General30 April 2026

பனையூரில் குவியும் வேட்பாளர்கள் : தேர்தல் முடிவுக்கு முன்பே விஜய் நடத்தும் அதிரடி ஆலோசனை!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எதிர்வரும் 4ஆம் திகதி வெளியாக உள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று தனது கட்சி வேட்பாளர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார்.

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 23 ஆம் திகதி நடைபெற்றது.

இதில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) முதன்முறையாகக் களம் கண்டது.

எடப்பாடி தொகுதி வேட்புமனு நிராகரிக்கப்பட்டதைத் தவிர்த்து, மீதமுள்ள 233 தொகுதிகளிலும் அந்தக்கட்சி வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

இந்த நிலையில், சென்னை பனையூரில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் இன்று பிற்பகல் 1 மணிக்கு ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.

தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் மட்டுமே இந்தக் கூட்டத்தில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதையும் பார்க்கவும்..

Related recommendation
Hiru TV News | Programmes