்.

ட்ரம்பின் செல்வாக்கில் பாரிய சரிவு ஏற்பட்டமைக்கான காரணங்கள்

International 19 August 2026
 ட்ரம்பின் செல்வாக்கில் பாரிய சரிவு ஏற்பட்டமைக்கான காரணங்கள்

இடம்பெயர்ந்த 8.5 இலட்சம் லெபனான் மக்கள் தாயகம் திரும்பினர்: ஐ.நா. அகதிகள் ஆணையம்

International 19 August 2026
இடம்பெயர்ந்த 8.5 இலட்சம் லெபனான் மக்கள் தாயகம் திரும்பினர்: ஐ.நா. அகதிகள் ஆணையம்

சீனப் பொருளாதாரம் முதல் 7 மாதங்களில் ஸ்திரமான வளர்ச்சி: புள்ளியியல் துறை அறிவிப்பு

International 18 August 2026
சீனப் பொருளாதாரம் முதல் 7 மாதங்களில் ஸ்திரமான வளர்ச்சி: புள்ளியியல் துறை அறிவிப்பு
Sports Stories
Explore More
பாகிஸ்தானில் இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு தொடர்!

பாகிஸ்தானில் இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு தொடர்!

எதிர்வரும் ஒக்டோபர் 9 ஆம் திகதி முதல் நவம்பர் 21 ஆம் திகதி வரை மூன்று அணிகள் பங்கேற்கும் ஒருநாள் முத்தரப்புத் தொடர் உள்ளிட்ட சர்வதேச கிரிக்கெட் அட்டவணைக்காக இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளைத் தமது நாட்டுக்கு வரவேற்கவுள்ளதாகப் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.இதன்படி, இலங்கை அணி ஒக்டோபர் 4 ஆம் திகதியன்று பாகிஸ்தானைச் சென்றடையும். அத்துடன், ஒக்டோபர் 9, 11 மற்றும் 13 ஆகிய திகதிகளில் ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக மூன்று இருபதுக்கு 20 போட்டிகளுடன் தமது சுற்றுப்பயணத்தை இலங்கை அணி ஆரம்பிக்கவுள்ளது.இதனைத் தொடர்ந்து, ஒக்டோபர் 18 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை ராவல்பிண்டி மற்றும் லாகூரில் இறுதிப் போட்டி உட்பட ஏழு போட்டிகள் கொண்ட ஒருநாள் முத்தரப்புத் தொடரில் பாகிஸ்தான், இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் பங்கேற்கவுள்ளன.இந்த முத்தரப்புத் தொடர் ஒக்டோபர் 18 அன்று ராவல்பிண்டியில் பாகிஸ்தானும் இலங்கையும் மோதும் போட்டியுடன் ஆரம்பமாகவுள்ளது. அதனைத் தொடர்ந்து ஒக்டோபர் 20 அன்று பாகிஸ்தானும் இங்கிலாந்தும், ஒக்டோபர் 22 ஆம் திகதி இலங்கையும் இங்கிலாந்தும் மோதவுள்ளன.பின்னர் இத்தொடர் லாகூருக்கு மாற்றப்பட்டு, அங்கு ஒக்டோபர் 25 ஆம் திகதியன்று பாகிஸ்தான் இங்கிலாந்தையும், ஒக்டோபர் 27 ஆம் திகதி இலங்கையையும் எதிர்கொள்ளவுள்ளது. இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் ஒக்டோபர் 29 ஆம் திகதி மீண்டும் ஒரு போட்டியில் பங்கேற்கவுள்ளன.இத்தொடரில் புள்ளிப் பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் பெறும் அணிகள் ஒக்டோபர் 31 ஆம் திகதி அன்று கடாபி மைதானத்தில் நடைபெறும் இறுதிப் போட்டியில் மோதவுள்ளன.முத்தரப்புத் தொடரைத் தொடர்ந்து, நவம்பர் 4 ஆம் திகதி முதல் 6 ஆம் திகதி வரை இஸ்லாமாபாத்தில் மூன்று நாட்கள் கொண்ட பயிற்சிப் போட்டியில் இலங்கை அணி விளையாடவுள்ளது. அதனைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இலங்கை பங்கேற்கவுள்ளது.இதன்படி, முதலாவது டெஸ்ட் போட்டி நவம்பர் 9 ஆம் திகதி முதல் 13 ஆம் திகதி வரை ராவல்பிண்டியிலும், இரண்டாவது டெஸ்ட் போட்டி நவம்பர் 17 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை லாகூரில் உள்ள கடாபி மைதானத்திலும் நடைபெறும். இந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளும் ஐசிசி உலக டெஸ்ட் செம்பியன்ஷிப் 2025-27 சுழற்சியின் ஒரு பகுதியாக இடம்பெறவுள்ளன.

விபரங்களுக்கு
கிராண்ட் செஸ் டூர் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார் பிரக்ஞானந்தா!

கிராண்ட் செஸ் டூர் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார் பிரக்ஞானந்தா!

அமெரிக்காவில் நடைபெறும் சிங்க்பீல்ட் கிண்ணம் (Sinquefield Cup) செஸ் தொடரில் பிரான்சின் மேக்சிம் வச்சியர்-லகிராவை (Maxime Vachier-La Guaira) வீழ்த்தி, 2026 கிராண்ட் செஸ் டூர் (Grand Chess Tour) இறுதிப்போட்டிக்கு இந்திய இளம் கிராண்ட்மாஸ்டரான பிரக்ஞானந்தா தகுதி பெற்றுள்ளார். இந்த வெற்றியின் மூலம் இந்திய கிளாசிக்கல் செஸ் தரவரிசையில் அவர் முதலிடத்தை தக்கவைத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 8 ஆவது சுற்றில் பிரான்ஸ் வீரர் மேக்சிம் வச்சியர்-லகிராவை 27 நகர்வுகளிலேயே வீழ்த்தி பிரக்ஞானந்தா அபார வெற்றி பெற்றார். இந்தப் போட்டியின் வெற்றியைத் தொடர்ந்து, நேரலை கிளாசிக்கல் செஸ் தரவரிசையில் இந்தியாவில் முதலிடத்தையும், உலக அளவில் 8 ஆவது இடத்தையும் பிடித்து, அவர் அசத்தியுள்ளார். இந்த நிலையில் தொடரின் கடைசி சுற்றுக்கு முன்னதாகவே 2026 கிராண்ட் செஸ் டூர் இறுதிப்போட்டிக்கான இடத்தை பிரக்ஞானந்தா உறுதி செய்துள்ளார்.

விபரங்களுக்கு
பாகிஸ்தான் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டி: பாபர் அசாம் இன்றி களமிறங்கிய பாகிஸ்தான்!

பாகிஸ்தான் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டி: பாபர் அசாம் இன்றி களமிறங்கிய பாகிஸ்தான்!

பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி, லீட்ஸ் நகரில் உள்ள ஹெடிங்லே (Headingley) மைதானத்தில் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் இடைக்கால அணித்தலைவராக மீண்டும் பதவியேற்றுள்ள ஜோ ரூட் (Joe Root) நாணய சுழற்சியில் வெற்றி பெற்று பந்துவீச்சைத் தெரிவு செய்தார்.கையில் ஏற்பட்ட காயம் காரணமாக பாகிஸ்தான் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரரான பாபர் அசாம் (Babar Azam) இந்தப் போட்டியில் விளையாடவில்லை. அவருக்குப் பதிலாக சல்மான் அலி ஆகா (Salman Ali Agha) பாகிஸ்தான் அணியை வழிநடத்துகிறார்.இங்கிலாந்து அணியில் பென் ஸ்டோக்ஸ் (Ben Stokes) சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, ஜோ ரூட் மீண்டும் அணித்தலைவராக செயற்படுவதோடு மார்கஸ் டிரெஸ்கோதிக் (Marcus Trescothick) இங்கிலாந்து அணியின் இடைக்காலப் பயிற்றுவிப்பாளராகச் செயற்படுகின்றார்.இந்தநிலையில், பாகிஸ்தான் அணி 23 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து துடுப்பெடுத்தாடி வந்த நிலையில் மழை காரணமாக போட்டி இடைநிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

விபரங்களுக்கு
காலி டெஸ்டில் மனோதத்துவ ஆட்டம்: ஜெய்ஸ்வாலின் தூண்டிலில் சிக்கி அடுத்த பந்திலேயே ஆட்டமிழந்த திக்வெல்ல!

காலி டெஸ்டில் மனோதத்துவ ஆட்டம்: ஜெய்ஸ்வாலின் தூண்டிலில் சிக்கி அடுத்த பந்திலேயே ஆட்டமிழந்த திக்வெல்ல!

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி, காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் நிலையில், இந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கும் இலங்கை துடுப்பாட்ட வீரர் நிரோஷன் திக்வெல்லவுக்கும் இடையே நடந்த சுவாரஸ்யமான உரையாடலைத் தொடர்ந்து, திக்வெல்ல அடுத்த பந்திலேயே ஆட்டமிழந்த சம்பவம் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. களத்தில் திக்வெல்ல துடுப்பாட்டம் செய்து கொண்டிருந்த போது, அவரை அதிரடி அடிகளை அடிக்குமாறு உற்சாகப்படுத்திய ஜெய்ஸ்வால், "வாருங்கள், உங்களிடமிருந்து சில சிக்ஸர்களை நாங்கள் பார்க்க வேண்டும்!" எனக் கூறினார். அதற்கு திக்வெல்ல, "நீங்கள் என்னை ஐபிஎல் தொடருக்கு அழைத்துச் சென்றால்..." எனக் கேட்க, உடனடியாகப் பதிலளித்த ஜெய்ஸ்வால், "சில சிக்ஸர்களை அடியுங்கள், அதற்குப் பிறகு நான் உங்களை அழைத்துச் செல்கிறேன்!" என்று தெரிவித்தார். இந்த நகைச்சுவையான உரையாடல் நடந்த அடுத்த பந்திலேயே, ஆட்டத்திற்கு தூண்டப்பட்ட திக்வெல்ல எதிர்பாராத விதமாக தனது விக்கெட்டைப் பறிகொடுத்து ஆட்டமிழந்தார். திக்வெல்லவை கவனச்சிதறலுக்கு உள்ளாக்கி விக்கெட் வீழ்த்திய ஜெய்ஸ்வாலின் இந்த மனோதத்துவ ஆட்டம் (Mind Game), போட்டியின் முக்கிய விவாதப் பொருளாக மாறியுள்ளது.

விபரங்களுக்கு
இந்திய அணியின் பந்து வீச்சில் சுருண்டது இலங்கை!

இந்திய அணியின் பந்து வீச்சில் சுருண்டது இலங்கை!

