சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஒருநாள் துடுப்பாட்ட வீரர்களுக்கான புதிய தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இதில் இந்திய அணியின் இளம் வீரர் சுப்மன் கில் வெறும் ஒரே ஒரு புள்ளியால் முதலிடத்தை தவறவிட்டுள்ளார்.
புதிய தரவரிசையின்படி, நியூசிலாந்து அணியின் நட்சத்திர வீரர் டேரல் மிட்செல் 802 புள்ளிகளுடன் முதலிடத்தைத் தக்கவைத்துள்ளார். அவரை விட ஒரே ஒரு புள்ளி குறைவாக, அதாவது 801 புள்ளிகளைப் பெற்றுள்ள சுப்மன் கில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, இந்திய அணியின் முன்னணி வீரர்களான விராட் கோலி (767 புள்ளிகள்) மற்றும் ரோஹித் சர்மா (758 புள்ளிகள்) முறையே மூன்று மற்றும் நான்காம் இடங்களிலும், ஆப்கானிஸ்தானின் இப்ராஹிம் ஸத்ரான் (712 புள்ளிகள்) ஐந்தாம் இடத்திலும் நீடிக்கின்றனர்.
பாகிஸ்தான் அணியின் பாபர் அசாம் மற்றும் அயர்லாந்து வீரர் ஹாரி டெக்டர் ஆகியோர் தலா ஒரு இடம் முன்னேற்றம் கண்டுள்ளனர். அவர்கள் முறையே 6 மற்றும் 7 ஆம் இடங்களை பிடித்துள்ளனர்.
இங்கிலாந்து அணியின் அனுபவ வீரரான ஜோ ரூட் அபாரமான நகர்வை வெளிப்படுத்தி 4 இடங்கள் முன்னேறி, முதல் 10 இடங்களுக்குள் மீண்டும் நுழைந்துள்ளார். அவர் இந்த பட்டியலில் 8 ஆவது இடத்தை பிடித்துள்ளார்.
இந்தப் பட்டியலில் இலங்கை அணியின் சார்பில் பிரதானமாக இடம்பெற்றுள்ள சரித் அசலங்க, 659 புள்ளிகளுடன் ஒரு இடம் பின்னுக்குத் தள்ளப்பட்டு தற்போது 10ஆவது இடத்தைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Latest News
இலங்கையின் நகர்ப்புறப் போக்குவரத்துச் சேவையை நவீனமயமாக்கத் திட்டம் : 2029 க்குள் 500 மெட்ரோ பேருந்துகள்
Local
23 July 2026
காவல்துறை அதிகாரிகள் போன்று ஆள்மாறாட்டம் செய்து சமூக வலைத்தளங்கள் ஊடாக நடத்தும் நிதி மோசடிகள் குறித்து எச்சரிக்கை!
Local
23 July 2026
வளைகுடா நாடுகளில் உள்ள CIA தளங்கள் மீது ஈரான் தாக்குதல்: ரஷ்யாவின் பங்கு குறித்து அமெரிக்க உளவுத்துறை விசாரணை! - ரொய்ட்டர்ஸ்
Local
23 July 2026
எந்த தவறும் செய்யாமலேயே காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டேன் - பொலிவுட் நடிகை குற்றச்சாட்டு!
Local
23 July 2026
ஒரு புள்ளியால் முதலிடத்தைத் தவறவிட்ட சுப்மன் கில்: இலங்கை வீரருக்கும் பின்னடைவு
Local
23 July 2026
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்ததாக 9 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது!
Local
23 July 2026
நச்சு மதுப்பழக்கம் மூளையின் இயற்கையான ஊக்கமளிக்கும் அமைப்பைச் சிதைக்கும் - மருத்துவர் எச்சரிக்கை!
Local
23 July 2026
பெருந்தோட்ட நிறுவனங்களின் நிதி வைப்புச் சேகரிப்பு சட்டவிரோதமானது: மத்திய வங்கி ஆளுநர் எச்சரிக்கை!
Local
23 July 2026
அமெரிக்கா - சவூதி அரேபியா இடையே பாதுகாப்பான அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது!.
Local
23 July 2026
போர் பிராந்திய முழுவதும் பரவும் அல்லது அனைத்து நாடுகளும் சிக்கிக் கொள்ளும்: ஈரான் எச்சரிக்கை!
Local
23 July 2026