General01 May 2026

சிறை செல்லவுள்ள முக்கிய புள்ளிகள் - ஜனாதிபதி அதிரடி

இந்த வருடத்திற்குள் அதிகளவானவர்கள் சிறைக்கூடம் செல்வார்கள் என்பது உறுதி என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

நுவரெலியாவில் இன்று இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் மேதின கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

எந்தவொரு தராதரமும் பாராமல் சட்டம் அனைவருக்கும் சமம் என்ற அடிப்படையில் நடைமுறைப்படுத்துவோம்.1000 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

வழக்கு விசாரணைகளுக்கு அமைய விரைவாக ஊழல்வாதிகளும் குற்றங்களில் ஈடுபட்டவர்களும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுகின்றனர்.சிறைக்கு சென்றவண்ணமுள்ளனர். இதன் காரணமாகவே சில தரப்பினர் அஞ்சுகின்றனர்.

அனைத்து குற்றவாளிகளையும் சட்டத்தின் முன் நிறுத்துவதற்கான மக்கள் ஆணையை நீங்கள் வழங்கியுள்ளீர்கள். அந்த ஆணையை நிறைவேற்றுவதற்காகவே நாம் செயற்படுகின்றோம்.

மக்களும், அரசாங்கமும் ஒன்றுடன் ஒன்று இணைந்து பயணிக்கும் அரசாங்கமாக இது அமைந்துள்ளதால், மக்களது எதிர்பார்ப்பு மற்றும் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தும் வகையில் தமது சேவை அமையும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes