ஈரானின் கடற்படை, வான் படை மற்றும் வான் பாதுகாப்பு கட்டமைப்புகளை அமெரிக்கா முற்றாக அழித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஓவல் அலுவலகத்தில் (Oval Office) செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஈரானின் தற்போதைய இராணுவ நிலைப்பாடுகள் குறித்து விளக்கமளித்தார்.
இதன்போது "ஈரானிடம் தற்போது மிகக் குறைந்த அளவிலான இராணுவ பலமே எஞ்சியுள்ளது. அவர்களிடம் மிகச்சிறிய அளவிலான ஏவுகணைகளே உள்ளன" என்று ஜனாதிபதி குறிப்பிட்டார்.
அத்துடன் ஈரானின் ஏவுகணை உற்பத்தி நிலையங்களில் சுமார் 80 சதவீதமானவை அழிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் ஈரான் ஒருபோதும் அணு ஆயுதங்களை வைத்திருக்க முடியாது என்பதை ட்ரம்ப் மீண்டும் வலியுறுத்தினார்.
"அவர்களுக்கு அது தெரியும், அதேபோல் மற்ற அனைவருக்கும் அது தெரியும்" என்று அவர் கூறினார்.
ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைகள் ஈரானின் வலிமையைக் கணிசமாகக் குறைத்துள்ளதாக ட்ரம்ப் இதன்போது சுட்டிக்காட்டினார்.
Latest News
இக்கட்டான நிலையில் மும்பை - Play Off செல்ல வாய்ப்புள்ளதா?
Local
30 April 2026
ஈரானுக்கும் இந்தியாவுக்கும் இடையில் முக்கிய பேச்சுவார்த்தை
Local
30 April 2026
ஈரானின் போர் குறித்த தீர்மானங்கள் தொடர்பில் வெளியான புதிய தகவல்
Local
30 April 2026
வானூர்தி நிலையத்தில் அவமதிப்பு? FIFA மாநாட்டைப் புறக்கணித்த ஈரான்
Local
30 April 2026
ஈரானின் 80% ஏவுகணை நிலையங்கள் அழிப்பு: ட்ரம்ப் வெளியிட்ட அதிரடித் தகவல்!
Local
30 April 2026
ஹைதராபாத் அதிரடி - மும்பைக்கு அதிர்ச்சித் தோல்வி!
Local
30 April 2026
தங்கம் வாங்குவோருக்கு மகிழ்ச்சியான செய்தி
Local
30 April 2026
புடின் - ட்ரம்ப் இடையே திடீர் கலந்துரையாடல்
Local
29 April 2026
கட்சிப் பொறுப்புகளை துறந்தார் எரான்!
Local
29 April 2026
மராட்டியத்தில் தகிக்கும் வெயில்: வெப்பத்தாக்கத்திற்கு 109 பேர் உயிரிழப்பு - 3 இலட்சம் பேர் சிகிச்சை!
Local
29 April 2026