கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மூடப்பட்டுள்ள முன்பள்ளி பாடசாலைகள் மற்றும் பாடசாலைகளின் ஆரம்ப பிரிவு என்பவற்றை திறப்பது தொடர்பில் இரண்டு வாரங்களில் தீர்மானிக்கப்படும் என கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனை குறிப்பிட்டார்.
அத்துடன் மேலதிக வகுப்புக்களை ஆரம்பிக்கும் திகதி தொடர்பில் எதிர்வரும் நாட்களில் அறிவிக்கப்படும்.
தற்போது பாடசாலைகளில் மாணவர்களின் வருகை அதிகரித்துள்ளமை அவதானிக்க முடிகின்றது.
நாட்டின் பொருத்தமான மாகாணங்களில் சுகாதார வழிமுறைகளுக்கமைய முன்பள்ளி பாடசாலைகளை மீள திறப்பது தொடர்பில் செயற்திட்டம் விரைவில் ஆரம்பிக்கப்படும்.
இந்தமாத இறுதிக்குள் முன்பள்ளி பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பான தினத்தை அறிவிப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.
அத்துடன் பாடசாலைகளின் ஆரம்ப பிரிவுகளை மீள ஆரம்பிப்பதற்கும் அவசியம் ஏற்பட்டுள்ளது.
தரம் ஒன்று முதல் 5 வரையில் வகுப்புக்களை மீள ஆரம்பிப்பது தொடர்பில் எதிர்வரும் 2 வாரங்களில் அறிவிக்கப்படும் எனவும் கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும் பாடசாலைகளுக்கு மாணவர்களின் வருகை தொடர்ந்தும் குறைவடைந்து காணப்படுவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குறிப்பிட்டார்.
இதேவேளை கண்டி மாவட்டத்தில் மூடப்பட்டிருந்த 45 பாடசாலைகளில் இன்று 42 பாடசாலைகளின் கற்றல் செயற்பாடுகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டிருந்த நிலையில் எஞ்சிய 3 பாடசாலைகளிலும் கற்றல் நடவடிக்கைகள் இன்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
எனினும் குறித்த பாடசாலைகளில் மாணவர்களின் வருகை குறைவாக காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பாடசாலைகளில் மாணவர்களின் வருகை 16 சதவீதமாக காணப்பட்டதாக கண்டி கல்வி வலயத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.

Latest News
உணவுத்தவிர்ப்பு போராட்டத்தை விலக்கிக்கொண்டார் சோனம் வாங்சுக்
Local
24 July 2026
அமெரிக்கா பெரும் விலையை கொடுக்க வேண்டி வரும் : எச்சரிக்கும் ஈரான்
Local
24 July 2026
கால்பந்தாட்டப்போட்டியில் புதுமை: பரிசாக வழங்கப்படும் ஆடுகள்!
Local
24 July 2026
கொழும்பு போர்ட் சிட்டியில் சீனக் குழுக்கள் மோதல்: வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்; இருவர் கைது!
Local
24 July 2026
5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.
Local
23 July 2026
வத்தளையில் துப்பாக்கி சூடு: திருகோணமலையில் விபத்து: இருவர் பலி
Local
23 July 2026
சச்சினின் சாதனையை முறியடித்து சர்வதேச சாதனையை படைத்த வைபவ்
Local
23 July 2026
மத்திய கிழக்கில் அதிகரிக்கும் பதற்றம் - 100 டொலரைக் கடந்தது மசகு எண்ணெய் விலை
Local
23 July 2026
நாட்டில் எலிக் காய்ச்சல் பரவும் அபாயம் - பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு எச்சரிக்கை!
Local
23 July 2026
தெமட்டகொடையில் துப்பாக்கிச் சூடு !- ஒருவர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதி
Local
23 July 2026