General29 April 2026

ஹட்டனில் பேருந்து விபத்தில் காயமுற்ற 23 பேரில் ஒருவர் உயிரிழப்பு!

ஹட்டன் - டிக்கோயா பிரதான வீதியின் பட்டல்கல பகுதியில் இன்று (29) பிற்பகல் இடம்பெற்ற பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

விபத்தில் காயமடைந்த 22 பேர் டிக்கோயா கிளங்கன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

டயகமவில் இருந்து போடைஸ் வழியாக ஹட்டன் நோக்கிப் பயணித்த தனியார் பயணிகள் பேருந்து ஒன்றே, பிற்பகல் 3 மணியளவில் டிக்கோயா, பட்டல்கல பகுதியில் வைத்து எதிரே வந்த வாகனத்திற்கு இடமளிக்க முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்து சுமார் 25 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது.

காயமடைந்தவர்களில் பாடசாலை மாணவர்கள், பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் ஆகியோரும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

விபத்து இடம்பெற்ற வேளையில் பேருந்தில் சுமார் 35 பயணிகள் பயணித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக ஹட்டன் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Related recommendation
Hiru TV News | Programmes