Sports02 July 2026

பொஸ்னியாவை வீழ்த்தி அமெரிக்கா அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்!

கால்பந்து செம்பியன்ஸ் தொடரின் 32 ஆவது சுற்றின், 83 ஆவது போட்டியில் பொஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா அணிக்கு எதிரான போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் அமெரிக்கா அபார வெற்றி பெற்று, அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது.

கலிபோர்னியாவின் சான் பிரான்சிஸ்கோ பே ஏரியா மைதானத்தில் நடைபெற்ற இந்த விறுவிறுப்பான ஆட்டத்தின் முதல் பாதியின் 45 ஆவது நிமிடம் அமெரிக்க அணியின் ஃபொலாரின் பாலோகுன் (Folarin Balogun) முதல் கோலை அடித்து அணியை முன்னிலைப்படுத்தினார்.

தொடர்ந்து நடைபெற்ற இரண்டாம் பாதியின் 64 ஆவது நிமிடத்தில் முதல் கோல் அடித்த பாலோகுன் சிவப்பு அட்டை பெற்று மைதானத்தை விட்டு வெளியேறினார்.

இதனால் அமெரிக்க அணி 10 வீரர்களுடன் விளையாட வேண்டிய இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டது.

இருப்பினும், ஆட்டத்தின் 82 ஆவது நிமிடத்தில் அமெரிக்க அணியின் மாலிக் டில்மேன் (Malik Tillman) ஒரு அற்புதமான ஃப்ரீ-கிக் மூலம் அணியின் இரண்டாவது கோலை அடித்து வெற்றியை உறுதி செய்தார்.

ஆட்ட நேர முடிவில் பொஸ்னியா அணியால் எந்தவொரு கோலையும் அடிக்க முடியாமல் போனதால் அமெரிக்கா 2-0 என வெற்றி பெற்றது.
Related recommendation
Hiru TV News | Programmes