சுற்றுலா இந்திய மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே காலி மைதானத்தில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 165 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இன்று அபார வெற்றி பெற்றது.முன்னதாக போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி தமது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இந்திய அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 462 ஓட்டங்களை குவித்தது.துடுப்பாட்டத்தில் இந்திய அணியின் சார்பில் தேவ்தத் படிக்கல் 167 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தார்.இதனையடுத்து தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணி, இந்திய பந்து வீச்சாளர் மானவ் சுதரின் பந்துவீச்சில் தடுமாறியது.இருப்பினும் சொனால் தினுஷ சதம் கடந்ததுடன் நிரோஷன் டிக்வெல்ல 80 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். எனினும் இலங்கை அணி 284 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. இதனால் இந்தியா 178 ஓட்டங்கள் முன்னிலை பெற்றது.இதனையடுத்து தமது இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இந்திய அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 193 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.இந்த இன்னிங்ஸில் ரிஷப் பண்ட் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 100ஆவது சிக்ஸரைப் பதிவு செய்து புதிய சாதனை படைத்தார்.இந்தநிலையில் இலங்கை அணிக்கு 372 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.அதன்படி இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 206 ஓட்டங்களை மாத்திரமே பெற்று இன்று தோல்வியை தழுவியது.மானவ் சுதர் 2ஆவது இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.இதற்கமைய 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற அடிப்படையில் இந்திய அணி முன்னிலை வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

விபரங்களுக்கு
சந்திமாலுக்குப் பதிலாக பசிந்து சூரியபண்டார சேர்ப்பு!

சந்திமாலுக்குப் பதிலாக பசிந்து சூரியபண்டார சேர்ப்பு!

இந்திய அணிக்கு எதிரான போட்டியில் காயமடைந்த தினேஷ் சந்திமாலுக்குப் பதிலாக, மாற்று வீரராக பசிந்து சூரியபண்டார இலங்கை குழாமில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.இந்தப் போட்டிக்கான மாற்று வீரர் சேர்க்கைக்குப் போட்டியின் மத்தியஸ்தரும் அனுமதி வழங்கியுள்ளார்.போட்டியின் நான்காம் நாளில் பந்தைத் தடுக்க முயன்றபோது சந்திமாலின் தோள்பட்டை மற்றும் தலை மைதானத்தில் பலமாக மோதியதால் அவர் உபாதைக்கு உள்ளானார்.அதனைத் தொடர்ந்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக அவர் ஸ்கேன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.குறித்த பரிசோதனையில் அவருக்குத் தீவிர உள்காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.இருப்பினும், அணியின் மருத்துவர் மற்றும் உடலியக்கவியல் சிகிச்சை நிபுணர் ஆகியோரால் சந்திமாலின் உடல்நிலை மேலும் பரிசோதிக்கப்பட்டு அவதானிக்கப்பட்டு வருகின்றது

விபரங்களுக்கு
முதலாவது டெஸ்ட்டில் வெற்றிபெற இலங்கை அணிக்கு 372 ஓட்டங்கள் இலக்கு!

முதலாவது டெஸ்ட்டில் வெற்றிபெற இலங்கை அணிக்கு 372 ஓட்டங்கள் இலக்கு!

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில், இலங்கை அணி வெற்றிபெறுவதற்காக 372 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில், இந்திய அணி தனது முதலாவது இன்னிங்ஸில் 462 ஓட்டங்களையும், இலங்கை அணி தனது முதலாவது இன்னிங்ஸில் 284 ஓட்டங்களையும் பெற்றன.இதனையடுத்து 178 ஓட்டங்கள் முன்னிலையுடன் தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த இந்திய அணி, 4ஆம் நாளான இன்று 193 ஓட்டங்களுக்குச் சகல விக்கெட்டுகளையும் இழந்தது.இந்திய அணி சார்பில் துடுப்பாட்டத்தில் ரிஷப் பண்ட் 66 ஓட்டங்களையும், தேவ்தத் படிக்கல் 44 ஓட்டங்களையும் பெற்றனர்.பந்துவீச்சில் இலங்கை அணி சார்பில் அசித பெர்னாண்டோ 31 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளையும், பிரபாத் ஜயசூரிய 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.இதன்படி, முதலாம் இன்னிங்ஸ் முன்னிலையையும் சேர்த்து இந்திய அணி 371 ஓட்டங்களால் முன்னிலையில் உள்ள நிலையில், இலங்கை அணிக்கு 372 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விபரங்களுக்கு
புதிய விதியின் கீழ், களத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முதல் வீரர் நெய்மர்!

புதிய விதியின் கீழ், களத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முதல் வீரர் நெய்மர்!

பிரேசில் சீரி ஏ (Serie A) தொடரில் கோல் காப்பாளர்களின் நேரத்தை வீணடிக்கும் செயல்களைத் தடுக்கும் வகையில் சோதனை முறையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய விதியின் கீழ், களத்திலிருந்து ஒரு நிமிடம் வெளியேற்றப்பட்ட முதல் வீரர் என்ற பெயரை சாண்டோஸ் (Santos) அணியின் தலைவரான நெய்மர் பெற்றுள்ளார். புதிய விதியின் கீழ், ஆட்டம் நடைபெறும் போது கோல் காப்பாளர் மருத்துவ சிகிச்சை பெற வேண்டிய சூழல் ஏற்பட்டால், போட்டி மீண்டும் ஆரம்பிக்கும் போது 1 நிமிடத்திற்கு ஒரு வெளிக்கள வீரரை (outfield player) பயிற்சியாளர் போட்டிக்குள் ஈடுபடுத்தவேண்டும்;. பயிற்சியாளர் 10 வினாடிகளுக்குள் எந்த வீரரையும் குறிப்பிடத் தவறினால், அணியின் தலைவரே 1 நிமிடம் களத்தை விட்டு வெளியேற வேண்டும் என்பது விதியாகும். இந்தநிலையில், வாஸ்கோ டகாமாவுக்கு (Vasco da Gama) எதிரான போட்டியில் சாண்டோஸ் கோல் காப்பாளர் கேப்ரியல் பிராஸாவ் (Gabriel Brazão) மருத்துவ சிகிச்சை கோரிய போது, சாண்டோஸ் பயிற்சியாளர் 10 வினாடிகளுக்குள் எந்த வீரரையும் குறிப்பிடவில்லை. இதனையடுத்து, நெய்மரை 1 நிமிடம் வெளியேறுமாறு நடுவர் உத்தரவிட்டார். இந்தச் சம்பவத்திற்கு மத்தியிலும் சாண்டோஸ் அணி 3-0 என்ற கோல் கணக்கில் இந்தப்போட்டியில் வெற்றி பெற்றது. இந்த புதிய சோதனை விதி இங்கிலீஷ் பிரீமியர் லீக் உள்ளிட்ட பிற தொடர்களிலும் செயல்படுத்தப்படவுள்ளது.

விபரங்களுக்கு
Business Stories
Explore More
சுத்தமாக்கப்பட்ட சிவனொளிபாதமலை : சியபத பினான்ஸின் பசுமை முன்னெடுப்பு திட்டம்

சுத்தமாக்கப்பட்ட சிவனொளிபாதமலை : சியபத பினான்ஸின் பசுமை முன்னெடுப்பு திட்டம்

இலங்கையின் முன்னணி நிதி நிறுவனமான சியபத பினான்ஸ் பிஎல்சி, தனது 21ஆவது ஆண்டு நிறைவு மற்றும் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்திருந்த '2026 சிவனொளிபாதமலை சுத்திகரிப்பு திட்டம்' வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. கடந்த ஜூன் 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டது. சியபத பினான்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மதிஷ ஹேவவித்தாரண மற்றும் சிரேஷ்ட நிர்வாகக் குழுவின் தலைமையில், 50-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் இந்தத் தூய்மைப் பணியில் ஈடுபட்டனர். இதன்போது ஒரே நாளில் சுமார் ஒரு டொன் அளவிலான பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கப்பட்டது. அத்துடன் புனித ஸ்தலத்தைப் பாதுகாப்பதற்கான கழிவு முகாமைத்துவம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமான சிவனொளிபாதமலை சரணாலயம், நாட்டின் அபூர்வ தாவரங்கள், விலங்கினங்கள் மற்றும் களனி, களு, வளவை ஆகிய முக்கிய ஆறுகளின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளைக் கொண்டுள்ள சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த இடமாகும். அதிகரித்து வரும் யாத்ரீகர்களின் வருகையால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளைக் குறைப்பதே இந்த திட்டத்தின் பிரதான நோக்கமாகும். சிவனொளிபாதமலை முதன்மை தலைமைத் துறவி பெங்கமுவே தம்மதின்ன தேரரின் வழிகாட்டுதலின் கீழ், மஸ்கெலிய பிரதேச சபை, வனவிலங்கு பாதுகாப்புத் துறை மற்றும் நல்லதண்ணி காவல்துறை ஆகியவற்றின் முழுமையான ஆதரவுடன் இந்த கூட்டுப் பாதுகாப்பு முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

விபரங்களுக்கு
பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் சாதனை படைத்த வீரர்களுக்கு டயலொக் நிறுவனம் சிறப்பு கௌரவம்

பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் சாதனை படைத்த வீரர்களுக்கு டயலொக் நிறுவனம் சிறப்பு கௌரவம்

இலங்கையின் முதன்மைத் தொலைத்தொடர்புச் சேவை வழங்கியும் விளையாட்டுத்துறையின் பிரதான அனுசரணையாளருமான Dialog Axiata PLC நிறுவனம், இந்தமுறை பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் இலங்கைக்குப் பெருமை சேர்த்த வீரர்களைச் சிறப்பாகக் கெளரவித்துள்ளது.இதற்கமைய, நேற்று (05) இடம்பெற்ற பொதுநலவாய விளையாட்டு வீரர்களுக்கான மக்கள் வரவேற்பு வீதிப் பேரணியின் போது, Dialog Axiata PLC நிறுவனத்தின் தலைமை அலுவலக வளாகத்தில் இந்த கௌரவிப்பு நிகழ்வு நடைபெற்றது.பொதுநலவாய விளையாட்டு வரலாற்றில் தடகளப் பிரிவில் இலங்கைக்காக முதன்முறையாகத் தங்கம் வென்ற ருமேஷ் தரங்க மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற பாலித பண்டார ஆகியோருக்கு, Dialog Axiata PLC நிறுவனத்தின் குழுமத் தலைமைச் செயல் அதிகாரி சுபுன் வீரசிங்கவினால் சிறப்புப் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.2028 லொஸ் ஏஞ்சலஸ் ஒலிம்பிக் போட்டி வரை இலங்கை தேசிய ஒலிம்பிக் குழுவின் உத்தியோகபூர்வ தொலைத்தொடர்பு பங்காளியாகச் செயற்படும் டயலொக் நிறுவனம், நாட்டின் முதன்மை ஒலிம்பிக் எதிர்பார்ப்பான ருமேஷ் தரங்க உள்ளிட்ட திறமையாளர்களையும், மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுத்துறையின் முதன்மை அனுசரணையாளராகப் பாலித பண்டார உள்ளிட்ட விளையாட்டு வீரர்களையும் தொடர்ந்து பலப்படுத்த அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது.

