வெலிமடை பகுதியில் உள்ள சிறுவர் நன்னடத்தை மையம் ஒன்றில் தங்கியிருந்த சிறுவர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டு, 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
வெலிமடை காவல்துறையினர் இதனை எமது சூரியன் செய்தி பிரிவுக்கு உறுதிப்படுத்தினர்.
வெலிமடை பகுதியில் அமைந்துள்ள சிறுவர் நன்னடத்தை மையம் ஒன்றில் தங்கியிருந்த சிறுவர்கள் மீது, அங்கிருந்த ஊழியர்கள், தடிகளால் கொடூரமாகத் தாக்கியுள்ளனர்.
பின்னர், 119 அவசர இலக்கத்திற்கு கிடைத்த முறைப்பாட்டினையடுத்து காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
அதற்கமைய, 12 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களே தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்த நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பில் ஐந்து சந்தேகநபர்களை வெலிமடை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் வெலிமடை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து, அவர்களை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன், பாதிக்கப்பட்ட சிறுவர்களின் பாதுகாப்பு மற்றும் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் தீவிரமாக முன்னெடுத்து வருவதாக சூரியன் செய்தி பிரிவுக்கு தெரிவித்தனர்.
Latest News
18 அடையாள அட்டைகள், 6 வங்கி அட்டைகளுடன் பிடிப்பட்ட பெண் - பின்னணி என்ன?
Local
01 May 2026
புள்ளிப்பட்டியலில் முன்னேறப் போராடும் டெல்லி... சொந்த மண்ணில் மிரட்ட காத்திருக்கும் ராஜஸ்தான்
Local
01 May 2026
செம்மணியில் தொடரும் அகழ்வுப்பணிகள் - வெளிப்பட்ட 3 என்புக்கூடு எச்சங்கள்
Local
01 May 2026
அணில் அட்டகாசம்: பல்கலைக்கழகத்தில் 20 பேரை கடித்த ஒற்றை அணில் - பீதியில் மாணவர்கள்!
Local
01 May 2026
அதிமுகவுடன் இணைகிறதா விஜய்யின் தவெக - கருத்துக்கணிப்பால் மாறும் அரசியல் களம்?
Local
01 May 2026
முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசவின் 33வது நினைவு தினம் அனுஷ்டிப்பு
Local
01 May 2026
மின்னல் தாக்கம் தொடர்பில் வெளியான எச்சரிக்கை
Local
01 May 2026
ஐக்கிய அரபு இராச்சியம் முதல் அமெரிக்கா வரை இந்த மாம்பழத்துக்கு இவ்வளவு மவுசா?
Local
01 May 2026
ஈரானுடன் மீண்டும் போர்: இஸ்ரேலில் வலுக்கும் கோரிக்கை - இராணுவத் தளமாக மாறும் நாடு!
Local
01 May 2026
ஈரானில் மீண்டும் ஆரம்பமான வானூர்தி சேவைகள்: 58 நாட்களுக்குப் பிறகு இமாம் கொமெய்னி வானூர்தி நிலையம் திறப்பு!
Local
01 May 2026