தமிழக வெற்றி கழக (தவெக) அரசாங்கத்தின் முதல் அமைச்சரவை கூட்டம் நாளை (05) காலை 11 மணிக்கு முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய அரசாங்கத்தின் நிர்வாக நடவடிக்கைகள் தொடர்பான முக்கிய தீர்மானங்கள் இந்தக் கூட்டத்தில் ஆராயப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக, தேர்தல் காலத்தில் வழங்கப்பட்ட முக்கிய வாக்குறுதிகளை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள், மாநிலத்தின் சட்டம் மற்றும் ஒழுங்கு நிலைமை, புதிய முதலீடுகளுக்கு அனுமதி வழங்கும் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
அத்துடன், அரசாங்கத்தின் ஆரம்பகட்ட செயற்பாட்டு திட்டங்கள் மற்றும் முன்னுரிமை வழங்கப்பட வேண்டிய அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பிலும் அமைச்சரவை உறுப்பினர்களின் கருத்துகள் பெறப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
புதிய அரசாங்கத்தின் முதல் அமைச்சரவை கூட்டம் என்பதால், இதில் எடுக்கப்படும் தீர்மானங்கள் அரசின் எதிர்கால கொள்கை மற்றும் செயற்பாடுகளுக்கான அடித்தளமாக அமையும் என அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
Latest News
மட்டக்குளியில் ஒரு கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான ஐஸ், ஹெரோயினுடன் ஒருவர் கைது
Local
04 June 2026
இலங்கையில் ஐந்து சிறுவர்களில் ஒருவர் ஊட்டச்சத்துக் குறைபாட்டினால் பாதிப்பு
Local
04 June 2026
இலங்கையில் இன்று சரிந்தது தங்கத்தின் விலை! நகை பிரியர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்!
Local
04 June 2026
இந்தியாவின் பணக்கார முதல்வர்கள் பட்டியல் வெளியீடு : தமிழக முதலமைச்சர் விஜய் மூன்றாமிடத்தில்!
Local
04 June 2026
அரச அதிகாரிகளின் எரிபொருள் கொடுப்பனவைத் திருத்துமாறு நிதி அமைச்சிடம் கோரிக்கை
Local
04 June 2026
முடிவுக்கு வருகிறதா சூர்யகுமார் யாதவின் தலைமைத்துவக் காலம்?
Local
04 June 2026
பிகார் மாநிலத்திற்கு கிடைத்த சரியான அங்கீகாரம் வைபவ் சூர்யவன்ஷி - விளையாட்டு ஊடகவியலாளரின் காணொளி வைரல்
Local
04 June 2026
சூரியனில் சக்திவாய்ந்த வெடிப்பு பதிவு : தொடர்பு மற்றும் GPS சேவைகளுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம்!
Local
04 June 2026
முச்சக்கரவண்டி மீது மரம் முறிந்து வீழ்ந்ததில் பாடசாலை மாணவர் உட்பட மூவர் உயிரிழப்பு
Local
04 June 2026
தமிழக வெற்றி கழகத்தின் முதல் அமைச்சரவை கூட்டம் நாளை!
Local
04 June 2026