விபரங்களுக்கு
 ஒப்பற்ற எரிபொருள் சிக்கனத்துடன் இலங்கையின் வீதிகளை அலங்கரிக்கவுள்ள TVS Sport 110

ஒப்பற்ற எரிபொருள் சிக்கனத்துடன் இலங்கையின் வீதிகளை அலங்கரிக்கவுள்ள TVS Sport 110

நாட்டில் உயர் ரக மோட்டார் வாகன விநியோக நிறுவனமாகத் திகழ்ந்து வருகின்ற TVS Lanka (Pvt) Ltd, இலங்கை மக்களுக்கு ஒப்பற்ற எரிபொருள் சிக்கனம் மற்றும் நம்பிக்கையான புதிய சகாப்தொன்றுக்கு வழிவகுத்துள்ளது. அந்த வகையில், புத்தம் புதிய TVS Sport 110 மோட்டார் சைக்கிள்களை உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளமை குறித்து சமீபத்தில் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.உலகளவில் அங்கீகாரம் பெற்ற TVS Sport 110 மோட்டார் வாகனத்தின் புதிய வடிவமைப்புப்பானது பிரயாணத் துறையில் திருப்புமுனையை ஏற்படுத்தும் ஆற்றல் மிக்கது. ஒப்பற்ற எரிபொருள் சிக்கனம் மற்றும் நவீன வடிவமைப்புடன் மேம்பட்ட செயல்திறனுடன் இலங்கையின் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்களுக்காக சிறப்பாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. 'மைலேஜ் கிங்' (Mileage King) என பிரபலமாக அறியப்படுகின்ற TVS Sport 110, எரிபொருள் பாவனையில் சிக்கனம் கொண்ட 109.7cc Duralife இயந்திரத்தைக் கொண்டது. 100cc இயந்திர வலுப் பிரிவில் TVS Motor நிறுவனத்தின் காப்புரிமை பெற்ற ET-Fi (Eco-Thrust Fuel Injection) தொழில்நுட்பத்தைக் கொண்ட முதலாவது மற்றும் ஒரேயொரு மோட்டார் சைக்கிள் இது மாத்திரமே என்பது சிறப்பம்சம். இந்த மேம்பாடானது எரிபொருள் பாவனையின் சிக்கனத்தை 15% ஆல் அதிகரிக்கச் செய்துள்ளதுடன், லிட்டருக்கு 80 கிமீ என்ற ஒப்பற்ற மைலேஜ் பாவனைக்கும் வழிவகுத்துள்ளது. சீரான இயந்திர வலுவைக் கொண்டுள்ளதுடன், நீண்ட நேரம் அணைத்து வைக்கப்பட்ட இயந்திரத்தை சிறப்பாக மீண்டும் இயக்கும் இயல்பானது.புத்தாக்கமிக்க பக்கவாட்டு ஸ்டாண்ட் குறியீடு, பக்கவாட்டு ஸ்டாண்ட் போடப்படும் போது தானாகவே அணைந்து விடும் இயந்திரம் ஆகிய தொழில்நுட்பங்களை இப்புதிய TVS Sport 110 மோட்டார் சைக்கிள்கள் கொண்டுள்ளன. பிரேக்குகளைப் பிரயோகிக்கும் போது உறுதிப்பாட்டை மேம்படுத்துவதற்கு 'synchronised braking technology' (SBT) என்ற தொழில்நுட்பத்தையும் அது கொண்டுள்ளது. பின்புறத்தில் சீர் செய்யக்கூடிய ஐந்து படிப்புக்கொண்ட hydraulic shock absorber மற்றும் சோர்வில்லாத நீண்டதூரப் பயணத்திற்கென பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட ஆசனங்கள் ஆகிய சிறப்பம்சங்களையும் இது கொண்டுள்ளது.“இலங்கையில் மோட்டார் சைக்கிள் பிரயாணிகள் இரண்டு அடிப்படை விடயங்களுக்கு தற்போது முன்னுரிமையளித்து வருகின்றனர். மிக நீண்ட கால உழைப்பு மற்றும் உச்ச எரிபொருள் சிக்கனம் ஆகியவற்றுக்கு அவர்கள் முதலிடம் அளிக்கின்றனர். TVS Sport 110 மோட்டார் சைக்கிளை அறிமுகப்படுத்தி அவர்களின் எதிர்பார்ப்புக்களை நாம் நிறைவேற்றியுள்ளோம். இதை வெறுமனே ஒரு வாகனம் என்று கூறிவிடுவதன் நின்று விட முடியாது. எரிபொருள் செலவுகள் அதிகரித்துச் செல்லும் நிலையில், தரம் மற்றும் அழகிய தோற்றம் ஆகியவற்றிற்கு எவ்விதமான குறைவுமின்றி தமது பிரயாணங்களை மேற்கொள்ள விரும்புகின்ற கடின உழைப்பாளிகள் மற்றும் அன்றாடம் பிரயாணிப்பவர்களுக்கான உகந்த தீர்வாக இது காணப்படுகின்றது.” என்று TVS Lanka (Pvt) Ltd நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி திரு. கீதால் அந்தனி அவர்கள் கருத்து தெரிவித்தார்.அதிநவீன தோற்றத்தைக் கொண்டுள்ள TVS Sport 110 மோட்டார் சைக்கிள்கள் உயர்ரக 3D chrome இலச்சினைகள், பளபளப்பான தோற்றத்தைக் கொண்ட LED DRL விளக்குகள், மற்றும் புதுப்பிக்கப்பட்ட டிஜிட்டல்-அனலொக் கட்டுப்பாட்டு முகத்திரை போன்ற சிறப்பம்சங்களையும் இது கொண்டுள்ளது. இலங்கையின் பல்வேறுபட்ட வீதி அமைப்புக்களுக்கு உகந்ததாக தரைக்கும், மோட்டார் சைக்கிளின் அடிப்பாகத்திற்கும் இடையில் 175 மிமீ தாராள இடைவெளியையும் கொண்டுள்ளது.கருப்பு நியோன் மற்றும் பழுப்பு சிவப்பு உள்ளிட்ட பல்வேறு வர்ணங்களில் TVS Sport 110 மோட்டார் சைக்கிள் வெளிவருவதுடன், TVS Lanka நாடளாவிய ரீதியில் கொண்டுள்ள பரந்தளவிலான வலையமைப்பினூடாக கிடைக்கப்பெறுகின்றது.“மிகச் சிறந்த வாகனத்தை வழங்குவதற்கும் அப்பால், சந்தையில் மிகக் குறைந்த தொகையில் அதனை சொந்தமாக்கிக் கொள்ள உறுதி செய்வதிலும் நாம் அர்ப்பணிப்புடன் உள்ளோம். உதிரிப்பாகங்களை இலகுவில் பெற்றுக்கொள்வதற்கு ஏதுவாக நாடெங்கிலும் 400 க்கும் மேற்பட்ட வலையமைப்பு மையங்களை நாம் நிறுவியுள்ளோம். அவற்றினூடாக சந்தையில் அசல் உதிரிப்பாகங்களை மிகவும் சிக்கனமாக ஆகக் குறைந்த விலைகளில் நாம் வழங்குகின்றோம். உதிரிப்பாகங்கள் 100% கிடைப்பதை TVS Lanka உறுதிப்படுத்துவதுடன், அசல் பாகங்கள் அனைத்திற்கும் முழுமையான உத்தரவாதத்தையும் வழங்குகின்றது. எம்மிடம் மோட்டார் சைக்கிள்களை வாங்குபவர்கள் முழுமையான மன நிம்மதியுடன், தங்குதடையின்றி போக்குவரத்து செய்வதை நாம் உறுதி செய்கின்றோம்,” என்று TVS Lanka நிறுவனத்தின் சந்தைப்படுத்தலுக்கு பின்னரான செயல்பாடுகளுக்கான உதவிப் பொது மேலாளர் இந்திக புஷ்பகுமார அவர்கள் கருத்து தெரிவித்தார்.ஐந்து ஆண்டுகள் அல்லது 76,000 கிமீ என்ற முழுமையான உத்தரவாதம், உதிரிப்பாகங்களை குறைந்த விலைகளில் தங்குதடையின்றி பெற்றுக்கொள்ளல், மற்றும் விற்பனைக்குப் பின்னரான சேவைகளை வழங்குவதற்கான பிரத்தியேக அணி ஆகியவற்றின் பக்கபலத்துடன், மோட்டார் சைக்கிள் துறையில் வாடிக்கையாளர்களைத் திருப்திப்படுத்துவதில் சிறந்த தரத்தரங்களை TVS Lanka நிறுவனம் தொடர்ந்தும் நிலைநாட்டி வருகின்றது.உங்களுக்கு அருகாமையிலுள்ள TVS காட்சி அறைக்கு வருகை தந்தோ அல்லது www.tvslanka.lk என்ற இணையத்தளம் மூலமாகவோ, அல்லது 0114 600 500 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தியோ மேலதிக விபரங்களை அறிந்து கொள்ள முடியும்.TVS Lanka (Pvt) Ltd நிறுவனம் தொடர்பான விபரங்கள்இந்தியாவைத் தளமாகக் கொண்ட TV Sundram Iyengar and Sons (Pvt) Ltd நிறுவனத்தின் முழுமையான உரிமையாண்மையின் கீழ் ஒரு துணை நிறுவனமாக TVS Lanka (Pvt) Ltd இயங்கி வருகிறது. இரு தசாப்தங்களுக்கும் மேலாக இலங்கையில் மோட்டார் வாகனத் துறையில் நம்பிக்கைக்குரிய நாமமாக விளங்குகின்றது. புத்தாக்கம் மற்றும் மகத்துவம் ஆகியவற்றுக்கு இது பெயர்பெற்றுள்ளதுடன், தனது வரலாற்றில் பல அங்கீகாரங்களையும், பாராட்டுக்களையும் அது சம்பாதித்துள்ளது. TVS வர்த்தகநாமம் மற்றும் பல்வேறுபட்ட வர்த்தகநாமங்களின் UCAP சேவைகளுக்கான பிரத்தியேக சேவை மையங்களை TVS Lanka இயக்கி வருகின்றது. நாடெங்கிலும் 2,000 க்கும் மேற்பட்ட முகவர் மையங்களுடன், நாடளவில் வாடிக்கையாளர்களுக்கு தொடர்ச்சியான தரம் மற்றும் இலகுவாக கிடைக்கப்பெறுதல் ஆகியவற்றை TVS Lanka உறுதி செய்து வருகின்றது.

