மைக்கல் ஜெக்சனின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமான 'மைக்கல்', உலகளவில் 977 மில்லியன் டொலர்களை வசூலித்து, வரலாற்றிலேயே மிக அதிக வசூல் செய்த Biopic திரைப்படமாக சாதனை படைத்துள்ளது.
இதன் மூலம், பிரபல இயக்குநர் கிறிஸ்டோபர் நோலனின் 'ஓப்பன்ஹைமர்' திரைப்படத்தின் சாதனையை இது முறியடித்துள்ளது.
'பொஹிமியன் ரெப்சோடி' திரைப்படத்தை முறியடித்து ஏற்கனவே அதிக வசூல் செய்த இசைப் படமாக மாறியிருந்த 'மைக்கல்', தற்போது ஒட்டுமொத்த பயோபிக் வரிசையிலும் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
அத்துடன் இது லயன்ஸ் கேட் (Lionsgate) நிறுவனத்தின் மிக வெற்றிகரமான திரைப்படமாகும்.
அந்துவான் ஃபுகுவா இயக்கத்தில் உருவான இந்த திரைப்படத்தில், மைக்கல் ஜெக்சனின் சொந்த மருமகனான ஜாபர் ஜெக்சன் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்து பாராட்டைப் பெற்றுள்ளார்.
ரசிகர்கள் மத்தியில் திரைப்படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ள போதிலும், மைக்கல் ஜெக்சன் மீதான குற்றச்சாட்டுகளைப் பேச மறுத்து, உண்மைகளை மறைத்த சுத்திகரிக்கப்பட்ட கதையாக இது உள்ளதாக விமர்சகர்கள் கடுமையான விமர்சனங்களையும் முன்வைத்துள்ளனர்.
இந்த திரைப்படம் வெளியானதைத் தொடர்ந்து, உலகளவில் ஸ்பாட்டிஃபை மற்றும் யூடியூப் தளங்களில் மைக்கல் ஜெக்சனின் பாடல்களைக் கேட்போரின் எண்ணிக்கை அதிரடியாக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Latest News
முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட கைது
Local
03 July 2026
அல்ஜீரியாவை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி 16 அணிகளுக்கான சுற்றுக்கு முன்னேறியது சுவிட்சர்லாந்து!
Local
03 July 2026
யோஷித ராஜபக்ச தாக்கல் செய்த மறு சீராய்வு மனு தள்ளுபடி
Local
03 July 2026
தென்னாப்பிரிக்க மகளிர் அணியை வீழ்த்தி இங்கிலாந்து மகளிர் அணி அபார வெற்றி
Local
03 July 2026
வெனிசுவேலா நிலநடுக்கம்: 8 நாட்களாக இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்தவர் உயிருடன் மீட்பு!
Local
03 July 2026
18 வயதுக்குட்பட்ட ஆடவருக்கான அஞ்சலோட்டப் போட்டியில் வலல்ல ஏ. ரத்நாயக்க மத்திய கல்லூரி முதலிடம்
Local
03 July 2026
18 வயதுக்குட்பட்ட மகளிருக்கான அஞ்சலோட்ட போட்டியில் வலல்ல ஏ. ரத்நாயக்க மத்திய கல்லூரி முதலிடம்
Local
03 July 2026
Hiru Relay Championship 2026 அஞ்சல் ஓட்டப் போட்டித் தொடரின் இறுதி நாள் இன்று
Local
03 July 2026
நாட்டில் தீவிரமடையும் டெங்கு பரவல்: 124 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகள் அதிக அபாயத்தில்!
Local
03 July 2026
16 அணிகளுக்கிடையிலான சுற்றுப் போட்டிக்கு போர்த்துக்கல் அணி தெரிவு
Local
03 July 2026