International05 June 2026

"இராணுவமா அல்லது காகிதமா?" டொனால்ட் டிரம்ப் வௌியிட்ட உலகப் பேரழிவு எச்சரிக்கை!

ஈரானுடனான பேச்சுவார்த்தைகளின் தற்போதைய நிலை குறித்த புதிய விபரங்கள் எதனையும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வெளியிடவில்லை.

ஈரானுடனான பேச்சுவார்த்தைகள் எவ்வாறு முன்னெடுத்துச் செல்லப்படுகின்றன என்பது குறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் புதிதாக எந்த பதிலையும் வழங்கவில்லை என்று சர்வதேச செய்தி ஒன்று கூறுகிறது.

இருப்பினும், தற்போது பேச்சுவார்த்தையின்; முக்கிய அம்சங்களாக, ஈரான் அணு ஆயுதங்களை வைத்திருக்கக் கூடாது என்பதும், ஹோர்முஸ் நீரிணை உடனடியாக மீண்டும் திறக்கப்பட வேண்டும் என்பதுமே அமைகின்றன என்பதை அமெரிக்க ஜனாதிபதி மீண்டும் வலியுறுத்தினார்.

"நாங்கள் ஏதோ ஒரு வழியில் வெற்றி பெறுவோம். அது இராணுவ ரீதியாகவோ அல்லது காகித வடிவிலான உடன்படிக்கை மூலமாகவோ அமையும்" என ட்ரம்ப் தெரிவித்தார்.
Related recommendation
Hiru TV News | Programmes