விபரங்களுக்கு
டேவிட் பீரிஸ் பஜாஜ் ஸ்கூட்டர் மீண்டும் புதிய பரிமாணத்தில்

டேவிட் பீரிஸ் பஜாஜ் ஸ்கூட்டர் மீண்டும் புதிய பரிமாணத்தில்

டேவிட் பீரிஸ் குரூப் ஒஃப் கம்பனிஸ் நிறுவனத்தின் மின்சார வாகனப் பிரிவான டேவிட் பீரிஸ் E-Mobility (பிரைவேட்) லிமிடெட், Bajaj Chetak ஸ்கூட்டரை பெருமையுடன் மீள அறிமுகம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது.    இதன் மூலம் இலங்கையின் மிகவும் பிரபலமான ஸ்கூட்டர் வர்த்தக நாமங்களில் ஒன்றான Chetak, மின்சார யுகத்திற்கு ஏற்றவாறு புதிய பரிமாணத்தில் மீண்டும் களமிறங்கியுள்ளது.    1978 ஆம் ஆண்டு முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட Bajaj Chetak, மிக விரைவாக இல்லங்கள் தோறும் இடம்பிடித்த ஒரு பெயராக மாறியதுடன், நாடு முழுவதும் உள்ள பல தலைமுறை பயணிகளின் நம்பிக்கையையும் வென்றெடுத்தது.    ஜப்பானிய மோட்டார் சைக்கிள்கள் ஆதிக்கம் செலுத்திய காலப்பகுதியிலும் கூட, Chetak ஸ்கூட்டர்களுக்கான கேள்வி அதிகரித்துக் காணப்பட்டது.    இது இலங்கை நுகர்வோர் மத்தியில் காணப்பட்ட ஈடிணையற்ற நம்பகத்தன்மையையும் உணர்வுப்பூர்வமான பிணைப்பையும் உறுதிப்படுத்துகிறது.    47 ஆண்டுகால புகழ்பெற்ற வரலாற்றைக் கொண்ட Chetak, தற்போது அதே நம்பிக்கையுடனும் நீடித்து உழைக்கும் தன்மையுடனும் நவீன மின்சார தொழில்நுட்பத்தின் மேம்பட்ட வசதிகளுடன் மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.    நவீன நகரப் போக்குவரத்துக்காக வடிவமைக்கப்பட்டுள்ள Bajaj Chetak Electric Scooter, 3.1 kW hub motor மற்றும் 3.5 kWh lithium-ion பற்றரியைக் கொண்டுள்ளது.    இது ஒருமுறை சார்ஜ் செய்தால் 151 கி.மீ (IDC range) வரை பயணிக்கக்கூடிய சிறப்பான செயல்திறனை வழங்குகிறது.    அத்துடன், மணித்தியாலத்திற்கு 63 கி.மீ வேகத்தில் பயணிக்கக்கூடிய இந்த ஸ்கூட்டர், ஆற்றல், வினைத்திறன் மற்றும் அன்றாட பயன்பாட்டிற்கான வசதி ஆகியவற்றுக்கிடையே ஒரு சிறந்த சமநிலையை வழங்குகிறது.    வலுவான Steel Unibody கட்டமைப்பைக் கொண்டுள்ள Chetak, உயர்தரமான பயண அனுபவத்தையும் நீண்டகால நீடித்து உழைக்கும் தன்மையையும் வழங்குவதன் மூலம் தனது பிரிவில் உள்ள ஏனைய வாகனங்களிலிருந்து தனித்து நிற்கிறது.    அத்துடன், தனது பிரிவிலேயே ஆகக்கூடிய அளவான 35 லீற்றர் Under-seat storage வசதியையும் கொண்டுள்ளமையால், அன்றாடப் பயணம் மற்றும் நவீன நகர வாழ்க்கை முறைக்கு இது ஒரு மிகச்சிறந்த தெரிவாக அமைகிறது.    சந்தையில் உள்ள ஏனைய போட்டியாளர்களுடன் ஒப்பிடுகையில், Bajaj Chetak அதிக ஆற்றலையும், சிறந்த பயணத் தூரத்தையும் வழங்குகிறது.    இந்த ஸ்கூட்டர், முழுமையான Digital display, புளூடூத் ஊடாக இணைக்கப்படக்கூடிய App connectivity, Eco மற்றும் Sports ஆகிய இரண்டு Riding modes போன்ற பல நவீன வசதிகளைக் கொண்டுள்ளது.    அத்துடன், Hill Hold Assist, Reverse mode, Music and call notifications போன்ற வசதிகள் உள்ளடக்கப்பட்டுள்ளதால், இது ஒரு சௌகரியமான மற்றும் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய பயண அனுபவத்தை உறுதி செய்கிறது.    இந்த அறிமுகத்திற்கு முன்னதாகவே, விற்பனை, சேவை மற்றும் உதிரிப்பாகங்கள் விநியோகம் ஆகியவற்றை உள்ளடக்கிய சுமார் 2,000 நாடளாவிய விற்பனை மற்றும் சேவை நிலையங்களில், பரிசோதனை உபகரணங்கள், கண்டறியும் ஸ்கானர்கள், பயிற்சி பெற்ற சேவை நிபுணர்கள் மற்றும் உதிரிப்பாகங்கள் உள்ளிட்ட பிரத்தியேக வசதிகளை DPMC நிறுவனம் ஏற்படுத்தியுள்ளது.    இதன் மூலம், வாடிக்கையாளர்கள் நாட்டின் எந்தப் பகுதியில் இருந்தாலும் அவர்களுக்கு ஈடிணையற்ற ஆதரவையும் இலகுவான அணுகலையும் வழங்குவதை நிறுவனம் உறுதி செய்கிறது.    டேவிட் பீரிஸ் E-Mobility நிறுவனமானது, Bajaj Chetak ஸ்கூட்டரின் தரம், நீடித்து உழைக்கும் தன்மை மற்றும் செயல்திறன் ஆகியவற்றை உறுதிப்படுத்துவதற்காக, இலங்கையின் அனைத்து வகையான நிலப்பரப்புகளிலும் 20,000 கிலோமீற்றர்களுக்கும் அதிகமான தூரம் சோதனைகளை மேற்கொண்டுள்ளது.    இந்த வெற்றிகரமான களப்பரிசோதனைகளின் பின்னரே இலங்கைச் சந்தைக்கு அறிமுகப்படுத்தப்படுகிறது.    டேவிட் பீரிஸ் குழுமத்தின் விரிவான நாடளாவிய விற்பனைக்குப் பிந்தைய சேவை வலையமைப்பானது வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை மேலும் பலப்படுத்துவதுடன், நம்பகத்தன்மை மற்றும் வாடிக்கையாளர் நலன் மீதான அக்குழுமத்தின் நீண்டகால அர்ப்பணிப்பையும் மீண்டும் உறுதிப்படுத்துகிறது.    அத்துடன், Bajaj Chetak பயனர்களுக்கு இலங்கையின் முதலாவது இரு சக்கர வாகனங்களுக்காக வழங்கப்படும் 24/7 வீதியோர அவசர உதவிச் சேவை வழங்கப்படுவதால், எவ்வித கவலையுமின்றி மனநிம்மதியுடன் பயணிக்க முடியும்.    வாடிக்கையாளர் டேவிட் பீரிஸ் E-Mobility ஐ 011 470 0550எனும் ஹொட்லைன் ஊடாக தொடர்பு கொள்ள முடியும்.    24/7 வீதியோர அவசர உதவிச் சேவையை 011 4 700 551 ஊடாக பெற முடியும்.    Chetak காட்சியறை இல. 08, பன்னிபிட்டிய வீதி, பத்தரமுல்ல எனும் முகவரியில் அமைந்துள்ளது.    Bajaj Chetak அறிமுகத்துடன், டேவிட் பீரிஸ் E-Mobility (பிரைவட்) லிமிடெட், இலங்கையை நிலைபேறான மற்றும் முன்னணி மின்சார போக்குவரத்து முறைமைக்கு கொண்டு செல்லும் செயற்பாடுகளை துரிதப்படுத்துவதுடன், பல தலைமுறைகளின் விருப்பத்திற்குரிய தெரிவை, எதிர்காலத்திற்கு பொருத்தமான வகையில் கொண்டு வந்துள்ளது.

விபரங்களுக்கு
தலைமை நிர்வாக அதிகாரியாக மதிஷ ஹேவாவிதாரண நியமனம்

தலைமை நிர்வாக அதிகாரியாக மதிஷ ஹேவாவிதாரண நியமனம்

சியபத பினான்ஸ் தடையற்ற தலைமைத்துவ மாற்றத்தை அறிவித்துள்ளது.    தலைமை நிர்வாக அதிகாரியாக மதிஷ ஹேவாவிதாரண நியமனம் பெற்றதுடன் ஆனந்த செனவிரத்ன நிர்வாக இயக்குநராக தனது பதவிக் காலத்தை நிறைவு செய்கிறார்.    2026 ஜனவரி 1, முதல் தலைமை நிர்வாக அதிகாரியாக மதிஷ ஹேவாவிதாரண நியமிக்கப்பட்டுள்ளார்.    இந்த நியமனம் சியபதவின் உள்ளக திறமை மேம்பாட்டிற்கான உறுதிப்பாட்டில் ஒரு மைல்கல்லைக் குறிக்கிறது.    நிறுவனத்தின் முன்னோடி உறுப்பினரான ஹேவவிதாரன, 2005 இல் சந்தைப்படுத்தல் உத்தியோகத்தராக நிறுவனத்தில் சேர்ந்தார்.    20 ஆண்டுகளுக்கும் மேலாக, அவர் பதவிகளில் உயர்ந்து, 2021 முதல் தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரி ஆகவும், 2025 முதல் தலைமை மூலோபாய அதிகாரி ஆகவும் பணியாற்றினார்.    ஆனந்த செனவிரத்னவின் வெளிச்செல்லும் தலைமையின் கீழ், சியபத பைனான்ஸ் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் துறையில் ஒரு சக்திவாய்ந்த நிறுவனமாக மாறியது.    சியபத பினானஸ் பிஎல்சி என்பது இலங்கை மத்திய வங்கியால் ஒழுங்குபடுத்தப்படும் உரிமம் பெற்ற ஒரு முன்னணி நிதி நிறுவனமாகும், மேலும் இது சம்பத் வங்கி குழுமத்தின் மிகப்பெரிய முழுமையான துணை நிறுவனமாகும்.    இரண்டு தசாப்தங்களுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட இந்த நிறுவனம், குத்தகை, தங்கக் கடன்கள், தரகு, வணிகக் கடன்கள் மற்றும் நிலையான வைப்புத்தொகைகள் உள்ளிட்ட பல்வேறு நிதிச் சேவைகளை வழங்குகிறது.    சமீபத்தில் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான தொழில்தருநர் வர்த்தக விருதுகளில், சியபத பினான்ஸ் பிஎல்சி தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக “சிறந்த தொழில்தருநர் வர்த்தக முத்திரை” என்ற பட்டத்தைப் பெற்றுள்ளது.    இந்த விருது, தொழில்தருநர் வர்த்தக முத்திரையிடலில் நிறுவனத்தின் சிறந்த நடைமுறைகள் மற்றும் புதுமையான உத்திகளை அங்கீகரிக்கிறது, இது ஊழியர் ஈடுபாடு, தக்கவைத்தல் மற்றும் ஊக்கமளிக்கும் பணியிட கலாசாரத்தை உருவாக்குவதற்கான அதன் வலுவான அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

