General18 August 2026

சிறுபோக பருவ நெல் கொள்முதல்: சிறு, நடுத்தர நெல் ஆலைகள் நிதியுதவி பெற மாவட்ட செயலகத்தில் பதிவு செய்ய அறிவுறுத்தல்

2026 சிறுபோக பருவத்தில் விரைவுபடுத்தப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ், சிறு, நடுத்தர மற்றும் கூட்டுறவு நெல் ஆலை உரிமையாளர்கள் வட்டி இல்லா சலுகை நிதியுதவியைப் பெற மாவட்ட செயலகத்தில் பதிவு செய்ய வேண்டும் என நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

அதிகபட்சமாக 25 மெட்ரிக் டன் அரைக்கும் திறன் கொண்ட சிறு, நடுத்தர அளவிலான நெல் ஆலைகள் மற்றும் கூட்டுறவு நெல் ஆலைகள் இத்திட்டத்தின் கீழ் பயன் பெறத் தகுதியானவை ஆகும்.

தகுதிபெறும் ஆலைகளுக்கு அதிகபட்சமாக 25 மில்லியன் ரூபா வரையிலான வட்டி இல்லா சலுகை நிதியுதவி பெறமுடியும் என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes