Entertainment06 July 2026

'கணவரையே அதிகம் நேசியுங்கள்' : பெண் ரசிகைக்கு ஷாருக்கான் கூறிய அறிவுரை வைரல்!

பொலிவுட் நடிகர் ஷாருக்கான், மங்களூருவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், "என் கணவரைவிட உங்களைத்தான் அதிகம் நேசிக்கிறேன்" என்று கூறிய பெண் ரசிகைக்கு அளித்த பதில் சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்றுள்ளது.

அதற்குப் பதிலளித்த ஷாருக்கான், "நான் உங்கள் வாழ்க்கையில் எதையும் செய்யப்போவதில்லை. ஆனால் உங்கள் கணவர்தான் உங்களுடன் எல்லா தருணங்களிலும் இருப்பார். எனவே, என்னை ரசிப்பது போதும், உங்கள் கணவரையே அதிகமாக நேசியுங்கள்" என்று அறிவுரை வழங்கினார்.

அத்துடன், அந்தப் பெண்ணை அவரது கணவரிடம் அனைவரின் முன்னிலையிலும் "ஐ லவ் யூ" என்று சொல்லவும் ஷாருக்கான் ஊக்குவித்தார்.

ஷாருக்கானின் இந்த முதிர்ச்சியான பதில் மற்றும் குடும்ப உறவை மதிக்கும் வகையிலான அறிவுரை, சமூக வலைத்தளங்களில் பலரது பாராட்டைப் பெற்று வைரலாகி வருகிறது.
Related recommendation
Hiru TV News | Programmes