விபரங்களுக்கு
நிக்கவெரட்டியவில் தடம் பதிக்கின்றது சியபத பினான்ஸ்

நிக்கவெரட்டியவில் தடம் பதிக்கின்றது சியபத பினான்ஸ்

உள்நாட்டு நிதி நிறுவனமான சியபத பினான்ஸ் பிஎல்சி, இலங்கை முழுவதும் உள்ள அனைத்து சமூகங்களுக்கும் முழுமையான நிதி தீர்வுகளை வழங்குவதற்காக நிறுவனத்தின் பரந்த விரிவாக்கல் முயற்சிகளுக்கு மேலும் ஒரு மைல்கல்லாக வெற்றிகரமாக சமீபத்தில் தனது 61வது கிளையை நிக்கவெரட்டியவில் திறந்து வைத்துள்ளது.புதிய கிளையை சியபத பினான்ஸ் பிஎல்சியின் நிர்வாக பணிப்பாளர் ஆனந்த செனவிரத்ன திறந்து வைத்தார். தலைமை நிர்வாக அதிகாரி (நியமிக்கப்பட்ட) மதிஷ ஹேவாவிதாரண, சிரேஷ்ட நிர்வாகத்தினர், காவல்துறை அதிகாரி ஹரிசன் சோமசிறி, கிராம சேவையாளர் எச்.எம்.டி. நாமல் பண்டார ஆகியோர் அரச மற்றும் தனியார் வங்கிகள் மற்றும் காப்புறுதி நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் நலன் விரும்பிகள் முன்னிலையில் இந்த கிளை திறந்து வைக்கப்பட்டது.வளமான மண் மற்றும் பயிர் செய்கைக்கு ஏற்ற அமைவான நிலங்களைக் கொண்ட நிக்கவரெட்டி, அதன் விவசாய பாரம்பரியம் மற்றும் அதன் முக்கியத்துவத்திற்காக புகழ் பெற்றுள்ளது, அங்குள்ள சமூகம் இன்றுவரை தனித்துவமான விவசாய நுட்பங்களை ஒருங்கிணைப்பதில் தொடர்ந்து கவனம் செலுத்துகின்றனர்.பாரம்பரியமாகவும் வரலாற்று ரீதியாகவும் விவசாயத்திற்குப் பெயர் பெற்றிருந்தாலும், நிக்கவரெட்டி அதன் பொருளாதார அடித்தளத்தை பாரம்பரியமற்ற தொழில்துறைகளிலும் பன்முகப்படுத்தியுள்ளது. தற்போது, ​​வேலைவாய்ப்பு நிலப்பரப்பில் சேவைத் துறைஇ விவசாயம் மற்றும் தொழில்துறை துறைகள் ஆதிக்கம் செலுத்துகின்றன. சில தசாப்தங்களாக, நிக்கவெரட்டிய ரியல் எஸ்டேட் துறையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் கண்டது. மேம்பட்ட உட்கட்டமைப்பு வசதி மற்றும் முதலீடுகளுக்கான மேம்பட்ட காலநிலை ஆகியவற்றால் ஆதரிக்கப்படும் பிராந்தியத்தின் நிலைப்பாடு - நவீன வீட்டுவசதி திட்டங்களின் அதிகரிப்புக்கும் வணிக வளாகங்களின் கிடைக்கும் தன்மைக்கும் வழி வகுத்துள்ளது.சியபத பினான்ஸ் பிஎல்சியின் நிர்வாக பணிப்பாளர் ஆனந்த செனவிரத்ன கருத்து தெரிவிக்கையில் "சியபத பினான்ஸ் எங்களுக்கு மிக உயர்ந்த திருப்தி அளிக்கும் அம்சம் என்னவெனில், நாங்கள் சென்றடையும் மக்களின் வாழ்க்கையில் எங்கள் சேவைகள் ஏற்படுத்தும் நல்விளைவுகளை காண்பதாகும்," எனவும் மேலும் கூறுகையில் "நிக்கவெரட்டிய கிளை திறப்பு நெருங்கும் போது, ​​உள்;ர் சமூகம் புதிய வழிகளுக்கு திறந்திருப்பதையும் நாங்கள் அவதானித்தோம். உதாரணமாக, டிஜிட்டல் சேவைகளில் இளைஞர்கள் வளர்ந்து வருவதையும், கைத்தறி கைவினைகளில் ஈடுபடும் பெண்கள் மற்றும் ஒட்டுமொத்த விவசாயத் தொழிலும் படிப்படியாக இயற்கை விவசாய நடைமுறைகளை ஏற்றுக்கொள்வதையும் நாங்கள் கவனித்தோம். இத்தகைய பின்னணியில், இந்த சமூகம் வெற்றிக்கான அடித்தளத்தை உருவாக்க உதவுவதற்கு எங்கள் ஆதரவு அவசியம் என்று நாங்கள் நம்புகிறோம்.” எனக் கூறினார்.குத்தகை, நிலையான வைப்புத்தொகை, தங்கக் கடன், வணிகக் கடன்கள், தனிநபர் கடன்கள், விரைவான வரைவு மற்றும் தரகு முதல் "ஸ்மார்ட் பே" - அதன் பில் செலுத்தும் வசதி வரை விரிவான தயாரிப்பு தொகுதியினை பெருமைப்படுத்துகிறோம், புதிய கிளை, தொழில்முனைவோர், சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மற்றும் ஆர்வமுள்ள இளைஞர்கள் வளர்ச்சி வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளவும், நீண்ட காலத்திற்கு அறிவார்ந்த நிதி தீர்மானங்களை ஊக்குவிக்க உதவுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.நாட்டில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையைத் தொடர்ந்து, ஒரு சிறிய திறப்பு விழா நடத்தப்பட்டது, மேலும் பாடசாலை மாணவர்களுக்கு பாதணிகள் மற்றும் காலுறைகள் கொள்வனவு செய்வதற்கு பரிசு வவுச்சர்களை நன்கொடையாக வழங்குவதற்காக பணம் ஒதுக்கப்பட்டது.பரிசு வவுச்சர்களை சியபத பினான்ஸ் பிஎல்சியின் நிர்வாக பணிப்பாளர். ஆனந்த செனவிரத்ன, தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் சிரேஷ்ட நிர்வாகத்தினர் திரு. மதிஷ ஹேவாவிதாரண ஆகியோர், பிரதேச செயலகப் பிரிவு மற்றும் நிக்கவெரட்டிய கிராம சேவையாளரின் ஒத்துழைப்புடன், திறப்பு விழாவில் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் பாடசாலை பிள்ளைகளுக்கு வழங்கினர்.சம்பத் வங்கி குழுமத்தின் மிகப்பெரிய முழு உரிமம் பெற்ற துணை நிறுவனமான சியபத பினான்ஸ் பிஎல்சி, நாடு முழுவதும் கிளைகளின் வலையமைப்பை கொண்டுள்ளது, இது அதன் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவை வழங்கல் தரங்களை வழங்குவதை உறுதி செய்கிறது. ஃபிட்ச் மதிப்பீடுகளால் நிலையான செயற்பாடுகள் மூலம் A(lka) என்ற தேசிய நீண்டகால மதிப்பீட்டை நிறுவனம் பெற்றுள்ளது, இது உறுதியான நிதி நிலை மற்றும் நம்பிக்கைக்குரிய வளர்ச்சி பாதையை பிரதிபலிக்கிறது. கடந்த 20 ஆண்டுகளில், சியபத பினான்ஸ் பிஎல்சி சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவோர் முயற்சிகளின் வளர்ச்சிக்கும், நாடு முழுவதும் தனிப்பட்ட நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் பங்களித்துள்ளது.037 4658105 ஐ அழைப்பினை மேற்கொள்வதன் மூலமோ அல்லது இல. 48 E, ஹீலோகம, நிக்கவெட்டிய என்ற முகவரியில் உள்ள கிளைக்கு விஜயம் செய்வதன் மூலமோ நிக்கவெட்டிய கிளையை தொடர்பு கொள்ளுங்கள். சியபத பினான்ஸ் பிஎல்சி மற்றும் அதன் சேவைகள் பற்றிய மேலதிக தகவலுக்கு, www.siyapatha.lk ஐ பார்வையிடவும்.

விபரங்களுக்கு
வடக்கில் வலையமைப்பை விரிவுபடுத்திய சியபத பினான்ஸ்

வடக்கில் வலையமைப்பை விரிவுபடுத்திய சியபத பினான்ஸ்

சியபத பினான்ஸ், மன்னாரில் புதிய கிளையுடன் வடக்கில் தனது வலையமைப்பை விரிவுபடுத்துகிறது    20 வருட அனுபவமுள்ள முன்னணி நிதி நிறுவனமான சியபத பினான்ஸ் பிஎல்சி, சமீபத்தில் தனது 58ஆவது கிளையை மன்னார் நகரில் திறந்து வைத்தது.    இது வட மாகாணத்தில் தனது வலையமைப்பை வலுப்படுத்தி, நாடு தழுவிய கிளை வலையமைப்பை விரிவுபடுத்துகிறது.    மன்னார் கிளை திறப்பு விழாவில் சியபத பினான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குநர் ஆனந்த செனவிரத்ன, தலைமை செயற்பாட்டு அதிகாரி மதிஷ ஹேவாரத்ன மற்றும் சிரேஷ்ட நிர்வாகம், கிராம சேவையாளர் என்டனி மற்றும் தனியார் வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் நலன் விரும்பிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.    இலங்கையின் வடக்கு கடற்கரைப் பகுதியில் பல நூற்றாண்டுகள் பழமையான பாரம்பரியம், தனித்துவமான கட்டிடக்கலை மற்றும் கண்கவர் அழகினை பாதுகாத்து வரும் மன்னார் மாவட்டம், பிரதான நிலப்பகுதி மற்றும் மன்னார் தீவை கொண்டுள்ளது.    15-64 வயதுக்குட்பட்ட பொருளாதார ரீதியாக சுறுசுறுப்பான வயதுக் குழுவிற்குள் வகைப்படுத்தப்பட்டுள்ள மக்கள்தொகையில் கணிசமான பகுதியினர், நீண்டகாலத்தில் பிராந்தியத்தின் நிலையான வளர்ச்சிக்கு பங்களிக்கும் நெகிழ்வான மற்றும் வசதியான நிதி தீர்வுகளுக்கான கட்டாய தேவை ஒன்றினை கொண்டுள்ளதாக சியபத பினான்ஸ் அடையாளம் காட்டுகிறது.    மன்னார் நகரம் , பசுமையான காடுகள், பனை மரங்கள், சதுப்பு நிலங்கள் மற்றும் தென்னை பயிர்ச்செய்கை முதல் தரிசு நிலம் மற்றும் தடாகங்கள் வரை பல்வேறு சுற்றுச்சூழல் அமைப்புகளைக் கொண்ட வறண்ட, மணல் தீபகற்பமாகும். தொழிற்துறையில் குறிப்பிடத்தக்க 53 சதவீதத்தை கொண்ட விவசாயத் துறை, பிராந்தியத்தின் பொருளாதார நிலப்பரப்பில் ஆதிக்கம் செலுத்துகிறது அங்கு பெரும்பாலான உள்ளூர்வாசிகள் நெல் விளைச்சலை தங்கள் முக்கிய வருமான ஆதாரமாக கொண்டுள்ளனர்.    மன்னாரில் உள்ள பல மீன்பிடி கிராமங்களின் வாழ்வாதாரத்திலும் மீன்பிடித் தொழில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.    நிகழ்வில் உரையாற்றிய சியபத பினான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குநர் ஆனந்த செனவிரத்ன, 'துடிப்பான மன்னார் நகரில் எங்கள் புதிய கிளையை திறப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் - ஏராளமான வாய்ப்புகள் மற்றும் நம்பிக்கைக்குரிய எதிர்காலம் கொண்ட ஒரு பிராந்தியம்.    எங்கள் சேவைகள் மூலம், உள்ளூர் சமூகங்களை மேம்படுத்துவதையும், உலகின் மாறிவரும் காலத்திற்கு ஏற்ப அவர்களின் வாழ்க்கையை மாற்ற உதவுவதையும் நாங்கள் நோக்கமாக கொண்டுள்ளோம். இதை கருத்தில் கொண்டு, நாட்டின் ஒவ்வொரு பகுதியையும் சென்றடைந்து, பல்வேறு தனிநபர் குழுக்களுடன் இணைந்து பணியாற்றும் எங்கள் பயணத்தைத் தொடர நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.' எனக் கூறினார்.    சமீபத்திய ஆண்டுகளில், மன்னார் காற்று மற்றும் சூரிய சக்தி போன்ற வளங்களால் இயக்கப்படும் புதுப்பிக்கத்தக்க சக்திக்கான பரந்த ஆற்றலைக் காட்டியுள்ளது, இது உள்ளூர் பொருளாதாரங்களுக்கு புதிய வழிகளை வழங்குகிறது. பிராந்தியத்தில் உள்ள உயர்ந்த இலட்சியம் உள்ள தனிநபர்களுக்கும் மற்றும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கும் நம்பகமான நிதி ஆலோசகராக கவர்ச்சிகரமானதாக இருக்கும் இந்த புதிய கிளை, குத்தகை, நிலையான வைப்புத்தொகை, தங்கக் கடன், வணிகக் கடன்கள், தனிநபர் கடன்கள், விரைவான வரைவு மற்றும் தரகு அதன் கொடுப்பனவு செலுத்தும் வசதியான ஸ்மார்ட் பே வரை பரந்த தயாரிப்பு தொகுப்பினை வழங்குகிறது.    நிறுவனத்தின் 'சியபதேன் மிஹின்கதட்ட' சமூகப் பொறுப்புணர்வுத் திட்டத்திற்கு இணங்க, சியபத பினான்ஸ் பிஎல்சியின் சிரேஷ்ட நிர்வாகத்தினர் சென்.லூசியா மகா வித்தியாலயத்தில் ஒரு சிறப்பு மரம் நடும் முயற்சியை மேற்கொண்டனர் மற்றும் மன்னாரில் உள்ள பாடசாலை மாணவர்களின் டிஜிட்டல் கல்வியின் வளர்ச்சியை ஆதரிக்கும் முயற்சியாக கணினிகள் மற்றும் துணைக்கருவிகளை நன்கொடையாக வழங்கினர்.

விபரங்களுக்கு
டேவிட் பீரிஸ் ஓட்டோமொபைல்ஸ், GWM ஆகியன இலங்கையில் ஹைப்ரிட் மற்றும் புதிய எரிசக்தி வாகனங்களை அறிமுகப்படுத்த திட்டம்

டேவிட் பீரிஸ் ஓட்டோமொபைல்ஸ், GWM ஆகியன இலங்கையில் ஹைப்ரிட் மற்றும் புதிய எரிசக்தி வாகனங்களை அறிமுகப்படுத்த திட்டம்

