General30 April 2026

வானூர்தி நிலையத்தில் அவமதிப்பு? FIFA மாநாட்டைப் புறக்கணித்த ஈரான்

கனடாவின் டொரொண்டோ வானூர்தி நிலைய குடிவரவு அதிகாரிகளின் "முறையற்ற நடத்தை" காரணமாக, கனடாவில் நடைபெறவுள்ள FIFA மாநாட்டில் ஈரானிய கால்பந்து கூட்டமைப்பு அதிகாரிகள் கலந்துகொள்ளப் போவதில்லை என ஈரானின் தஸ்னிம் (Tasnim) செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இன்று நடைபெறவுள்ள மாநாட்டில் பங்கேற்பதற்காக முறையான விசாக்களுடன் வருகை தந்த மூன்று அதிகாரிகள், வானூர்தி நிலையத்தில் ஏற்பட்ட கசப்பான அனுபவத்தைத் தொடர்ந்து அடுத்த வானூர்தியிலேயே நாடு திரும்பியுள்ளனர்.

ஈரானிய கால்பந்து கூட்டமைப்பின் தலைவர் மற்றும் துணை பொதுச்செயலாளர் ஆகியோர் டொரொண்டோ வானூர்தி நிலையத்தில் குடிவரவு அதிகாரிகளால் அவமதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

ஈரானிய ஆயுதப் படைகளின் கௌரவமிக்க அங்கங்களில் ஒன்றிற்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் அதிகாரிகளின் செயல்பாடு அமைந்ததால், அவர்கள் உடனடியாக துருக்கி வழியாகத் தாயகம் திரும்பியதாகப் பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

2026 ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ணக் கால்பந்து போட்டிகளை அமெரிக்கா மற்றும் மெக்சிகோவுடன் இணைந்து கனடா நடத்தும் நிலையில், இந்த வாரம் வான்கூவர் (Vancouver) நகரில் பிபா மாநாடு நடைபெறத் திட்டமிடப்பட்டிருந்தது.

வானூர்தி நிலைய அதிகாரிகளின் இந்த அணுகுமுறையினால் சர்வதேச விளையாட்டு அரங்கில் இராஜதந்திர ரீதியான சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
 
Related recommendation
Hiru TV News | Programmes