International15 August 2026

விஜய் தலைமையிலான சுதந்திர தின விழாவில் முதல் வரிசையில் வந்து அமர்ந்த நடிகை திரிஷா

இந்தியாவின் 80ஆவது சுதந்திர தினம் இன்று (15) நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.

சென்னை புனித ஜோர்ஜ் கோட்டைக் கொத்தளத்தில் நடைபெறும் சுதந்திர தின நிகழ்வுகளுக்கு தமிழக முதலமைச்சர் விஜய் தலைமை வகிக்கவுள்ளார்.

தமிழக முதலமைச்சராக விஜய் பதவியேற்ற பின்னர் நடைபெறும் முதல் சுதந்திர தினக் கொண்டாட்டம் என்பதால், அவர் இன்று முதன்முறையாக தேசியக் கொடியை ஏற்றவுள்ளார்.

இந்தநிலையில், இன்று காலை 8.45 மணிக்கு ஆரம்பமாகவுள்ள சுதந்திர தின நிகழ்வில் நடிகை திரிஷா உட்பட அவரது குடும்பத்தினர் கலந்துகொண்டுள்ளனர்.
Related recommendation
Hiru TV News | Programmes