டேவிட் பீரிஸ் ஓட்டோமொபைல்ஸ் மற்றும் GWM ஆகியவை இலங்கையில் ஹைப்ரிட் மற்றும் புதிய எரிசக்தி வாகனங்களை அறிமுகப்படுத்த மூலோபாய கூட்டாண்மையை உருவாக்குகின்றன.    டேவிட் பீரிஸ் குழுமத்தின் நான்கு சக்கர வாகன விற்பனைப் பிரிவான டேவிட் பீரிஸ் ஆட்டோமொபைல்ஸ் (பிரைவேட்) லிமிடெட் (DPA), உலகளாவிய வாகனத் துறையில் முதன்மை வகிக்கும்  GWM உடன் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க கூட்டாண்மையை அறிவித்துள்ளது.    இலங்கையில் ஹைப்ரிட் மற்றும் புதிய ஆற்றல் வாகனங்களின் (NEVs) புதிய அத்தியாயத்தை அறிமுகப்படுத்துவது இந்தக் கூட்டாண்மையின் நோக்கமாகும்.     அதிகாரப்பூர்வ பத்திரிகையாளர் சந்திப்பு, அக்டோபர் 30 அன்று டேவிட் பீரிஸ் ஆட்டோமொபைல்ஸ் (DPA) தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் டேவிட் பீரிஸ் குழுமத்தின் மூத்த உறுப்பினர்களான குழுமத் தலைவர் மற்றும் முகாமைத்துவப் பணிப்பாளர் ரோஹன திஸாநாயக்க மற்றும் டேவிட் பீரிஸ் ஆட்டோமொபைல்ஸ் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மகேஷ் மற்றும் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் தலைவர் யசந்த அபேகோன், ஆகியோர் கலந்து கொண்டனர். GWM நிறுவனத்தின் பிரதிநிதிகள் இணைய வழியில் நிகழ்வில் இணைந்துகொண்டனர்.    இந்தக் கூட்டாண்மை, புத்தாக்கம், நம்பகத்தன்மை மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றின் மூலம் நாட்டின் போக்குவரத்துத் துறையின் நிலப்பரப்பை மறுவடிவமைப்பதை நோக்கமாகக் கொண்டது. உலகளாவிய முன்னணி நிறுவனம், தேசத்தின் முன்னணி நிறுவனத்துடன் இணைகிறது.    இந்தப் புதிய கூட்டாண்மை, உலகின் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் இயங்கும் GWM-இன் உலகளாவிய பொறியியல் சிறப்பையும், நான்கு தசாப்தங்களுக்கும் மேலான டேவிட் பீரிஸ் ஓட்டோமொபைல்ஸ் (DPA)-இன் நம்பகத்தன்மை மற்றும் எளிமையான அணுகல் கொண்ட பாரம்பரியத்தையும் ஒருங்கிணைக்கிறது.      இந்த ஒத்துழைப்பின் மூலம் இலங்கையில் உள்ள வாடிக்கையாளர்கள்  இனிமேல் நவீன தொழில்நுட்பம் மற்றும் அன்றாடப் பயன்பாட்டிற்கு ஏற்ற தன்மைகொண்ட ஹைப்ரிட், பிளக்-இன் ஹைப்ரிட் மற்றும் முழு மின்சார வாகனங்களை பெற்றுக்கொள்ள முடியும்.  அவுஸ்திரேலியாவில் ஹவல் H6 ரக வாகனங்களுக்கு வழங்கப்பட்ட 5-நட்சத்திர ANCAP பாதுகாப்புத் தரச் சான்றிதழின் உறுதியுடனும், உலகின் சவாலான சந்தைகளில் கிடைத்த அனுபவத்துடனும், GWM நிறுவனம் இலங்கைச் சாலைகளுக்குச் சிறந்த செயல்திறனையும், மன அமைதியையும் கொண்டு வருகிறது.    "Go With More" என்ற GWM-இன் உலகளாவிய பிராண்ட் தத்துவத்தின் கீழ் இந்த முயற்சி, இலங்கையில் உள்ள ஓட்டுனர்களுக்கு செயல்திறன் மற்றும் எரிபொருள் திறன் ஆகிய இரண்டிற்கும் இடையே தேர்வு செய்ய வேண்டிய நிலையை நீக்கியுள்ளதுடன் புத்திசாலித்தனமான, ஒன்றிணைக்கப்பட்ட மற்றும் அதிக நம்பிக்கையான எதிர்காலத்திற்கு அழைப்பு விடுக்கிறது.     GWM ஹைப்ரிட் ரக வாகனங்களின் அறிமுகம் டேவிட் பீரிஸ் ஓட்டோமொபைல்ஸ் (DPA) மற்றும் GWM ஆகிய நிறுவனங்களின் கூட்டாண்மையின் கீழ் முதற்கட்டமாக அறிமுகப்படுத்தப்படும் வாகனங்கள்:     1. ஹவல் H6 HEV / PHEV- ரூ. 17.995 மில்லியன் (HEV)/ரூ. 20.995 மில்லியன்(PHEV)    அதிநவீன மற்றும் புத்திசாலித்தனமான SUV: நகர்ப்புற சொகுசையும், ஹைப்ரிட் வாகனத்தின் பன்முகத்தன்மையையும் இணைக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.சக்தி வாய்ந்த, அதேநேரம் எரிபொருள் சிக்கனமான ஓட்டத்தை வழங்குகிறது. இதில், பனோரமிக் சன்ரூஃப் மற்றும் 12.3 அங்குல அல்ட்ரா-ஸ்மார்ட் தொடுதிரை ஆகியவை கூடுதல் அம்சங்கள்.இது குறிப்பிடத்தக்க தூய மின்சாரப் பயண வரம்பை வழங்குகிறது. இதன்மூலம், உண்மையான ஹைப்ரிட் சுதந்திரத்தையும் தினசரி பயணங்களுக்கு மிகவும் குறைவான எரிபொருள் செலவையும் பெறலாம்.    2. ஹவல் GT பிளக்-இன் ஹைப்ரிட் (PHEV)-ரூ. 24.995 மில்லியன்    இது ஒரு செயல்திறன் மிக்க பிளக்-இன் ஹைப்ரிட் எஸ்யூவி ஆகும். இதன் தோற்றம், தைரியமான வடிவமைப்பு மற்றும் துடிப்பான ஹைப்ரிட் சக்தி ஆகிய அம்சங்கள் தனித்துவமானவை. இது ஒரு ஸ்போர்ட்ஸ் காருக்கு நிகரான வேகத்தை வழங்குகிறது. அதாவது, வெறும் 4.9 வினாடிகளில் 0 முதல் 100 கி.மீ/மணி வேகத்தை எட்டும். அத்துடன், பிரம்மாண்டமான 762 Nm முறுக்குவிசை (torque) திறனையும் கொண்டுள்ளது. இதன் விளையாட்டுத்தனமான வெளிப்புற வடிவமைப்புக்கு ஈடுகொடுக்கும் வகையில் ஓட்டுநரை மையப்படுத்தி உட்புரமும்  வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில், 'Alcantara-style' பாணியிலான ஸ்போர்ட் இருக்கைகள் மற்றும் ஆக்ரோஷமான வெளிப்புற வடிவமைப்பு ஆகியவை அடங்கும்.     3.டேங்க் 300 ஹைப்ரிட் எலெக்ட்ரிக் (HEV)-ரூ. 35.995 மில்லியன்    நகரத்தைத் தாண்டி சுதந்திரத்தை நாடும் சாகச விரும்பிகளுக்காக உருவாக்கப்பட்ட, உறுதியான ஆஃப்-ரோட் வாகனம் இது. டேங்க் 300 ஹைப்ரிட் எலெக்ட்ரிக் வாகனம் (HEV) அதன் முழு 4x4 ஆஃப்-ரோட் சேசிஸ், முன் மற்றும் பின் டிஃபரன்சியல் லாக்குகள் மற்றும் Crawl Control வசதி ஆகியவற்றின் மூலம் நவீன தேடல் அனுபவத்தை மறுவடிவமைக்கிறது. இதன் ராணுவத் தர வலிமை, இரட்டை 12.3-இன்ச் திரைகள் மற்றும் உயர்தர faux Nappa leather accents உட்புற அலங்காரம் போன்ற சொகுசான அம்சங்களால் சமநிலைப்படுத்தப்பட்டுள்ளது.   4. டேங்க் 500 ஹைப்ரிட் எலெக்ட்ரிக் வாகனம் (HEV)- ரூ. 43.5 மில்லியன்    GWM-இன் முதன்மை ரக வாகனமான இந்த வாகனம் கம்பீரமான வடிவமைப்பு, ஏழு இருக்கைகள் கொண்ட வசதி மற்றும் ஹைப்ரிட்இன் சொகுசுத்தன்மை  ஆகியவற்றை ஒருங்கிணைக்கிறது. 'Nappa Leather-Accented' இருக்கைகள் (குளிரூட்டும்/மசாஜ் வசதியுடன்) மற்றும் பிரமாண்டமான 14.6-அங்குல மைய மல்டிமீடியா திரையுடன் இதன் உள்ளறை ஆடம்பரமாக அமைக்கப்பட்டுள்ளது. பாடி-ஆன்-ஃப்ரேம் சேசிஸ் (Body-on-Frame chassis: வாகனத்தின் உடல், அதன் சட்டகத்தின் மேல் பொருத்தப்பட்டிருக்கும்) அடிப்படையில் இது கட்டமைக்கப்பட்டுள்ளது. இது நிகரற்ற கம்பீரமான தோற்றத்தையும், உண்மையான ஆஃப்-ரோட் திறனையும் வழங்குகிறது. இது ஒவ்வொரு வருகையையும் ஒரு சிறப்பு நிகழ்வாக மாற்றுகிறது.    மேலதிகமாக, நிலைத்தன்மை மற்றும் அதிக செயல்திறன் கொண்ட போக்குவரத்து தீர்வுகளை நாடும் இலங்கை நுகர்வோருக்கான வாய்ப்புகளை மேலும் விரிவுபடுத்தும் வகையில், DPA நிறுவனம் முற்றிலும் மின்சாரத்தில் இயங்கும் ORA ரக வாகனங்களையும் அறிமுகப்படுத்த உள்ளது.    புத்தாக்கம் மூலம் இலங்கையின் எதிர்கால போக்குவரத்து துறையை மறுவடிவமைத்தல். புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், இலங்கையின் வாகன துறையின்  எதிர்காலத்திற்கான ஒரு மூலோபாய நகர்வாக இந்தக் கூட்டாண்மை அமைகிறது.    GWM-இன் நவீன ஹைப்ரிட் மற்றும் மின்சார தொழில்நுட்பங்கள், DPA-இன் வலுவான நாடு தழுவிய சேவை வலையமைப்புடன் இணைந்து இலங்கை மக்களுக்கு அதிக சுதந்திரத்தையும், சிறந்த செயல்திறனையும், சிறந்த மதிப்பையும், அதிக நம்பிக்கையையும் வழங்குகின்றன.    நிகழ்வில் உரையாற்றிய DPA-இன் நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு. மகேஷ், மேலும் கூறியதாவது: "GWM-இன் வாகனங்கள் உலகத் தரம், நம்பிக்கை மற்றும் புதுமையின் அடையாளமாகத் திகழ்கின்றன. டேவிட் பீரிஸ் ஆட்டோமொபைல்ஸின் நம்பகத்தன்மை மற்றும் இணையற்ற சேவையுடன் ஹைப்ரிட் செயல்திறனை அனுபவிக்கும் சுதந்திரத்தை இலங்கை மக்களுக்கு நாங்கள் வழங்குகிறோம்.   " GWM x DPA - GO WITH MORE. GWM மற்றும் DPA-வின் இந்தக் கூட்டாண்மை, வெறும் வாகனங்களை அறிமுகப்படுத்துவதைவிட மேலானதாகும். இது செயல்திறன், நிலைத்தன்மை மற்றும் அசைக்க முடியாத நம்பிக்கை ஆகியவற்றைச் சமநிலைப்படுத்தும் ஒரு புத்திசாலித்தனமான அதிகாரத்தை போக்குவரத்து துறையில்  தொடங்கி வைக்கிறது.    GWM-இன் உலகத் தரப் புதுமை மற்றும் DPA-இன் உள்ளூர் அனுபவம் ஆகியவை கைகோர்ப்பதால், ஒவ்வொரு GWM வாகன உரிமையாளருக்கும் DPA-வின் நான்கு தசாப்த கால நாடு தழுவிய சேவை, முழுமையான உத்தரவாதம் மற்றும் தடையற்ற உதிரிப்பாக விநியோகம் ஆகியவற்றினை பெறமுடியும். இலங்கை மக்களுக்கு இது ஒரு புதிய ஓட்டுநர் அனுபவத்தைத் தொடக்கி  வைக்கிறது.    இந்த அனுபவத்தில், தொழில்நுட்பம் உங்கள் உணர்வுகளுக்கு உற்சாகமளிக்கிறது, விரிவான தேர்வு உங்களுக்கு தன்னம்பிக்கையைத் தருகிறது, மற்றும் எதிர்வரும் பாதை அதிக சுதந்திரத்திற்கும் , உறுதியான நம்பிக்கைக்கும்  உத்தரவாதம் அளிக்கிறது.  

விபரங்களுக்கு
Entertainment Stories
Explore More
மெட்ரோ தொடருந்தில் பாம்புகள் – சீனாவில் பரபரப்பு

மெட்ரோ தொடருந்தில் பாம்புகள் – சீனாவில் பரபரப்பு

சீனாவின் நான்ஜிங் நகரில் பயணித்துக் கொண்டிருந்த மெட்ரோ தொடருந்தில், பயணி ஒருவர் கொண்டு வந்த வாளி கவிழ்ந்ததில் உயிருள்ள பாம்புகள் தொடருந்துக்குள் சிதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாளியில் இருந்து வெளியேறிய பாம்புகள் தொடருந்துப் பெட்டி முழுவதும் ஊர்ந்து சென்ற போதிலும், பயணிகள் பதற்றமடையாமல் அமைதியாக இருந்துள்ளனர். சுமார் 10 முதல் 15 நிமிடங்களுக்குள், சக பயணிகள் இணைந்து பாம்புகளை கைகளால் பிடித்து மீண்டும் வாளிக்குள் போட்டுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ள நிலையில், பயணிகளின் நிதானமான செயல் இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதேவேளை, பொதுப் போக்குவரத்தில் உயிருள்ள பாம்புகள் உள்ளிட்ட ஊர்வனவற்றை கொண்டு செல்வதற்கான பாதுகாப்பு விதிமுறைகள் குறித்தும் கேள்விகள் எழுந்துள்ளன.

விபரங்களுக்கு
பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!

பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!

தென்னிந்தியத் திரையுலகின் மூத்த பழம்பெரும் நடிகையான சௌகார் ஜானகி (94), உடல்நலக்குறைவு காரணமாகச் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.1931 ஆம் ஆண்டு டிசம்பர் 12 ஆம் திகதி கன்னட மொழி பேசும் குடும்பத்தில் பிறந்த சௌகார் ஜானகி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் 450 க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும், 300 க்கும் மேற்பட்ட மேடை நாடகங்களிலும் நடித்துள்ளார்.இயக்குநர் எல்.வி. பிரசாத் இயக்கத்தில் வெளியான 'ஷவுகாரு' என்ற தெலுங்குத் திரைப்படத்தின் மூலமே இவர் முதன்முதலாகத் திரையுலகில் அறிமுகமானார். இப்படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்தே இவருக்கு 'சௌகார்' என்ற அடைமொழிப் பெயர் உருவானது. பின்னர் 1952 ஆம் ஆண்டு வெளியான 'வளையாபதி' திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் காலடி வைத்தார்.கன்னடத் திரையுலகின் புகழ்பெற்ற நடிகர் டொக்டர் ராஜ்குமாருடன் இணைந்து, 1959 ஆம் ஆண்டு வெளியான இந்தியாவின் முதலாவது பேன்-இந்திய (Pan-India) கன்னடத் திரைப்படமான 'மகிஷாசுர மர்தினி'யில் இவர் நடித்திருந்தார். அந்த வகையில் இந்தியாவின் ஆரம்பகால பேன்-இந்திய நடிகைகளில் ஒருவராகவும் இவர் கருதப்படுகிறார்.கலைத்துறைக்கு இவர் ஆற்றிய அளப்பரிய பங்களிப்பைப் பாராட்டும் வகையில், இந்திய அரசின் உயரிய விருதான 'பத்மஸ்ரீ', மற்றும் கலைமாமணி, நந்தி விருதுகள் உள்ளிட்ட பல கௌரவங்கள் இவருக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டன. இவரின் சகோதரியான கிருஷ்ணகுமாரியும் புகழ்பெற்ற ஒரு நடிகை என்பது குறிப்பிடத்தக்கது.

விபரங்களுக்கு
அடுத்த படத்திற்கு தயாராகும் சிறுத்தை சிவா: அஜித், தனுஷ் இணைய விருப்பம்

அடுத்த படத்திற்கு தயாராகும் சிறுத்தை சிவா: அஜித், தனுஷ் இணைய விருப்பம்

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான சிறுத்தை சிவா, தனது அடுத்த பிரம்மாண்ட திரைப்படப் பணிகளுக்கான முதற்கட்டப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருவதாகத் திரைத்துறை வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'அண்ணாத்த' மற்றும் சூர்யா நடிப்பில் உருவான 'கங்குவா' ஆகிய திரைப்படங்களைத் தொடர்ந்து, இயக்குநர் சிறுத்தை சிவா தனது அடுத்த படைப்பிற்கான கதை விவாதங்கள் மற்றும் தயாரிப்புப் பணிகளில் கவனம் செலுத்தி வருகின்றார். இந்த புதிய திரைப்படத்தை 'வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல்' (Vels Film International) நிறுவனம் பிரம்மாண்டமாகத் தயாரிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், இந்த திரைப்படத்தின் முக்கியக் கதாபாத்திரத்தில் முன்னணி நடிகர் அரவிந்த் சாமியை நடிக்க வைக்கப் பரிந்துரைகள் செய்யப்பட்டு, பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளையில், சிறுத்தை சிவாவுடன் ஏற்கனவே வெற்றிப் படங்களைக் கொடுத்துள்ள அஜித் குமார் மற்றும் முன்னணி நடிகர் தனுஷ் ஆகியோரும் அவருடன் மீண்டும் இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இயக்குநர் சிறுத்தை சிவாவின் இந்த அடுத்தகட்ட திட்டம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விபரங்களுக்கு

"ஐட்டம் பாடல்களுக்கு மட்டுமே என்னை அணுகுகிறார்கள்" - நடிகை தமன்னா ஆதங்கம்!

திரைத்துறையில் சவால் நிறைந்த கதாபாத்திரங்களில் நடிக்க தான் ஆர்வமாக இருப்பதாக நடிகை தமன்னா தெரிவித்துள்ளார். இருப்பினும், பெரும்பாலான இயக்குநர்கள் தன்னை 'ஐட்டம் பாடல்களுக்கு' மட்டுமே அணுகுவதாக அவர் ஆதங்கம் வெளியிட்டுள்ளார். கவர்ச்சியான பிம்பத்தைத் தாண்டி, ஒரு நடிகையாகத் தனது திறமையை முழுமையாக வெளிப்படுத்தும் வகையிலான கதாபாத்திரங்களை இயக்குநர்கள் வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், காலத்திற்கு ஏற்ப சினிமா மாறி வருவதைச் சுட்டிக்காட்டிய அவர், கதையின் தேவைக்காக அமைக்கப்படும் முத்தக் காட்சிகளைத் தனிமைப்படுத்திப் பார்க்கவோ அல்லது தவறாக மதிப்பிடவோ கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

விபரங்களுக்கு
அனிருத்துக்கும் காவ்யா மாறனுக்கும் நவம்பர் 10ஆம் திகதி திருமணம்?

அனிருத்துக்கும் காவ்யா மாறனுக்கும் நவம்பர் 10ஆம் திகதி திருமணம்?

பிரபல இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தருக்கும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) கிரிக்கெட் அணியின் பிரதம நிறைவேற்று அதிகாரியான (CEO) காவ்யா மாறனுக்கும் எதிர்வரும் நவம்பர் 10ஆம் திகதி திருமணம் நடைபெறவுள்ளதாக இந்திய ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தத் திருமணம் கிரீஸ் நாட்டில் நடைபெற இருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது. சமீபத்தில் இருவரும் சேர்ந்து வெளியில் சுற்றுவது போன்ற நிழற்படங்கள் வெளியாகின. இந்தநிலையில் இருவருக்கும் திருமணம் நடைபெறவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எனினும், சமூக வலைதளங்களில் இது தொடர்பான செய்திகள் தீவிரமாகப் பரவி வரும் நிலையில், இந்த திருமணம் குறித்து இருதரப்பிலிருந்தும் இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

விபரங்களுக்கு
தனிப்பட்ட வாழ்க்கை குறித்த சர்ச்சைகளுக்கு நடிகர் துருவ் விக்ரம் பதில்!

தனிப்பட்ட வாழ்க்கை குறித்த சர்ச்சைகளுக்கு நடிகர் துருவ் விக்ரம் பதில்!

சமீபகாலமாக தன் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து எழுந்துள்ள விமர்சனங்கள் மற்றும் மக்களின் அதிகப்படியான கவனம் குறித்து நடிகர் துருவ் விக்ரம் மனம் திறந்து பேசியுள்ளார். 'பைசன்' படத் தயாரிப்பின் போது, உடன் நடித்த நடிகை அனுபமா பரமேஸ்வரனுடன் இணைந்து துருவ் விக்ரம் பேசப்பட்ட நிலையில், சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய அனுபமா, தான் கடந்த காலத்தில் ஒருவரிடம் சந்தித்த மனரீதியான பாதிப்புகள் குறித்துப் பேசியிருந்தார். அதில் அவர் யாரையும் நேரடியாகக் குறிப்பிடாத போதிலும், சமூக வலைதளங்களில் துருவ் விக்ரம் குறித்தே பல்வேறு ஊகங்களும் விமர்சனங்களும் எழுந்தன. இந்நிலையில், 'இந்தியா டுடே' (India Today) வட்டமேசை நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய துருவ் விக்ரம், இந்த சர்ச்சைகள் மற்றும் விமர்சனங்கள் குறித்துத் தெரிவித்துள்ளார். "சமூக ஊடகங்கள் மற்றும் பொதுமக்களின் இந்த அதிகப்படியான கவனம் என்னைப் பாதிக்கவே இல்லை என்று கூறினால் அது உண்மையல்ல. ஆனால், இதுபோன்ற சூழ்நிலைகளில் நாம் யார்த்தத்துடன் இணைந்திருப்பதும், நமது உண்மையான அடையாளம் மற்றும் மதிப்பீடுகளைப் புரிந்துகொண்டிருப்பதும் மிக முக்கியம். நாம் நேசிக்கும் மனிதர்களையும், நமது வாழ்க்கைக்கு அர்த்தமளிக்கும் விஷயங்களையும் தீவிரமாகப் பாதுகாக்க வேண்டும். நாம் உண்மையின் பக்கம் நின்று, நம்மைப் பாதுகாத்துக் கொள்ளும் போது, வெளியிலிருந்து வரும் விமர்சனங்களும் ஊகங்களும் நம்மைப் பாதிப்பது குறையும்" எனத் தெரிவித்தார். மேலும், இதுபோன்ற இக்கட்டான சூழல்களில் தனக்கான ஒரு தனி உலகத்தைப் படைத்துக் கொண்டு, "தனி ஒரு படை" போலச் செயல்படப் பழகிக் கொள்ள வேண்டும் என்றும், பொதுவெளிச் சத்தங்களில் இருந்து விலகித் தன் அமைதியைப் பாதுகாப்பதே அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் தனது சமூக வலைதளப் பயன்பாடு குறித்துப் பேசிய அவர், திரைப்பட விளம்பர காலங்களைத் தவிர்த்துப் பிற நேரங்களில் இன்ஸ்டாகிராம் போன்ற தளங்களில் இருந்து விலகியிருப்பதாகவும், புத்தகங்கள் வாசிப்பது, இசை கேட்பது மற்றும் குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவிடுவதிலேயே தான் அதிக கவனம் செலுத்துவதாகவும் தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

விபரங்களுக்கு

"விஜய்க்காக 16 பாடல்கள் கொண்ட சிறப்பு ஆல்பம்" சாய் அபயங்கர் நெகிழ்ச்சி

தமிழக முதலமைச்சர் விஜய்யுடன் இனி திரைப்படங்களில் பணியாற்ற முடியாது என்பது குறித்து பிரபல இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் தனது கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். அதில் அவர் பேசுகையில், "விஜய் சாருக்காக 16 பாடல்கள் கொண்ட சிறப்பு ஆல்பம் ஒன்றை உருவாக்க திட்டமிட்டிருந்தேன். அவருடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பை தவறவிட்டது பெரும் ஏமாற்றத்தையும் இழப்பையும் தருகிறது," எனத் தெரிவித்துள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய அவர், "முன்பு அவர் சினிமா ரசிகர்களுக்கு மட்டும் ஹீரோவாக இருந்தார்; ஆனால் இப்போது அவர் மக்கள் அனைவருக்கும் ஹீரோவாக இருக்கிறார். அவரின் இந்த புதிய பயணத்திற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளும் பிரார்த்தனைகளும்," என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

விபரங்களுக்கு
தள்ளிப்போகும்

தள்ளிப்போகும் "சிக்மா" திரைப்பட வெளியீடு: புதிய திகதி அறிவிப்பு

ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடிக்கும் திரைப்படம் ‘சிக்மா’. இந்த திரைப்படம் கடந்த ஜூலை 31-ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் 23-ஆம் திகதி வெளியானதால் ‘சிக்மா’ படத்தின் வெளியீடு தள்ளிப்போனது. தமிழ் - தெலுங்கு இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் இந்தப் படம் வெளியாகிறது. இதனால் ஆகஸ்ட் மாதம் ‘சிக்மா’ படத்தை வெளியிட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டு வந்த நிலையில் படத்தின் வெளியீடு மீண்டும் தள்ளிப்போனது. இந்தநிலையில் எதிர்வரும் ஒக்டோபர் 2 ஆம் திகதி ‘சிக்மா’ படம் வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. முதலமைச்சர் விஜய்யின் மகன் சிக்மா படத்தை இயக்கியிருப்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகம் உள்ளன.

விபரங்களுக்கு
Hiru TV News | Programmes
/////////////////////////////////////////////// Commented on 2025-09-17 ////////////////////////////////////////////////////